பூரட்டாதி நட்சத்திரத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் மூன்று பாதங்கள் சிறிதளவே தோஷமுள்ளது. நான்காவது பாதத்தில் முதல் எட்டு நாழிகைக்குள் பிறந்திருந்தால் சிசுவின் தாய்க்கு கண்டம். ஏற்படலாம் அதுவும் முதல் குழந்தை எனின் தோஷம் அதிகம்.
பரிகாரம்: பொன் தானம் கொடுக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் செல்வத்தில் சிறந்தோங்க, லஷ்மி குபேர பூஜையை மேற்கொள்ள வேண்டும். திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள குபேரலிங்கத்தையும் சீர்காழி அருகிலுள்ள ஸ்ரீலஷ்மி புரீஸ்வரரையும் வழிபடுவது சாலச் சிறந்தது.
பூரட்டாதி 1, 2, 3-ம் பாதங்கள்: கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள பேரூரில் அருள்புரியும் ஸ்ரீமரகதவல்லி உடனுறை ஸ்ரீபட்டீஸ்வரரையும் ஸ்ரீநடராஜப் பெருமானையும் சென்று வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
பூரட்டாதி 4-ம் பாதம்: பழநியில் அருள்பாலிக்கும் ஸ்ரீதண்டாயுத பாணியை வணங்கினால் பலன் உண்டு.
பூரட்டாதி நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் கீழே தரப்பட்டுள்ளது. இந்தப் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி, சிவபெருமானை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.
முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின்
நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த
வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித்
தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்
கூத்தன் குரை கழலே.
இது போல, ஜாதகருக்கு உண்டான இன்னும் பிற தோஷங்கள் மற்றும் அதற்கு உண்டான பரிகாரங்களையும் நம் sithars astrology மென் பொருளின் உதவியுடன் தெரிந்துக் கொண்டு பயனடையலாம்.
Similar Posts : கேட்டை நட்சத்திர பரிகாரம், கிருத்திகை நட்சத்திர பலன்கள், அஸ்வினி நட்சத்திர பலன்கள், விருட்ச சாஸ்திரம், 27 நட்சத்திரங்கள், மாமனாருக்கு கண்டம் தரும் ஜாதகம், See Also:பூரட்டாதி நட்சத்திரம்