SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
ஸ்ரீதேவி ஜாதகம் ஆய்வு
  • 2019-10-06 00:00:00
  • 1

ஸ்ரீதேவி ஜாதகம் ஆய்வு

நடிகை ஸ்ரீதேவி பிறப்பு ஜாதகம் ஆய்வு

 
இந்திய சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் ஸ்ரீதேவி, தமிழ்நாட்டில் உள்ள சிவகாசியில் பிறந்து, இந்திய சினிமா வரலாற்றில் முத்திரை பதித்த பிரபலமான நடிகை. தமிழ், ஹிந்தி, மலயாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர். குழந்தை நடிகையாக தனது பயணத்தை தொடங்கி, பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக அனைவரையும் கவர்ந்தவர். தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகைகளில் இவரும் ஒருவர்.  பல பட்டங்களையும்  பதக்கங்களையும் வென்றவர். தன்னுடடைய துறையை சேர்ந்த போனி கபூர் என்பவரை திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தவர். குடும்ப வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்தவர். இவர் பிப்ரவரி 24, 2018 ல் மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவருடைய மரணம் எதிர் பாராத ஒன்று.
 
குரு (வ)
மா
 
                   
 
 
சந்திரன்
ராகு
 
ராசி
ல
சூரியன்
சுக்கிரன்
சனி(வ)
புதன்
கேது
 
 
செவ்வாய்
 
 
 
 
 
ராகு
 
செவ்வாய்
 
சூரியன்
சந்திரன்
குரு(வ)
நவாம்சம்
 
 
சுக்கிரன்
சனி (வ)
மாந்தி
 

ல
கேது
புதன்
 
 

ஸ்ரீதேவி பிறந்த விவரங்கள்

தேதி : ஆகஸ்ட் 13, 1963
நேரம் : 17:30 (5:30 PM)
உள்ளூர் நேரம் (UTC +4.50)
இடம் : சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா.
 
ஸ்ரீதேவி. ரிஷப இராசி, கடக லக்கினம், கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்.
 

ஸ்ரீதேவி பிறந்த நாள் பலன்

ஸ்ரீதேவி செவ்வாய் கிழமை, சூரிய உதயத்திற்கு முன்னர் பிறந்ததால், ஜோதிட முறைப்படி திங்கள் கிழமை பிறந்ததாக கருத வேண்டும். திங்கட்கிழமை பிறந்தவர்கள் மென்மையான பேச்சையும், பரிமாற்றத்தையும் விரும்புபவராக இருப்பர். மற்றவர்கள் மூர்க்கத்தனமாக செயல்பட்டாலும் அவர்கள் சமநிலை தவறாமல் இருப்பர். அனுகூலமில்லாத சந்தர்ப்பங்களில் கூட சாந்தமாக இருக்கவே தேர்ந்தெடுப்பர். சிந்தனையிலும், செயலிலும் இருதய சுத்தத்தோடு செயல்படும் நபர் திங்கட்கிழமையில் பிறந்தவர்கள், நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள், அழகிய தோற்றமுள்ளவர்கள். அளவாக பேசுவார்கள், தயாள குணமுள்ளவர்கள் என்பது பொது கருத்து.

ஸ்ரீதேவி ஆடி மாதத்தில் பிறந்தவர்
ஆடி மாத்த்தில் பிறந்தவர்கள் ஒழுக்க சீலராகவும், தயாள குணமுள்ளவராகவும், எதற்கெடுத்தாலும் வெட்கப்படும் சுபாவம் கொண்டவராகவும், பிறர் விஷயங்களில் அதிக அக்கறை காட்ட்டுபவராகவும் இருப்பார். 

ஸ்ரீதேவி உத்தராயனத்தில் பிறந்தவர்
தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உத்தராயன காலத்தில் பிறந்தவர்களிடம் ஒரு வித வசீகர சக்தி மிகுந்திருக்கும்.
 

ஸ்ரீதேவியின் ராசி ரிஷப ராசி:

  • அழகான தோற்றம் மற்றும் கவர்ச்சிகரமான தன்மை
  • படைப்பு திறன் மற்றும் கலை ஆர்வம்
  • இனிமையான குணம் மற்றும் அன்பான மனம்
  • குடும்பம் மற்றும் நண்பர்கள் மீது பாசம்
  • உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம்
  • சமூக மதிப்பு மற்றும் மரியாதை
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆடல், பாடல் கலைகளில் இயற்கையாகவே ஆர்வம் இருக்கும் என்பதால் ஶ்ரீதேவி எல்லோரும் போற்றும் நடிகையானதில் ஆச்சரியம் இல்லை.
 

ஸ்ரீதேவியின் லக்னம் கடகம்:

பொது பலன்கள்
  • மனதில் அமைதி மற்றும் நிம்மதி
  • தாய்மை மற்றும் பாசம்
  • பற்றுதல் மற்றும் பாதுகாப்பு தேவை
  • உணர்ச்சிவசப்படுதல்
  • கற்பனை மற்றும் படைப்பு திறன்
  • ஆன்மீக ஆர்வம்

யோககாரகர்கள்: குரு, செவ்வாய், சந்திரன்
யோகமில்லாதவர்கள்: சுக்கிரன், பதன்
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:குரு, செவ்வாய், சந்திரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: செவ்வாய் கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம்
மாரக அதிபதி:  சனி
 
கடக லக்னத்தில் பிறந்த ஶ்ரீதேவி இனிய சுபாவமுடையவர் என்றாலும் இடையிடையே முன்கோபத்தினையும் காணலாம். ஏராளமான நண்பர்களும் உண்டு. மகரராசி ஏழாம் வீடாக அமையப்பெற்றதால் ஶ்ரீதேவியின் வாழ்க்கைத் துணை கர்வம் உடையவராக, இழிவான குணங்களுடையவராக, பேராசைக்காரராக, கொடுமைப் படுத்துபவராக அமைய வாய்ப்பு உண்டு. இந்த இலக்னத்தில் பிறந்தவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் கற்பிக்கவோ அல்லது போதிக்கவோ அல்லது உச்சாடனம் செய்யவோ அல்லது நடிக்கவோ அல்லது பேசவோ முடியும். மேலும் பொதுமக்களை தன் வயப்படுத்த முடியும். கடகத்தின் அதிபதி சந்திரன் ஆகும். சந்திரன் வளர்வதையும் தேய்வதையும் போல் கடகலக்னத்தில் பிறந்தவர்கள் சில சமயங்களில் கூச்ச சுபாவமுள்ளவராகவும் மற்றைய சமயங்களில் மிகவும் தைரியசாலி களாகவும் காணப்படுவர். கடகலக்னத்தில் பிறந்தவர்கள் மாசி மாதமோ, வளர்பிறை பஞ்சமி திதியிலோ, மிருகசீரிச நட்சத்திரத்திலோ, புதன் கிழமையிலோ, மரணமடைவார்கள் என்பது பொது வழக்கு.
 
sridevi death date
 
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, எட்டாம் வீடு கும்பராசி ஆகையினால் தீயினால் விபத்து உண்டாக வாய்ப்புண்டு. 1986 ம் ஆண்டு கர்மா என்ற படத்தின் சூட்டிங்கின் போது short circuit நடந்ததால் ஏற்பட்ட தீ விபத்தின் போது ஸ்ரீதேவிக்கு சிறிய அளவில் தீக் காயங்கள் ஏற்பட்டு அதற்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும்.

