*காலசர்ப்ப தோஷம்*
*என்றால் என்ன?தோஷம் மற்றும் பரிகாரம்*
*காலம் எங்கே வந்தது? அதில் சர்ப்பம் எங்கே வந்தது?* *போன்ற உபரிக்*
*கேள்விகள் கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்*
*முற்பிறவியில் அதிக புண்ணியம்*
*செய்திருந்தால்,*
*இந்த பிறவியில் நற்செல்வம்*
*அதிகாரம் புகழ்,*
*அந்தஸ்து,*
*நற்புத்திரர்,வீடு,*
*வாகன வசதிகள் அமையும்*
முற்பிறவியில் அதிகபாவம் செய்திருந்தால் இப்பிறவியில் போராட்டம், சரியான தருணத்தில் உதவி கிடைக்காமை, ஏழ்மை, வறுமை என வாழ்க்கை உழலும்.
யாராக இருந்தாலும் பாவமே செய்யாமலிருக்க முடியாது.
அதில் விலங்குகள்,
பறவைகள் இவற்றைத்
துன்புறுத்தியிருந்தாலோ, கொன்றிருந்தாலோ அது மிகப்பெரியபாவமாகும்.
அதிலும், நாகங்களைக் கொன்றிருந்தால் அதுவே கொடும்பாவமாகக் கருதப்படுகிறது.
இது பற்றி கருடபுராணம்,
விதுரநீதி,
அர்த்தசாஸ்திரம்,
சுக்கிரநீதி போன்ற புராணகால
தர்மநூல்கள்
நிறைய விளக்கம்
கொடுத்துள்ளன.
சிவனின் கழுத்தை அலங்கரிக்கும் பாம்பு/நாகம் விடும் சாபம்
நமது ஏழு
தலைமுறைக்கும்,
நமது அடுத்தடுத்த பிறவிக்கும் பெரும்பாதிப்பை
தரும்.
அனுபவத்தில் தாத்தா,மகன்,பேரன்,
கொள்ளுப்பேரன் என வாழையடி
வாழையாக காலசர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஜாதகங்களை நிறைய்ய பார்த்துவருகிறோம்.
இப்படிப்பட்ட தோஷங்கள் எப்படி ஏற்படுகின்றன?
இரண்டு பாம்புகள் உறவில் இணைந்திருக்கும் போது - காதல் வயப்பட்டிருக்கும் பொழுது அவற்றைக் கொன்றால் அது மிகக் கொடூரமான குற்றமாகும்.
பாம்பை அடித்துக் கொல்ல முயலும் பொழுது அவை மனிதனான தங்களை ஒன்றும் செய்ய மாட்டோம், எங்களை உறவில் இணைந்திருக்க விட்டு விடுங்கள் என்பதைப் போல தங்களது வாலால் தரையில் அடித்துச் உறுதி செய்யும்.
அப்படி உறுதி தந்த பின்னும் அவற்றில் இரண்டையோ அல்லது ஒன்றையோ அடித்துக் கொன்றால் அது அந்த கொல்லும் மனிதனை பழித்துவிட்டு உயிர் விடும்.
இந்தகைய பழிப்பு என்பது, பாம்பு மட்டும் விடுவதில்லை. பிற உயிர் இனங்கள் உறவில் இணைந்திருக்கும் பொழுது கல்லால் அடிப்பது, கம்பால் அடிப்பது போன்ற செய்கையில் ஈடுபடுபவர்கள் அனைவருமே இத்தகைய பழிப்புக்கு உள்ளாகின்றனர்.
இத்தகைய கீழ்தரமான குற்றம் செய்தவர்கள் மறுபிறவி மனிதனாகவே மீண்டும் எடுத்தால் அவர்களின் லக்னத்தில் ராகு அல்லது கேது தனித்திருக்கப் பிறக்கின்றனர்.
அதாவது ராகு என்கிற காலனுக்கும் கேது என்கிற பாம்பிற்கும் இடையில், இராசி கட்டத்தில் பிற 7 கோள்களும் சிக்கிக்கொள்ளும்.
கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இருபாம்புக்களுக்கு இடையே மற்ற ஏழு கோள்களும் அடைபட்டு இருப்பதாகும்.
கால சர்ப்ப தோஷம் ஏற்படுவதால் விளைவு?
கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்களின் ஜாதக கட்டத்தில் பிற ஏழு கோள்களும் ராகு கேது என்கிற பாம்புகளுக்கிடையில் சிக்கிக் கொள்வதால், அந்த கோள்களால் கிடைக்கும் நன்மை அனைத்தும் நச்சு கொண்டு வீனாகும்.
இத்தகைய தோஷம் உடையவர்கள் திருமண தடையால் வயது மூப்படைந்து வாழ்வை வீனடிப்பர்.
5 ல் ராகு ஜாதகம் உடையவர்கள்
5 ல் ராகு இருந்தால் அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்காது.
ஆண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும்.
அந்த ஆண் குழந்தைகள் நோய் நொடி தாக்குதலினால் அல்லல் படுவார்கள்.
*5ல் கேது ஜாதகம் உடையவர்கள்*
ஆண் பெண் என இரு பாலிலும் குழந்தைகள் பிறக்கும். ஆனால் எல்லாம் நோஞ்சானாக இருக்கும்.
மேலும் அந்த குழந்தைகள் பெற்றோரை வெறுக்கும்.
*கால சர்ப்ப தோஷம் பன்னிரெண்டு வகைப்படும்.*
இது ஜாதகத்தில் ராகு மற்றும் கேது அமைந்திருக்கும் வீடுகளை பொருத்து அமைகிறது.
*1.அனந்த கால சர்ப்ப தோஷம்.*
ராகு முதல் வீட்டிலும், கேது ஏழாம் வீட்டிலும் இருக்க மற்ற கோள்கள் இவர்களுக்கிடையே அமைவதே அனந்த கால சர்ப்ப தோஷம்.
விபரீத கால சர்ப்ப தோஷம் எனவும் அழைக்கப்படுகிறது.
இத்தகைய ஜாதக அமைப்பு உடையவர்கள் பல இடையூறு, வாழ்வில் தொல்லைகள், துன்பங்களை அனுபவித்த பிறகு, தங்கள் சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னுக்கு வருவர்.
எனினும் திருமணம் நடந்தேருவதில் சில இடையூறுகள் உண்டாகும்.
*2. சங்க சூட சர்ப்ப தோஷம்*
ராகு 9-ம் வீட்டிலும், கேது 3-ம் வீட்டிலும் இருக்கும் ஜாதக அமைப்புடையோர் பொய் பேசுபவர்களாக வாழ்வார்கள்.
முன் கோபம் கொண்டவர்களாக இருப்பதால், வாழ்வில் பல துன்பங்களை அனுபவிப்பர். வாழ்க்கை முழுதும் ஏற்றத்தாழ்வு நிறைந்ததாக இருக்கும்.
*3. கடக சர்ப்ப தோஷம்*
ராகு 10-ல் இருக்க, கேது 4-ல் இருந்தால் சட்ட சிக்கல்கள் வரும்.
அரசால் தண்டிக்கப் படுவார்கள்.
10-ல் இருக்கும் ராகு இருட்டு தொடர்பான தொழிலைக் கொடுக்கும்.
புகைப்படம், எக்ஸ்ரே போன்ற தொழில் கிடைக்கும். ராகுவுக்கு இடம் கொடுத்த ராசி இறைவன் கெட்டால், சட்டத்திற்குப் புறம்பான வேலைகளைச் செய்யத் தூண்டுவார்.
அரசிற்கு எதிரானவர்களாக வாழ்வில் மன அமைதி இன்றி வாழ்வர்.
