பழுத்த எலுமிச்சை பழம் - 8
இஞ்சி 3 டேபிள்ஸ்பூன் அளவு
பச்சை மிளகாய் - 3
மிளகாய்ப் பொடி - 5 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒண்ணரை டீஸ்பூன்
பெருங்காயம் - 1 டீஸ்பூன்
வெந்தயப் பொடி - 1 டீஸ்பூன் வறுத்து
உப்பு - தேவையான அளவு
முதலில் 6 எலுமிச்சை பழங்களைச் சிறு சிறு துண்டங்களாக நறுக்கி உப்பு சேர்க்கவும் . பிறகு விதைகளை நீக்கிவிட்டு அதை ஒரு பாட்டிலில் போடவும்.
மற்ற மீதி 2 எலுமிச்சை பழங்களை நறுக்கி அதன் சாற்றைப் பிழிந்து துண்டங்களுடன் சேர்த்து 2 நாட்கள் நன்றாக ஊற வைக்கவும் . இஞ்சி பச்சைமிளகாயை நறுக்கி சிறிது எண்ணெயில் வதக்கிச் சேர்க்கவும்.
வட சட்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை போட்டு இறக்கி மஞ்சள், பெருங்காயப் பொடியை தூவவும்.
எண்ணெய் நன்கு ஆறியவுடன் மிளகாய்ப் பொடியையும் சேர்த்து எலுமிச்சைக் கலவையில் கொட்டிக் கலக்கவும்.
அடிக்கடி கிளறிவிட்டு காற்றுப் புகாமல் பாட்டிலை மூடி வைத்து ஒரு வாரம் கழித்து எடுத்து பார்த்தல் சுறு சுறு சூப்பர் ஊறுகாய் ரெடிங்க ! மேலும் காரம் சேர்ப்பதற்கு முன் ஒரு நாள் வெய்யிலில் காய வைத்தும் எடுக்கலாம்.
ஊறுகாய் ஊற ஊறத்தான் ருசி இருக்கும்.
எலுமிச்சை ஊறுகாய்
Similar Posts : பலாக்காய் கோலா உருண்டை, மினி மதியம் உணவு, Ingredients for Sambar powder , Balak-Paneer Rolls recipe, பனங்கருப்பட்டி அல்வா, See Also:எலுமிச்சை ஊறுகாய் சமையல்
Comments