ரிஷப ராசி மற்றும் கடக லக்னம் சேர்க்கை:
  • ரிஷப ராசியின் அழகு மற்றும் கவர்ச்சி, கடக லக்னத்தின் மன அமைதியுடன் இணைந்து ஸ்ரீதேவிக்கு தனித்துவமான தன்மையை அளித்திருக்கலாம்.
  • இதே அமைப்பு கலை, இசை, நடிப்பு போன்ற துறைகளில் வெற்றி பெற வாய்ப்பு, இனிமையான திருமண வாழ்க்கை ஆகியவற்றை அளித்திருக்கலாம். 
  • இந்த அமைப்பு எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோய்க்கான சாத்தியங்களை உருவாக்கலாம். ஸ்ரீதேவிக்கு தனக்கு Diabates எனப்படும் சர்க்கரை வியாதி உள்ளது என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

 

ஸ்ரீதேவியின் நட்சத்திரம் : கார்த்திகை. பாதம் : 3

இந்த நட்சத்திரத்தை 'கிருத்திகை' என்றும் கூறுவர். இந்த நட்சத்திரத்தின் அதிபதி நவக்கிரகங்களின் முதன்மையானதும், ஒளி வீசக்கூடியதுமான தகப்பனுக்கு காரகனான சூரியன் ஆவார். நல்ல அறிவும், ஆற்றலும் உடையவர்கள் எதிலும் முதன்மை வகிப்பர்.

 

ஜாதகப்படி நடிகை ஸ்ரீதேவியின் குண அமைப்பு:

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல உடல் வலிமையும் புத்திசாலிதனமும் இருக்கும். குருட்டு தைரியத்துடன் சிலருக்கு தீயதை செய்தாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு. முன் கோபமும் அதிகமிருக்கும் ஆடம்பரமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புவர். தன் சக்திக்கு எது முடியுமோ அதையே செய்து முடிப்பர். 

ஸ்ரீதேவியின் குடும்பம்:
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் பல கனவுகளுடன் பிள்ளைகளை வளர்ப்பார்கள், தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள். ஸ்ரீதேவி ஒரு பொறுப்புள்ள தாயாக, தன் பிள்ளைகள் இவ்வாறு தான் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று பொறுப்புடன் செயல்பட்டவர். கண்டுப்புடன், அதே சமயம் அன்பானவராகவும் இருந்தவர்.


நட்சத்திரப்படி ஸ்ரீதேவிக்கு ஏற்படக்கூடிய நோய்கள்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முன் கோபம் அதிகமிருப்பதால் ரத்த அழுத்த சம்மந்தப்பட்ட நோய்கள் தாக்கும். ஸ்ரீதேவிக்கு Low Blood Pressure இருந்தது என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

ஸ்ரீதேவி நவமி திதியில் பிறந்தவர்
 
நர்மதா பதிப்பகத்தாரின் ஜோதிட சித்தர்களின் நுட்பங்கள் என்னும் நூலில் திரு எஸ்.பி. சுப்ரமணியன் அவர்கள் பக்கம் 55 ல் நவமி திதியில் பிறந்த ஜாதகர் தன்னம்பிக்கையுடையவர், விரும்புவதைப் பெறுபவர், பணம் பண்ணுவதில் திறமைசாலிகள் என்று கூறுகிறார்/
 

ஸ்ரீதேவியின் ஜாதக கட்ட பாவாதிபதிகள்

*ஒன்றாம் பாவாதிபதி (கேந்திரம்) சந்திரன்
*இரண்டாம் பாவாதிபதி (பணபரம்) சூரியன்
*மூன்றாம் பாவாதிபதி (ஆபோக்லிமம்) புதன்
*நான்காம் பாவாதிபதி (கேந்திரம்) சுக்கிரன்
*ஐந்தாம் பாவாதிபதி (திரிகோணம்) செவ்வாய்
*ஆறாம் பாவாதிபதி (ஆபோக்லிமம்) குரு
*ஏழாம் பாவாதிபதி (கேந்திரம்) சனி
*எட்டாம் பாவாதிபதி (பணபரம்) சனி
*ஒன்பதாம் பாவாதிபதி (திரிகோணம்) குரு
*பத்தாம் பாவாதிபதி (கேந்திரம்) செவ்வாய்
*பதினொன்றாம் பாவாதிபதி (பணபரம்) சுக்கிரன்
*பன்னிரண்டாம் பாவாதிபதி (ஆபோக்லிமம்) புதன்

ஸ்ரீதேவியின் ஜாதகத்தில் கிரக சேர்க்கைகள்
சூரியன்,சுக்கிரன், சேர்க்கை
குரு,மாந்தி, சேர்க்கை

ஸ்ரீதேவியின் ஜாதகத்தில் மறைவு ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள்
ஒரு ஜாதகத்தில் 3,6,8,12 ஆகிய இடங்கள் மறைவு ஸ்தானங்கள் அல்லது துர்ஸ்தானங்கள் எனப்படும். இந்த இடங்களில் சுப கிரகங்கள் எனப்படும் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் நின்றால் சுப பலன்களை தரமாட்டார்கள். மாறாக் 3,6,8,12 ம் இடங்களில் பாவ கிரகங்கள் எனப்படும் சூரியன், செவ்வாய், சனி, ராகு - கேது நின்றால் ஜாதகருக்கு எந்த விதமான கெடு பலன்களையும் தராது. ராகு லக்னத்துக்கு 12 இல் மறைவு ஸ்தானத்தில் உள்ளது

ஸ்ரீதேவியின் ஜாதகத்தில் நட்பு மற்றும் பகை வீடுகளில் உள்ள கிரகங்கள்
சூரியன் நட்பு வீட்டில் உள்ளது, செவ்வாய் பகை வீட்டில் உள்ளது. புதன் நட்பு வீட்டில் உள்ளது, சுக்கிரன் பகை வீட்டில் உள்ளது, ராகு நட்பு வீட்டில் உள்ளது. கேது நட்பு வீட்டில் உள்ளது

கிரக பார்வைகள்
சூரியன் பார்வையுள்ள சனி
சூரியன் கடகம் ராசியில் இருந்துக் கொண்டு, (ஏழாம் பார்வையாக) மகரம் ராசியை பார்க்கிறார்.

சந்திரன் பார்வையுள்ள ராசி
சந்திரன் ரிஷபம் ராசியில் இருந்துக் கொண்டு, (ஏழாம் பார்வையாக) விருச்சிகம் ராசியை பார்க்கிறார்.

செவ்வாய் பார்வையுள்ள கேது,குரு
செவ்வாய் கன்னி ராசியில் இருந்துக் கொண்டு,நான்காம் பார்வையாக தனுசு ராசியையும், (எட்டாம் பார்வையாக) மேஷம் ராசியை பார்க்கிறார். (ஏழாம் பார்வையாக) மீனம் ராசியை பார்க்கிறார்.

புதன் பார்வையுள்ள ராசி
புதன் சிம்மம் ராசியில் இருந்துக் கொண்டு, ( ஏழாம் பார்வையாக )கும்பம் ராசியை பார்க்கிறார்.

குரு பார்வையுள்ள சூரியன், சுக்கிரன், செவ்வாய்
குரு மீனம் ராசியில் இருந்துக் கொண்டு, ஐந்தாம் பார்வையாக கடகம் ராசியையும், (ஒன்பதாம் பார்வையாக) விருச்சிகம் ராசியை பார்க்கிறார். (ஏழாம் பார்வையாக) கன்னி ராசியை பார்க்கிறார்.

சுக்கிரன் பார்வையுள்ள சனி
சுக்கிரன் கடகம் ராசியில் இருந்துக் கொண்டு, (ஏழாம் பார்வையாக) மகரம் ராசியை பார்க்கிறார்.
சனி மகரம் ராசியில் இருந்துக் கொண்டு,மூன்றாம் பார்வையாக மீனம் ராசியையும், (பத்தாம் பார்வையாக) துலாம் ராசியை பார்க்கிறார். (ஏழாம் பார்வையாக) கடகம் ராசியை பார்க்கிறார்.