*4. குளிகை சர்ப்ப தோஷம்*
ராகு 2-ம் வீட்டிலும் கேது 8-ம் வீட்டிலும் இருந்தால் உடல் நலம் வாழ் நாள் முழுதும் பாதிப்படைந்து இருக்கும்.
இழப்புகள், விபத்துகள் ஆகியவற்றில் சிக்கி மன அமைதி இளப்பர்.
பொருளாதார பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்.
ராகுவுக்கு இடம் கொடுத்த ராசி இறைவன் பலம் பெற்றிருந்தால் வெளிநாட்டுப் பயணம் கிடைக்கும்.
*5. வாசுகி சர்ப்ப தோஷம்*
ராகு 3-ம் வீட்டிலும் கேது 9-ம் வீட்டிலும் இருந்தால் இந்தத் தோஷம் ஏற்படும்.
தொழிலில் பிரச்னை ஏற்படும். வயதில் இளையவர்களால் என்றும் தொல்லையும் துன்பமும் வரும்.
*6. சங்கல்ப சர்ப்ப தோஷம்*
ராகு 4-ல் கேது 10-ல் இருந்தால் வேலை வாய்ப்புகள் இருக்காது. வேலை கிடைத்து பனியில் இருந்தாலும் அது நிலைக்காது.
தொழில் செய்ய முயன்றால் அதில் நொடிப்பு தான் ஏற்படும்.
*7. பத்ம சர்ப்ப தோஷம்*
ராகு 5-ம் வீடு, கேது 11-ம் வீட்டில் இருந்தால் குழந்தைகள் செல்வம் இருக்காது.
அறிவியல் முறைகளில் முயன்றாலும் பிறப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.
நிலவும் கெட்டால் பேய் பிசாசு மற்றும் ஆவிகளின் தொலை ஏற்படும்.
நண்பர்களால் ஏமாற்றம் ஏற்படும்.
நோய் நொடிகளால் வாழ்வு முழுதும் துன்புருவர்.
*8. மகா பத்ம சர்ப்ப தோஷம்*
ராகு 6-ல் கேது 12-ல் இருந்தால் நோய் நொடிகளால் வாழ்வு முழுதும் துன்புருவர்..
வாழ்வு இடையூறுகள் நிறைந்ததாக இருக்கும்.
6-ம் இடத்து கோளை பொறுத்து நோய் நீங்குவதும், எதிரிகளை வெற்றி கொள்ளுதலும் நடக்கும்.
*9. தக்ஷக சர்ப்ப தோஷம்*
கேது லக்னத்தில் ராகு 7-ல் இருந்தால் முன் சிந்தனை அற்றவர்களாக இருப்பர்.
கிடைக்கும் செல்வம் முழுவதையும், மது, மாது ஆகியவற்றில் இழப்பார்.
திருமண வாழ்வில் சிக்கல்களால் மன அமைதி இன்றி வாழ்வர்.
*10. கார் கோடக சர்ப்ப தோஷம்*
ராகு 8-ல், கேது 2-ல் இருந்தால் கார் கோடக சர்ப்ப தோஷத்தை உண்டாக்கும். அதாவது தந்தை வழி சொத்துக்கள் கிடைக்காது.
உற்றார் உறவினர், நண்பர்கள் என அனைவரும் பகையாளியாக இருப்பர்.
*11. விஷ் தார சர்ப்ப தோஷம்*
ராகு 11-ல் கேது 5-ல் இருந்தால் குழந்கைளால் துன்பம் உண்டாகும்.
குடும்பத்துடன் வாழமால் அடிக்கடி பயணம் செய்வார்.
வாழ்க்கையின் பிற்பகுதி, அதாவது 50 வயதை தாண்டியபின் வாழ்வு நன்றாக இருக்கும்.
*12. சேஷ நாக சர்ப்ப தோஷம்*
*ராகு 12-ல், கேது 6-ல்* இருந்தால் உடல் நோய் நொடிகளால் அல்லல் படும்.
*வழக்குகளில் சிக்கல் உண்டாகும்.* எதிரிகள் தொல்லை இருக்கும்.
