பையோ ரிதம் (Biorhythm) என்பது நம் உடல் (physical), உணர்ச்சி (emotional) மற்றும் மன சுழற்சிகள் (mental) மூலம் நம் வாழ்வில் எவ்வாறான பாதிப்பை உண்டாக்குகிறது என்பதை வரைபடங்களின் வாயிலாக விளக்கும் ஒரு முறை ஆகும்.
இந்தச் சுழற்சிகளின் உயரங்களையும் தாழ்வுகளையும் கண்காணித்து அதற்கேற்ப செயல்படுவதன் மூலம் நம் தரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதே பையோ ரிதமின் (Biorhythm) கோட்பாடு. நம் உள்ளே இருக்கும் உயிரியல் கடிகாரம் (Bio Clock) நம்மை கட்டுப்படுத்தப்படுகின்றது என்பது பொதுவான நம்பிக்கை. அவ்வாறு நம்புபவர்கள் பையோ ரிதம் உதவியை நாடுவர். பையோ ரிதம் உலகின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.