சனி பார்வையுள்ள குரு,சூரியன்,சுக்கிரன்
சனி மகரம் ராசியில் இருந்துக் கொண்டு,மூன்றாம் பார்வையாக மீனம் ராசியையும், (பத்தாம் பார்வையாக) துலாம் ராசியை பார்க்கிறார். (ஏழாம் பார்வையாக) கடகம் ராசியை பார்க்கிறார்.

ராசி கட்டம் பொது பலன்கள்
ஜனனி ஜன்ம சௌக்யானம், வர்த்தினி குல சம்பதம்
பதவீம் பூர்வ புண்யானாம், லிக்யதே ஜன்ம பத்ரிகா

- இந்த ஜன்மத்தில் ஒருவர் அடையக்கூடிய நன்மை, தீமைகள், அவன் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் கணிக்கப்பட்டு ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் அமைப்பில் சந்கேதமாகக் குறிக்கப்பட்டுள்ளது என்பது பொருள்.

குறிப்பு : இவை அனைத்தும் ஜாதக பொது விதிகள். எல்லோருக்கும் எல்லாமுமே பொருந்தாது. தனிப்பட்ட கிரக நிலை வைத்து பலன் சொல்வது துல்லியமாக இருக்காது. மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை பொறுத்து பலன்கள் வேறுபடலாம் முரண்பாடான கருத்துக்களுக்கு தகுந்த ஜோதிடரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும். அவர்கள் தான் 12 ராசிகள், 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள், திசை புத்தி அந்தரம் கலந்த கூட்டு பலனாக சொல்வார்கள்.

ஜாதகத்தில் 2 கிரகங்கள் ஆட்சியில் உள்ளது.
ஜாதகத்தில் 3 கிரகங்கள் நட்பில் உள்ளது.

யோகங்கள்
தவிக்கிரகம் யோகம்
இரண்டு கிரகங்கள் ஒரே வீட்டில் அமைந்துள்ளன.
* ஒரே வீட்டில் (1 ம்) சூரியன், சுக்கிரன் உள்ளது.
* ஒரே வீட்டில் (9 ம்) குரு, மாந்தி உள்ளது.

துருவ யோகத்தில் பிறந்தவர்கள் மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான் போல வாழ்க்கையின் ஜீவதாரமே மானமென்ற கொள்கை சத்தியத்தையே பேசும் குணம் இருந்த போதிலும் சாதாரண காரியத்திற்கும் அலைச்சல் எவ்வளவு சிரமமும்-கடமும் இருந்த போதிலும் எந்த சமயத்திலும் கைவிடாத நாணயம் சோதனைகள் வாட்டியபோதிலும் சத்தியம் தவறாத தெய்வபக்தி முதலிய பெருமைகளோடு திகழுவார்கள்.

தாமினி யோகம்
ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 6 ராசியில் சஞ்சரித்தால் தாமினி யோகம் உண்டாகிறது. - அறிவு ஆற்றல் மிக்கவர். பகைவர்களை தன் வயப் படுத்துபவர். நற்பண்பு உடையவர். தான தர்மம் செய்பவர். ஜீவராசியின் பால் கருணை உடையவர்.

மஹா பாக்கியயோகம்
பெண்ணாக பிறந்தவர்களுக்கு சூரியன் சந்திரன் பெண் ராசியில் அமர்ந்தால் மஹா பாக்கியயோகம் உண்டாகிறது. - ஒரு நாட்டையோ அல்லது ஒரு பகுதியையோ அல்லது ஒரு நிவாகத்தையோ நடத்தும் யோகம் உண்டாகிறது.

பூமி லாப யோகம்
4 க்கு உரியவன் லக்னதிலோ அல்லது லக்னாதிபதி 4 ல் இருப்பின் அல்லது 4 க்கு உரியவன் பலம் பெற்று இருப்பின் பூமி லாப யோகம் உண்டாகிறது. - தனது பெயரில் நிலம், மனை, வீடு அமையப் பெறுகின்றனர்.

ஞாபக மறதி யோகம்
5க்கு உரியவர் 3, 6, 8, 12 ல் இருக்க அல்லது 5க்கு உரியோன் நீசம், அஸ்தங்கம் பெற்றாலும் ஞாபக மறதி யோகம் உண்டாகிறது. - ஞாபக மறதி உடையவராய் இருபர்.

களத்திர மூலதன யோகம்
இரண்டாம் வீட்டு அதிபதியை ஏழாம் வீட்டு அதிபதி பார்த்தால் களத்திர மூலதன யோகம் அமைகிறது. - வாழ்க்கைத் துணை வழியில் அதிக லாபங்கள் உண்டாகிறது.

பூமி பாக்கிய யோகம்
4,9 அதிபதிகள் 3,6,8,12 ல் அமரக்கூடாது. நீசம் பெறக்கூடாது. பாபர் சேர்கை பெறக்கூடாது. இத்தகைய அமைப்பு உண்டாயின் பூமி பாக்கிய யோகம் உண்டாகும். - வீடு, நிலம் சேர்கை உண்டாகும், சொத்தும் நிலைத்து நிற்கும்.

லட்சுமி யோகம்
9 ஆம் அதிபதி 9 ல் ஆட்சி பெற்று இருக்க லட்சுமி யோகம் உண்டாகிறது. -யோகம் தரக்கூடிய கிரகத்தின் தசையில் லட்சுமி கடாட்சம் உண்டாகிறது. அபரிமிதமான செல்வம் அடைகின்றனர்.

சச யோகம்
சனி பகவான் லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களான 1,4,7,10 ல் இருந்து அதன் சொந்த வீடுகளான மகரம், கும்பம் அல்லது அது உச்சம் பெறும் வீடான துலாமிலோ இருந்தால் சச யோகம் அமைகின்றது. - இது ஒரு துஸ்யோகம். நீதி நெறி தவறி நடப்பவர். தலைமை பதவியை அடைபவர். மாற்றான் சொத்தை அபகரிப்பவர். அன்னியர் உழைப்பினால் முன்னுக்கு வருபாவர். பிற பெண்களை வசியம் செய்து இன்பம் காண்பவர்.

வாசி யோகம்
சூரியனுக்கு 12ல் சந்திரன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் வாசி யோகம் உண்டாகிறது. - இந்த யோகம் உடையவர்கள் பலராலும் பாராட்டப் பெற்றவர்களாகவும், செல்வாக்கு மிக்கவராகவும், பேச்சுத்திறன் மிக்கவர்களாகவும், செழிப்பாகவும் வாழ்கின்றனர்.

வரிஷ்ட யோகம்
ஜாதகத்தில் சூரியனுக்கு 3,6,9,12 சந்திரன் அமையபெரின் வரிஷ்ட யோகம் உண்டாகிறது. - ஞானம், வித்தை, செல்வம், புகழ், சுகம் கிட்டும். நல்ல அறிவு, ஒழுக்கம், தைரியம், செல்வம், செல்வாக்கு போன்ற அற்புத பலன்கள் உண்டாகின்றது.

வேசி யோகம்
சூரியனுக்கு இரண்டில் சந்திரன், ராகு மற்றும் கேதுவைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது வேசி யோகம் எனப்படும். இந்த ஜாதகத்தில் சூரியனுக்கு இரண்டில் புதன், உள்ளார்(கள்). இந்த யோகத்தினால் அனைவரையும் நேசிக்கும் மனதைப் பெறலாம். உண்மைக்கு மட்டும் துணை போவதால் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தார்.

