சகோதிர ஸ்தானம்
எனப்படும் மூன்றாம் வீட்டில் ராகு,கேது இருப்பது,சகோதிரகாரகன் எனப்படும் செவ்வாயுடன் ராகு,கேது தொடர்பு பெறுவது மற்றும் மூன்றாம் அதிபதி நீசம்,பகை,மறைவு ஸ்தானங்களில் இடம்பெறுவது சகோதர தோஷத்தை தரும். இதனை நாம் ஜாதகரின் ஜாதகத்தை வைத்து, அதில் உள்ள கிரகங்களின் அமைப்பைப் பொருத்தும் ஜாதகரின், உடன் பிறந்த சகோதரருக்கு ஆகாதா அல்லது உடன் பிறந்த சகோதரர் இருக்க கூடாதா எனறுஅறிந்துக் கொள்ளலாம்
மேற்கூறிய படி ஜாதகம் இருந்தால், ஜாதகரின் சகோதிரரை இறைவனுக்கு தத்து கொடுத்து விடலாம். அவ்வாறு கொடுக்கும் பொழுது அது சாமி பிள்ளையாகி விடுவதால் அக்குழந்தையால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபட்டு விடும் .ஆனால் அக்குழந்தைக்கு தத்து கொடுக்கும் சாமியின் பெயரினை சூட்டி அக்குழந்தைக்கு நடத்தக்கூடிய அனைத்து சுப காரியத்திற்கும் தத்து கொடுத்த கோவிலில் சாமி கும்பிட்டு வந்த பிறகே நடத்தவேண்டும்.
Similar Posts : புத்திர தோஷ பரிகாரம், திருமண தடை பரிகாரம், சகோதிர தோஷ பரிகாரம், திருமணத் தடை பரிகாரம், ரத்த சோகை பரிகாரம், See Also:சகோதிர தோஷம் பரிகாரம்