பனீரை விரல் நீளத்துக்கு நறுக்கி தனியே வையுங்கள். மசாலாதூள், இஞ்சி-பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார், அரிசிமாவு, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். பஜ்ஜி மாவை விடக் கெட்டியான பதத்தில் இருக்கவேண்டும்.பனீரை இந்தக் கலவையில் போட்டு, உடைந்துவிடாமல் பிரட்டி, எண்ணெயைக் காயவைத்து, நான்கு நான்காகப் போட்டு நன்கு சிவக்கப் பொரித்தெடுங்கள். கவனிக்கவும் .எண்ணெய் நன்கு காயவேண்டும். இல்லையென்றால் மசாலா தனியாக, பனீர் தனியாகப் பிரிந்துவந்துவிடும்.(குறிப்பு: அசைவச் சுவை பிடித்தவர்கள், குழம்பு மசாலாவுக்குப் பதிலாக ‘சிக்கன் 65’ மசாலா தூளைப் போடலாம்).
Paneer Frying
Similar Posts : பாகற்காய் சாப்ஸ், உருளைக்கிழங்கு வறுவல், How to Make Pudding, மதியம் உணவு , வளைகாப்பு - 7 வகை சாதம், See Also:பனீர் வறுவல் சமையல்