மாதுரு மூலதன யோகம்
இரண்டாம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டு அதிபதி உடன் சேர்ந்திருக்க மாதுரு மூலதன யோகம் உண்டாகிறது. இந்த யோகம் உள்ளவர்களுக்கு தாயாருடைய உதவியால் அதிக லாபம் கிட்டும். "ஸ்ரீதேவியின் திரைப்பட வாழ்க்கையில், அவரது தாயாரான ராஜேஷ்வரி அய்யங்கார் மிக முக்கிய பங்காற்றியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி திரைப்பட உலகில் அறிமுகமான ஆரம்ப காலகட்டத்தில், அவரது தாயார் ஸ்ரீதேவியின் திரைப்பட வாழ்க்கையை நிர்வகிப்பதிலும், சினிமா உலகின் சிக்கல்களை சமாளிப்பதிலும் அவருக்கு உதவி செய்தார்"

உபய சாரி யோகம்
சூரியனுக்கு இரு புறமும் ராகு, கேது தவிர பிற கிரகங்கள் உபய சாரி யோகம் உண்டாகிறது. - இந்த யோகம் உடையவர்கள் செல்வாக்கு மிக்கவராகவும் சமுதாயத்தில் பெருமையும் பெயரும் உடையவர்களாகவும் விளங்குகின்றனர்.

ஸப்தரிஷிநாடி கன்னியாலக்னம் - ஜாதகம் 3 பாடல் 32
உபயசரி யோக மொன்று கேதார யோக மொன்று
பாசமாய் வேசி யோகம் பகர்ந்தனம் பலனைக் கேண்மோ
போசன வறுமை காணான் புண்ணிய மனத்த னாகும்
பேச்சினில் சோறானாகும் பிதுர்பூமி விருத்தி செய்வன்

உபயசரி யோகம் என்ற ஒரு யோகம், கேதார யோகம் என்ற யோகம், வேசியோகம் என்ற யோகமிருந்தால் ஜாதகர் சாப்பாடு விஷயத்தில் கஷ்டங்களை அடையமாட்டார். தானதர்மங்களைச் செய்கின்ற நல்ல மனத்தையுடையவராவார். இவர் பேசுவதில் களைப்பை அடைய மாட்டார். பிதுரார்ஜித நிலங்களைப் பயிரிட்டுத் தான்ய வகையராக்களை அதிகப்படுத்துவார்.

வியாக்கியானம்:- உபயசரி யோகம், வேசி யோகம் இவற்றின் விஷயம்: சூரியனுக்குப் பன்னிரண்டில் கிரகம் இருப்பது வேசி யோகம் ஆகும். இரண்டில் இருப்பது வாசி யோகம் ஆகும். பின்னிரண்டிலும் இரண்டிலும் இருப்பது இருப்பது உபயசரி யோகமாகும். இவை விஷயமாக ஜாதக பாரிஜாதம் ஏழாவது அத்தியாயம் நூற்றிருபத்தோராவது (121-வது) சுலோகத்தையும், பல தீபிகை ஆறாவது அத்தியாயம் எட்டாவது சுலோகத்தையும் ஜாதகஅலங்காரம் 121 இருநூற்றெழுபத்தேழாவது (277-வது) பாடலையும், ஜாதக சிந்தாமணி 2 49-வது பாடலையும் வாசிக்கவும்.

லக்கினத்திற்கு மூன்றாம் இடமான கன்னியில் அதாவது கீர்த்தி ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்ததால் இவரின் புகழ் கடல் கடந்ததாக அமைந்தது. செவ்வாயை மீன குரு பார்வை செய்து, குரு மங்கள யோகம் தந்து இவரை மக்கள் மத்தியில் பெரிய அளவில் புகழுடன் திகழ வைத்தது.

லக்கினாதிபதி சந்திரன் பதினொன்றாம் பாவகத்தில் இருந்தால் தாயாரால் ஆதாயம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக அமைவதில்லை.

லக்கினத்திலிருந்து சூரியன் ஒன்றாம் பாவகத்தில் இருப்பதால் ஜாதகர் கவர்ச்சியான தோற்றத்துடன் அறிவு ஆற்றல் மிக்கவர்களாக இருப்பர். 

லக்கினத்திலிருந்து செவ்வாய் மூன்றாம் பாவகத்தில் இருப்பதால் முன் கோபக்காரர்கள். 

லக்கினத்திலிருந்து புதன் இரண்டாம் பாவகத்தில் இருப்பதால்  நினைப்பதை முடிக்கும் திறன் இருக்கும். காரியங்களில் வெற்றியும் சுயமாக பொருள் சேர்க்கைப் பெறுவர். குடும்பம் நல்ல விதமாக அமைவதோடு புத்திர பாக்கியமும் திருப்தியாக இருக்கும். 

லக்கினத்திலிருந்து குரு ஒன்பதாம் பாவகத்தில் இருப்பதால் நடித்தல் பேச்சாற்றல் எழுத்தாற்றால் பாடல் புனைதல் போன்றவற்றில் திறனுள்ளவர்கள்.  ஆன்மீகத்துறையிலோ நீதித்துறையிலோ பணப்புழக்கம் அதிகமுள்ள துறையிலோ பதவிவகித்து அதிக அளவில் பணம் சம்பாதித்து சொத்து சேர்ப்பார்கள். வாழ்க்கை சந்தோஷமாக அமையும். புத்திரபாக்கியம் இருக்கும். 

லக்கினத்திலிருந்து சனி ஏழாம் பாவகத்தில் இருப்பதால் எதிலும் அவசரம் காட்ட மாட்ட்டார்கள். இருந்தாலும் வருங்காலத்தைப்பற்றி கற்பனைக் கோட்டை கட்டுவதில் சமர்த்தர். 

லக்கினத்திலிருந்து ராகு பனிரெண்டாம் பாவகத்தில் இருப்பதால்
இதனை ஷேச கால சர்ப்பயோகம் என்பர். பனிரெண்டாம் பாவகத்தில் இருந்தால் உங்களுக்கு கண் தொடர்பான நோய் இருக்கும்.  "ஸ்ரீதேவிக்கு Strabismus (crossed eyes or squint.) என்ற கண் தொடர்பான பிரச்சனை இருந்தது. அதனை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்தார்."

லக்கினத்திலிருந்து கேது ஆறாம் பாவகத்தில் இருப்பதால் இனிமையாக பேசுவர் பிறர் மதிக்குமளவுக்கு வாழ்வர். எதையும் திட்டமிட்டுச் செய்வர். வெற்றியும் பெறுவர். உழைத்து முன்னேறுவர். தயாள குணமும் இருக்கும். தாராளமாக உதவுவர். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் குழந்தை பாக்கியமும் இருக்கும். 

சிம்மம் 2 ஆம் இடமானால் நிறைய பொருள் ஈட்டுவார். எல்லோருக்கும் உபகாரியாக இருப்பார்.. கன்னி மூன்றாம் இடமாக அமைந்த ஜாதகர் ஒழுக்க சீலராகவும் விருந்தோம்பல் பண்பாடு கொண்டவராகவும் இருப்பர். நான்காம் பாவம் துலாராசியானால் கலைவல்லோன். தெளிந்த சித்தமும் செல்வமும் வாய்ந்தவர். ஐந்தாம் இடம் விருசிகமானால் தோசமின்மை, நல்ல தோற்றம் தர்மத்தில் பற்று, நல்ல நட்புடைய பிள்ளைகள் வாய்க்கும். கும்பம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகர் நெருப்பினாலோ, பகைவனாலோ புண்படலாம். அதனால் சாகவும் நேரிடலாம்.

