ரத்த சோகை - பரிகாரங்கள்
இரத்தசோகை என்பதை ஆங்கிலத்தில்
Anemia என்பார்கள். ரத்தத்தின் அதிபதி செவ்வாய். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாயின் நிலையை வைத்து அவருக்கு ரத்த சோகை தொடர்பான நோய் ஏற்படுமா அல்லது இல்லையா என்பதை கணித்து விட முடியும்.
செவ்வாய் குரு சேர்க்கை, கடகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை, சனி சந்திரன் சேர்க்கை, கடகத்தில் சனி இருப்பது, ஒருவருடைய ஜாதகத்தில் எந்த விதத்திலாவது புணர்ப்பு தோஷம் பெருவது, சூரியன் சனி சேர்க்கை போன்றவை ரத்த சோகை நோயை ஏற்படுத்தும் என்கிறது ஜோதிடம்.
செவ்வாய் ரத்தத்திலுள்ள ஹீமோக்ளோபின் எனப்படும் இரும்புசத்தின் காரகனாய் இருப்பதால், தம்பரத்தை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் ஒரு சிறந்த செவ்வாய் பரிகார ஸ்தலமாகும். செவ்வாய் கிழமைகளில் இந்த திருத்தலத்திற்க்கு சென்று வணங்குவது சிறந்த பரிகாரமாகும். மேலும் ரத்தத்தில் குறைபாடு உள்ளவர்கள் செவ்வாய் எனும் அங்காரகனின் அதிதேவதையான முருகப்பெருமானின் வாகனமான கோழி மற்றும் சேவல் இறைச்சி சாப்பிடுவதை அறவே நிறுத்திவிட வேண்டும். மாதவிடாய் பிரச்சனை மட்டுமின்றி, ரத்த சோகை, கருப்பை பிரச்சனை உள்ளவர்களும் இதே பரிகாரம் செய்யலாம்.
முருங்கை கீரை, புளிச்ச கீரை, பேரிச்சம்பழம், கறிவேப்பிலை பொடி போன்றவை இரும்பு சத்து மிகுந்த உணவு வகைகளை உண்ணலாம். இரும்புச்சத்து மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் ஞாபகசக்தித் திறன் அதிகரிக்கும். சோர்வு நீங்கும். இரத்த ஓட்டம் சீராகும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் சீராகும். மேலும் இரும்புச்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தவிர்க்கப்படும்.
Similar Posts :
ரத்த சோகை பரிகாரங்கள், See Also:
ரத்த சோகை பரிகாரங்கள்