லக்கினாதிபதி 11 ம் வீட்டில் வலிமையுடன் இருந்தால் ஜாதகர் லாபகரமான தொழிலை செய்வார். நற்பெயரும், செல்வாக்கும் தேடி வரும். 
 

மகா தசை விபரங்கள்

சூரிய மகாதசை - 1963-1965
  • குழந்தை பருவம்.
  • குடும்பத்துடன் நெருங்கிய பிணைப்பு.
  • தந்தையின் பாசம் மற்றும் ஆதரவு.
சந்திர மகாதசை - 1965 - 1975
  • கல்வி மற்றும் வளர்ச்சியில் கவனம்.
  • தாயின் ஆதரவு மற்றும் அன்பை பெறுதல்.
  • கலை ஆர்வம் வெளிப்படுதல். - குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான காலம். சந்திரன் ரிஷபத்தில் பதினொன்றாம் வீட்டில் நன்கு அமையப்பெற்றதால் சமுதாயத்தில் பெயர், புகழ், அறிமுகம் கிடைக்கப் பெற்றார்.
செவ்வாய் மகாதசை - 1975 - 1982
  • தனிப்பட்ட வாழ்க்கையில் முக்கிய முடிவுகள் எடுக்கும் காலம்.
  • சவால்கள் மற்றும் போராட்டங்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு.
  • தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம். - 1977ம் ஆண்டு தெலுகு மொழியில் வெளியான 16 வயதினிலே திரைப்படத்திற்கு Filmfare Best Actress விருது கிடைத்தது
ராகு மகா தசை - 1982 - 2000
  • வெளிநாட்டு பயணங்கள் மற்றும் தொடர்புகள்.
  • சில மறைமுகமான எதிரிகள் மற்றும் சவால்கள்.
  • புகழ் மற்றும் அங்கீகாரம் பெறும் காலம்.
1982 ம் ஆண்டு "மீண்டும் கோகிலா" திரைப் படத்தின் சிறந்த நடிகைக்கான Filmfare Best Actress விருதை பெற்றார்..
1990ம் ஆண்டு "ChaalBaaz", திரைப் படத்தின் சிறந்த நடிகைக்கான (இரட்டை வேடம்) Filmfare Best Actress விருதை பெற்றார். .
1992ம் ஆண்டு "Lamhe" (Best Actress - Hindi). திரைப் படத்தின் சிறந்த நடிகைக்கான Filmfare Best Actress விருதை பெற்றார்.
1993ம் ஆண்டு  "Khuda Gawah".திரைப் படத்தின் சிறந்த நடிகைக்கான Filmfare Best Actress விருதை பெற்றார்.
 
குரு மகா தசை - 2000 - 2016
  • ஆன்மீக வளர்ச்சியில் கவனம் செலுத்தும் காலம்.
  • திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி.
  • தொழில் வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் செல்வம்.
2013ம் ஆண்டு  திரை உலகிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதான Filmfare lifetime achievement ward விருதையும், பத்ம ஸ்ரீ (Padma Shri) விருதும் பெற்றார்.
சனி மகா தசை - 2016 - 2035
  • பொறுப்புகள் அதிகரிப்பு மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் காலம்.
  • ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சனி மகா திசையில் மரணம் அடைந்தார்.
 
இந்து இலக்கணம்
உத்திரகாலமிருதம் எழுதிய மஹாகாளியின் ஆசிபெற்ற மஹாகவி காளிதாசர், இந்து என்றால் ஒளி பொருந்திய அல்லது ஒளிவீசும் லக்னம் என்றும், இதனை லக்ஷ்மி லக்னம் என்றும், தன லக்னம் என்றும் கூறுகிறனர். இந்து என்ற சொல்லிற்கு சந்திரன் என்றுதான் அர்த்தம். ஜோதிட சாஸ்திரத்தின் இரு கண்களாக சூரியனும், சந்திரனும் இருக்கின்றன. இதில் இந்து லக்னம் எனப்படுவது இந்த இருவரையும் இணைத்து சூரியனின் அடிப்படையிலான லக்னத்தையும், சந்திரனின் அடிப்படையிலான ராசியை வைத்தும் கணிக்கப் படுகிறது. இந்து லக்னத்தை கணக்கிடுவதற்கு முன் கிரகங்களின் கதிர்வீச்சு எனப்படும் ஒளி அளவினைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதனை நம்முடைய மூலநூல்கள் “கிரக களா பரிமாணம்” என்ற பெயரில் குறிப்பிடுகின்றன. கிரக களா பரிமாணம் என்ற சம்ஸ்கிருத சொல்லிற்கு கிரகங்களின் கதிர்வீச்சு அளவு என்று பொருள் கொள்ளலாம். இதன்படி பூமிக்கு இதர கிரகங்களாலும், சூரியனாலும் கிடைக்கும் ஒளி அளவுகள், எண்களாக மாற்றப்பட்டு நம்முடைய ஞானிகளால் அளவிடப் பட்டு இருக்கின்றன. இந்து லக்ன கணக்கின்படி, கிரகங்களின் தலைவனான சூரியனால் பூமிக்கு கிடைக்கும் ஒளியளவு எண் 30 எனவும், பூமிக்கு மிக அருகில் இருந்து சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கும் சந்திரனின் ஒளியளவு 16 எனவும், அதிகாலை கிழக்கு வானில் வெண்மையாக பளிச்சிடும் சுக்கிரனின் ஒளிப் பிரதிபலிப்பு எண் 12 எனவும், சுக்கிரனை அடுத்து அதிக பிரதிபலிப்பு திறன் கொண்ட குருவின் ஒளி எண் 10 எனவும், அதனையடுத்து புதனின் ஒளி எண் எட்டாகவும் நமது ஞானிகளால் குறிப்பிடப்படுகிறது. இவை தவிர்த்து பூமிக்கு வெகு அருகில் இருக்கும் பாபக் கிரகமான செவ்வாயின் ஒளி எண் 6 எனவும், சூரியனை வெகு தொலைவிலிருந்து சுற்றி வரும் ஒளியற்ற, முதன்மை பாபக் கிரகமான சனியின் ஒளிப் பிரதிபலிப்பு எண் குறைந்த அளவாக ஒன்று எனவும் தொகுத்துச் சொல்லப் பட்டிருக்கிறது. இந்தக் கிரக களா பரிமாண வரிசையில் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் ராகு-கேதுக்களுக்கு இடம் தராமல் மற்ற ஏழு கிரகங்களை மட்டுமே சொல்லி இருக்கிறார்கள். இதன் காரணம் என்னவெனில் கிரகங்களின் ஒளிப் பிரதிபலிப்பு நிலையை மட்டும் வைத்தே இந்த எண்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. சாயா கிரகங்கள் எனப்படும் ராகு-கேதுக்கள் ஒளியைப் பிரதிபலிக்க முடியாத வெறும் இருளான நிழல்கள் மட்டுமே என்பதால் அவற்றிற்கு இந்து லக்ன அமைப்பில் இடமில்லை.ராசிச் சக்கரத்தில் ஒரு வீட்டிற்கு மட்டும் அதிபதிகளான சூரிய, சந்திரர்களின் கிரக களா பரிமாண எண்களான 30 மற்றும் 16 ஐ அப்படியே வைத்துக் கொண்டு, இரண்டு வீடுகளை கொண்ட புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகியவற்றிற்குத் தரப்பட்ட எண்களை இரட்டிப்பாக்கினால் இதன் கூட்டுத் தொகை 120 ஆக வரும். அதன்படி அமைக்கப்படும் ராசி சக்கரம் கீழ்கண்டவாறு இருக்கும். இந்த எண்களின் கூட்டுத் தொகையான 120 என்பது ஜோதிடத்தில் ஒரு தவிர்க்க முடியாத எண். நம்மைச் சுற்றி பரந்து வியாபித்திருக்கும் ராசி எனப்படும் வான்வெளி வேதஜோதிடத்தில் மூன்று 120 டிகிரிகளாகக் கொண்ட பகுதிகளாகவே பிரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஜோதிடத்தில் மனிதனின் முழு ஆயுட்காலம் எனப்படும் விம்சோத்ரி தசாபுக்தி வருட அளவுகளும் மொத்தம் 120 தான். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஒன்பதுக்குடையவரின் எண்ணையும், ராசிக்கு ஒன்பதுக்குடையவரின் எண்ணையும் கூட்டினால் வரும் எண்ணை பனிரெண்டால் வகுத்து, மீதி வரும் எண்ணை, ராசியில் இருந்து எண்ணினால் அது எந்த வீட்டில் முடிவடைகிறதோ அதுவே அவருடைய இந்து லக்னம் எனப்படும்.இப்படிக் கணக்கிடப்படும் இந்து லக்னத்தில் இருக்கும் கிரகங்களின் தசை நடக்கும் போது ஒருமனிதன் அளவற்ற புகழ், பணம், செல்வம், அந்தஸ்து என உயர்வடைய வைக்கும் என மூலநூல்கள் சொல்கின்றன. இந்து லக்னத்தில் கிரகங்கள் இல்லாவிட்டாலும் அந்த லக்னத்தைப் பார்க்கும் கிரகத்தின் தசையிலும், நற்பலன்கள் கிடைக்கும் என்று மகரிஷி காளிதாசரின் உத்திர காலாமிர்தம் கூறுகிறது.
 
ஸ்ரீதேவி ஜாதகப்படி அவர் லக்கினத்தில் இருந்து ஒன்பதாம் இடம் மீனம் . இதன் அதிபதி குரு . அவர் இருக்கும் இடம் - 10. உங்கள் ஜாதகத்தில் சந்திரன் ரிஷபம் ராசியில் 11ம் இடத்தில் உள்ளது. சந்திரனில் இருந்து ஒன்பதாம் இடம் மகரம். இதன் அதிபதி சனி. அவரின் எண் - 1. இரண்டையும் கூட்ட 10 + 1 = 11. கூடிவந்த எண் 12 ஐ விட குறைவு என்பதால், அதை 12 ஆல் வகுக்க வேண்டும்.11/ 12 = 0 ஈவு 11 மீதி. சந்திரனில் இருந்து 11 ம் இடம் . இதுவே இந்த ஜாதகரின் இந்து லக்கினம் ஆகும். இந்த லக்கினத்தில் குரு, உள்ளது. ஆதலால் ஜாதகருக்கு குரு, திசை மற்றும் புத்தியில் இந்து இலக்கணம் நன்கு வேலை செய்யும்.
 
மேலே மகா தசை பலன்களை கவனித்தால், குரு மகா தசை காலமான  2000 - 2016ல்,  2013ம் ஆண்டு  திரை உலகிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதான Filmfare lifetime achievement ward விருதையும், பத்ம ஸ்ரீ (Padma Shri) விருதும் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார். இவரின் ஜாதகத்தில் இந்து லக்னம் நன்கு வேலை செய்துள்ளது.

கிரக பரிவர்த்தனை
ஸ்ரீதேவியின்  ஜாதகத்தில் கீழ்கண்ட கிரகங்கள் பரிவர்தனை செய்துக் கொண்டுள்ளது
4ம் அதிபதி,11ம் அதிபதியாகிய சுக்கிரன், லக்னாதிபதியாகிய சந்திரன் உடன் பரிவர்த்தனை (1 - 11)
சுக்கிரன் - சந்திரன், பகை கிரகங்கள் பரிவர்த்தனை 
சுக்கிரன் , சந்திரன் லக்னாதிபதியும் சந்திரன் இருக்கும் ராசிக்கதிபதியும் பரிவர்த்தனை பெறுவது சக்கரவர்த்தி யோகமாகும். அரசாளும் யோகமாகும் என்று பரிவர்த்தனை தரும் யோகம் நூலில் சுப. சுப்பிரமணியன் பக்கம் 30 இல் கூறியுள்ளார்

மகா பரிவர்த்தனை யோகம்
ஒருவருக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடியது மகா பரிவர்த்தனை யோகம். சிலர் கடின உழைப்பை பல நேரங்களில் போட்டாலும் வெற்றி கிடைப்பதில்லை. சிலருக்கு சிறியளவு முயற்சி செய்தாலே நல்ல பலன்கள் கிடைத்துவிடுகிறது. இது போன்ற அதிர்ஷ்டத்தை தரக்கூடியது தான் மஹா பரிவர்த்தனை யோகம்.
1, 2, 4, 5, 7, 9, 10, 11-ம் ஆகிய வீடுகளைச் சேர்ந்த ராசி அதிபதிகளில் இருவர் அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட அதிபதிகள் இடம் மாறி அமர்வதால் இந்த சிறப்பான மகா பரிவத்தனை யோகம் உண்டாகிறது.

இந்த யோகத்தைப் பெற்ற ஜாதகதாரர் வீடு, மனை, சொத்துக்கள், சகல சம்பந்துக்கள், மதிப்பு, மரியாதை, உடல் ஆரோக்கியம், நல்ல பதவியில் வேலை என பல நற்பலன்கள் கிடைக்கும்.

மூன்றாம் அதிபதிகள் பரிவர்த்தனை
ராம தயாளுவின் சங்கீத நிதி என்னும் நூலில் இருந்தும், எஸ்.பி. சுப்ரமணியம் எழுதிய ஜோதிட சித்தர்களின் நுட்பங்கள் பக்கம் 68 இல் இருந்தும் மூன்றாம் அதிபதிகள் பரிவர்த்தனையானால் நற்குணங்கள் பலவும் ஏற்படும். தீமைகள் குறைவாகும்.

லக்கினாதிபதி லாபத்தில் அமர்ந்தால் (11ல் அமர்ந்தால்) செய்யும் முயற்சிகளுக்கு பல மடங்கு பலன்கள் கிடைக்கும். பதினொன்றில் அமர்ந்த லக்கினாதிபதியால், தான் பிறந்த நோக்கத்தை ஸ்ரீதேவி சர்வ சாதாரணமாக நிறைவேற்றி விட்டார்

சுக்கிரனுடன் சூரியனின் சேர்க்கை
நல்ல இடத்தில் அமைந்து, அந்த இடத்துக்கு குருவின் பார்வை இருந்தால், செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையும். 

பனிரெண்டாம் இடம் உபய ராசியானால் நெடுந்தூரத்தில் கல்யாணம் நடக்கும்

சந்திரன் 11-ல் இருந்தால் அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். நல்ல செல்வ வளம் சேரும்.

வாக்கு ஸ்தானத்தில் புதன் இருந்தால்
ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2-ம் இடம் வாக்கு ஸ்தானம் எனப்படும் 2-ம் இடத்தில் புதன் அமர்ந்து இருந்தாலும், 2-ம் இடத்தில் இருக்கும் புதனை சுபகிரகங்கள் எனப்படும் குரு, சந்திரன், சூரியன் பார்த்தாலும் அவர்கள் டி.வி. காம்பயர்களாக, ரேடியோ ஜாக்கிகளாக மக்கள் மத்தியில் புகழ் பெறுவார்கள். 

இலக்கினதிரண்டில் இதமுடனே புதனிருந்தால் தமிழில்வல்லோனாம் - ஜம்புமகாரிஷி வாக்கியம்
இலக்கினத்திற்கு இரண்டாமிடமாகிய வாக்கு ஸ்தானத்தில் புதனிருந்தால் ஜாதகர் தமிழ் வித்தையில் தேர்ச்சியடைந்து கீர்த்தியயிருப்பார் என ஜம்புமகாரிஷி வாக்கியம் நூலில் கூறப்பட்டுள்ளது

லக்கினத்தில் சூரியன்
லக்கினத்தில் சூரியன் (அரசு கிரகம்), மதிப்பு, மரியாதை, புகழ் என்று அனைத்தையும் வழங்குவார்.

சந்திரன் 11-ல் இருந்தால் அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். 

சுக்கிரன் 1 ஆம் விட்டில் இருந்தால் நல்ல தோற்றப்பொழிவை தரும். அழகான கூந்தல் உடையவர். ஆடம்பரப் பிரியராகவும் கவர்ச்சியான உடல் அமைப்பும் இருக்கும். அனைவரும் கவர்ந்து இழுக்கும் தோற்றம் இருக்கும். லக்கினத்தில் சுக்கிரன் இருப்பவர் வீட்டுக்கு போனா வாசல்ல நின்னு கூப்பிடுவதே நல்லது என்று ஒரு சொல்வழக்கு உண்டு. ஏனெனில் எல்லோரும் இவர்கள் பின்னாடி சுற்றுவார்கள்

ராகு மிதுனத்திலிருந்தால்
ராகு மிதுனத்திலிருந்தால் ஆயிரம் ராஜயோகங்களையும் கெடுக்கும் (அழிக்கும்) என பூர்வபாராசர்யம் என்னும் நூலில் பக்கம் 61 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனி வக்கிரம் பெற்றால் ஆயுளைக்குறைப்பார். 

கேது 6 ஆம் வீட்டில் இருந்தால் தண்ணீரில் கண்டம் ஏற்படலாம் எச்சரிகை தேவை.

சுக்கிரனுக்கு 2-ல் புதன் நின்றால் பூமி யோகம் .

சூரியன் கடக ராசியில் இருந்தால் ஜாதகர் பிறந்த இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் உயர்வார். அதிகப் பயணங்களை மேற்கொள்வார்.

புதபகவானிரண்டெட்டு பத்தாமிடத்தும்
பொருந்திடினும் லாபத்திலிருந்திட்டாலும்
இதமுடனே சுபமாகு மானாலுந்தான்
இலக்ஷீமிகடாக்ஷமும் பெறுவாரின்னும்
பதமாகவித்தைபுத்தி மிகவுண்டாகும்
பார்தனிலேமால் திசையில் சனியுஞ்சுக்ரன்
சதமானபுத்தியில் நல்லபலனைத்தந்து
சந்தொக்ஷிக்கச் செய்வா ரென்றுரைப்பாய் . (101)

உரை : புதனபகவான் இரண்டு , எட்டு , பத்தாமிடத்திளிருந்தாலும் பதிநோராமிடமாகிய லாபஸ்தானத்திலிந்தாலும் , நல்ல சுபபலனைக் கொடுத்து இலக்ஷுமி கடாக்ஷம் பெருகும் படியாய்ச் செய்வார்கள் . வித்தையும் , புத்தியும் மென்மேலும் பெருகும்படியாய் அனுக்கிரகஞ் செய்வார்கள் . அனால் சனி புத்தியிலும் , சுக்கிரன் புத்தியிலும் நல்ல பலனையும் கொடுத்து மனோல்லா சமாயிருக்கும்படி செய்வார்கள் .
லக்கினாதிபதி லாபத்தில் அமர்ந்தால் செய்யும் முயற்சிகளுக்கு பல மடங்கு பலன்கள் கிடைக்கும். பதினொன்றில் அமர்ந்த லக்கினாதிபதியால், தான் பிறந்த நோக்கத்தை எளிதில் நிறைவேற்றுவார்.

இரண்டாம் அதிபதியை லக்னாதிபதி பார்த்தால் நேரத்திற்கு உணவும் கிடைக்கும்.

சனிபகவான்சரராசி தனிலிருந்தால்
சார்ந்தமறுதேசத்தில் மரணமாகும்
....
....
கனிவுடையஜாதகத்தின் பலனாராய்ந்து
கணிதத்தூரைப்பீர்விபரமாய் ஜோதிடவேல்லோரே . (97)

உரை : சனிபகவான் சரராசியிலிருந்தால் ஜாதகர் மறுதேசத்தில் மரணமாகும்படியா யமையும் .

7ம் அதிபதி வக்கிரம் பெற்றாலும், 7 ம் பாவம் 7 ம் அதிபதி வக்கிரம் பெற்ற கிரகத்தால் பார்க்கப்பட்டாலும், சுக்கிரனைப் பார்த்தாலும், சுக்கிரன் வக்கிரம் பெற்றாலும் திருமணம் தாமதமாகும். (நர்மதா பதிப்பகத்தாரின் ராகு-கேது தரும் யோகங்களும்-தோஷங்களும் பரிகாரங்களுடன் என்னும் நூலில் திரு எஸ்.பி. சுப்ரமணியன் அவர்கள் பக்கம் 2 )

விருச்சிகம் 5ம் இடமானால் தோசமில்லாத நல்ல தோற்றம் தர்மத்தில் பற்று நல்ல நட்புடைய நேசமிக்க பிள்ளைகள் பிறப்பார்கள்.

லக்கினம் சர ராசி
சர ராசி ஒன்றை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்களுக்கு சில விஷேசத் தன்மைகள் உண்டு. சர ராசியில் பிறந்தவர்கள் கலகலப்பானாவர்கள். உற்சாகம், ஆர்வம் மிக்கவர்கள் செயல்களில் வேகம் உடையவர்கள். தனித்து இயங்கக்கூடியவர்கள். சுதந்திர மனப்பான்மை மிக்கவர்கள் பெயர், புகழ் என்று அவர்களை அனைத்தும் தேடி வரும். 

லக்னமும் இரட்டைப்பட்ட ராசியில் இருந்து, சந்திரனும் அதேபோன்று இரட்டைப்பட்ட ராசியில் இருக்குமானால் அந்தப் பெண் பெண்மையின் அழகுகளோடு விளங்குவாள். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இவை ஆறும் இரட்டைப்பட்ட ராசிகள்). (‘ஸ்திரீ ஜாதகாத்யாயம்’ - வராகமிகிரர்)

கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிகளும் நீர் ராசிகள். இந்த ராசியில் பிறந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். நீர் ராசியாக இருப்பவர்கள் அமைதியாகவும், ஞானத்துடன் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பர். இந்த ராசிக்காரர்கள் கற்பனை வளம் கொண்டவர்கள். 

லக்னாதிபதி சந்திரன் 11 ஆம் இடத்தில இருந்தால். தெளிவான் சிந்தனையும் நிறைவான் வாழ்வும், அமைப்பான வாகன சுகமும், அரச மரியாதையும் பெறுவார்.

சப்தரிஷிநாடி கன்னி லக்னம் ஜாதகம் 63-23: சனி ஐந்தாமிடத்தில் புத்திரஸ்தானாதிபதியாகி, புத்திரஸ்தானத்தில் இருந்தால் புத்திரர்கள் உண்டு

ஐந்தாம் விட்டுக்கு அதிபதி மூன்றாவது வீட்டில் இருந்தால் பல நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.

சந்திரன் உச்சம் அல்லது ஆட்சி
சந்திரன்‌, உணவிற்கு அதிபதியானவர்‌. சந்திரன்‌ ஒரு ஜாதகத்தில்‌ வலுத்திருந்தால்‌, அவருக்கு உணவுக்குப்‌ பஞ்சம்‌ இருக்காது! 
 
நாய்க்கடி!
சுக்கிரன்‌ நாய்களுக்குக்‌ காரகத்துவம்‌ உடையவர்‌. ஒருவர்‌ ஜாதகத்தில்‌ சுக்கிரன்‌ கெட்டுப்போயிருந்தால்‌ அவரை நாய்‌த் தொல்லை அல்லது கடி(த்திரு)க்கும்‌!. பாலியல்‌ நோய்‌ ஏற்படும். 1982 இல், Sadma என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு தெரு நாய் ஸ்ரீ தேவியை கடித்துவிட்டது என்று கூறியுள்ளார். ஸ்ரீதேவியின் ஜாதகத்தில் சுக்கிரன் பகை.

அளவோடு பிள்ளை
ஒருவரின்‌ ஜாதகத்தில்‌ புத்திர ஸ்தானாதிபதி கிரகம்‌ எதுவாயினும்‌, அக்கிரகம்‌ மிதுனம்‌, கன்னி ஆகிய புதன்‌ வீட்டில்‌ இடம்‌ பெற்று இருந்தால்‌ அந்த ஜாதகருக்கு ஓரிருபுத்திரபிராப்தியுடன்‌ சரி. அதற்கு மேல்‌ புத்திரர்‌ இரார்‌.

லக்கினத்திற்கு மூன்றாம் இடமான கன்னியில் (கீர்த்தி ஸ்தானத்தில்) செவ்வாய் அமர்ந்ததால் ஜாதகரின் புகழ் கடல் கடந்ததாக அமைந்து, செவ்வாயை மீன குரு பார்வை செய்ததால், குரு மங்கள யோகம் தந்து, ஸ்ரீதேவியை மக்கள் மத்தியில் பெரிய அளவில் புகழுடன் திகழ வைத்தது.

சந்திரனுக்கு 1-4-7-10-ல் ஜென்ம லக்கினாதிபதி நின்றால் ஆயுள் உள்ள வரை சுக போக வாழ்வு அமையும் .
 
ஸ்ரீதேவியின் மரணம்
லக்னம் அடிப்படையில் ஜாதகருக்கு மாரகாதிபதி எப்போது மாராகம் செய்வார்
ஜென்ம லக்னத்திற்கு மாரக ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் மாரக ஸ்தானாதிபதியின் தசா புக்தி காலங்களிலும் கண்டங்கள் உண்டாக கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்.

அக்கிரகங்களை சுப கிரகங்கள் பார்வை செய்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை கடக்க முடியும். அதுவே பாவ கிரக பார்வை, பாவ கிரக சேர்க்கைப் பெற்று பலவீனமாக இருந்து அந்த நேரத்தில் ஏழரை சனி அஷ்டம சனி போன்றவை நடைபெற்றால் மாரகத்தை எதிர் கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும்.

சர ராசிகளுக்கு 2ம் வீடும், 7ம்வீடும் மாரகஸ்தானங்கள்.அதன் அதிபதிகள் மாரகாதிபதிகள். 11ம் வீடு பாதகஸ்தானம். அதன் அதிபதி பாதகாதிபதி்.

கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதிகளான சூரியனும் சனியும் மாரகாதிபதியாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 2,7 அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

ஸ்ரீதேவி கடக லக்னத்தில் பிறந்ததால், அவருடைய மரணத்தின் போது சனி தசா, சனி புத்தி நடந்துக் கொண்டிருந்தது.  (2016 முதல் 2019 வரை), அப்போது சனி, மகர ராசியில் (கடக லக்னத்திலிருந்து ஏழாம் வீடு) இருந்தது. இந்த சனி எட்டாம் வீட்டின் அதிபதி (மரண ஸ்தானம்) ஆகவும் இருந்தது, இது ஏழாம் வீட்டில் இருந்து மரணத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஒரு ஜாதகத்தில் 7-ம் இடம் என்பது களத்திரஸ்தானம், கூட்டாளிகளின் ஸ்தானம் என்கிறது ஜோதிடம். அதே 7-ம் இடம், மாரகஸ்தானமும் ஆகிறது. ஒரு திசை நடக்கும்பொழுது, அந்த திசை லக்கினத்திற்கு 7-ல் அமர்ந்த கிரகத்தின் திசையாக இருந்தால் மரணம் அல்லது மரணத்திற்கு ஒப்ப கண்டம் ஏற்படும்.
 
ஸ்ரீதேவியின் ஜாதகத்தில், கடக லக்கினத்திற்கு 7-ல் அதாவது மகரத்தில் சனி அமர்ந்து அந்த திசையே நடந்ததால் அதுவும், சனி திசையில், சனி புக்தி 22.02.2019வரை இருக்கிறது. அந்த சனியே, லக்கினத்திற்கு 8-க்குரியவனாக அமைந்து ஏழாம் இடத்தில் அமர்ந்து மரணத்தை கொடுத்துவிட்டான்.
 
அதுமட்டுமல்ல ஸ்ரீதேவி ரிஷப இராசியில் பிறந்தவர். ரிஷப இராசிக்கு அவருடைய மரணத்தின் போது  அஷ்டம சனி நடந்தது. இதுவும் மேலும் அவருக்கு மரணத்தைக் கொடுத்தது.
 
யோகஸ்தானம் என்கிற 5-ம் இடத்தை சந்திரன் மற்றும் குருவின் பார்வையும் இவருக்கு பெரிய யோக வாழ்க்கை கொடுத்தது. இவ்வளவு சிறப்பு இருந்தும் சனி பகவான் 7-ம் இடத்தில் அமர்ந்து அதே திசையும் வந்து இவரின் உயிரை பறித்து, திரை உலகத்தையும், இவரின் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. இவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்.
 
See Also ஆராய்ச்சி


Similar Posts : அணுகுண்டின் தந்தை ஓப்பன் ஹைமரின் ஜாதக அலசல், இரட்டைக் குழந்தை பிறப்பு பற்றி ஜோதிடம், ஹிட்லரின் ஜாதகம் ஆய்வு, மொராஜி தேசாய் ஜாதகம்-ஓர் அலசல், வீரப்பன் பிறப்பு ஜாதகம் - ஓர் அலசல்,

See Also:ஸ்ரீதேவி ஆராய்ச்சி

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 177
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
Prediction for Persons born with Scorpio Sign
2019-10-06 00:00:00
fantastic cms
Secret Language of Birthdays
2019-10-06 00:00:00
fantastic cms
Sidereal Astrology
2019-10-06 00:00:00
fantastic cms
Skeptics of Astrology
2019-10-06 00:00:00
fantastic cms
Snake in Chinese Astrology
2019-10-06 00:00:00
fantastic cms
Predictions for Sun sign
2020-10-06 00:00:00
fantastic cms
Predictions for persons born in Taurus Sign
2020-10-06 00:00:00
fantastic cms
Tiger in Chinese Astrology
2020-10-06 00:00:00
fantastic cms
Tropical astrology
2020-10-06 00:00:00
fantastic cms
Predictions for persons born with Virgo sign
2020-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • Abishegam
  • After Death
  • Agni
  • Ascendant
  • Astrology
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • Basics
  • Beef Chili Fry
  • best astrology softw
  • best-astrology-software
  • Bodhidharma Birth
  • Bodhidharmas Guru
  • Chandiran
  • Chhajju Bania's NDE
  • Chick
  • Hinduism
  • Mangal Singh's NDE
  • medicine
  • Mercury
  • prediction
  • software
  • சித்தர்கள்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com