*ஒரு ஜாதகத்தில் ராகு & கேது இருக்கும்* இடங்களுக்குள் உள்ள ஏழு
ராசிகளுக்குள் மற்ற ஏழு கிரகங்களும் இருந்து மீதி ஐந்து ராசிகள் காலியாக
இருக்கும் நிலைதான் கால சர்ப்ப தோஷம் ஆகும்!
*இதில் லக்கினம் உள்ளே இருந்தாலும் அல்லது அந்த ஏழு கட்டங்களைத்*
தாண்டி வெளியே இருந்தாலும் அது அந்த தோஷத்தில் அடக்கம்!
*ராகுவில் ஆரம்பித்துக் கேதுவில் முடியும்* நிலைக்கு சவ்ய காலசர்ப்ப தோஷம்
என்றும், கேதுவில் ஆரம்பித்து ராகுவில் முடியும் நிலைக்கு அபசவ்ய
காலசர்ப்ப தோஷம் என்றும் பெயர்கள் உண்டு. பலன்களும் மாறுபடும்.
*சாயா கிரகங்களான* ராகுவைத் தலைப் பகுதியாகவும்,
கேதுவை வால்
பகுதியாகவும் ஜோதிடம் சிறப்பித்துக் கூறுகிறது.
*அந்த அமைப்புள்ள ஜாதகர்களின்* வாழ்க்கையின் ஒரு
பகுதி - அந்த
தோசத்திற்கு உரிய பலன்களை அவர்கள் அனுபவிக்கும் காலம் துன்பமானதாகும்.
சோகமானதாகும்.
*அனுபவித்தவர்களுக்கு, அல்லது அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு*
*மட்டுமே அது தெரியும்*.
*லக்கினத்தில் துவங்கி முதல் ஏழு* வீடுகளுக்குள் இந்த தோஷம் உள்ளவர்
களுக்கு அவர்கள் வாழ்க்கையின் முதல் பகுதியும்,
ஏழாம் வீட்டில் துவங்கி
லக்கினத்தில் முடிபர்வகளுக்கு
அவர்கள் வாழ்க்கையின் இரண்டாவது
பகுதியும் மோசமானதாக இருக்கும்.
*இந்த மோசமான என்ற சொல்லுக்குள்*
எல்லாவிதத் துன்பங்களும் அடக்கம்!
*இந்த தோஷம் உள்ளவனின் ஜாதகத்தில்*, வேறு நல்ல
யோகங்கள் எதுவும்
இல்லை என்றால்,
அவன் வேலையின்றித்திரிவான், திருமணவாழ்க்கை
இருக்காது
*பல தீய பழக்கங்களுக்கு ஆளாகி*, பலராலும் ஒதுக்கப்படும்
நிலையில் வாழ்வான்.
*ஆகவே இந்த தோஷம் உள்ளவர்கள்,* பயந்துவிடாமல், ஜாதகத்தில் வேறு
என்னென்ன யோகம் இருக்கிறது என்று பார்த்து ஆறுதல் கொள்ளவும்.
*இறைவன் கருணை மிக்கவன்*. தன் மீது நம்பிக்கையும், பற்றும் கொண்ட
வனை அவர் ஒரு போதும் கை விடுவதில்லை!
*அதை மனதில் கொள்க!*
*சரி, இந்தத் தோஷம்* எத்தனை ஆண்டுகளுக்கு?
*இதில் இரண்டுவிதக் கருத்துக்கள் உண்டு. 33* ஆண்டுகள் வரை இந்தத்
தோஷம் உண்டு என்பார்கள்.
*சிலர் அஷ்டகவர்க்கத்தில்* லக்கினத்தில்
எத்தனை பரல்கள் இருக்கிறதோ அத்தனை ஆண்டுகள்வரை உண்டு
என்பார்கள்.
*உதாரணத்திற்கு* ஒருவர் ஜாதகத்தில்
லக்கினத்தில் 28 பரல்
கள் என்றால்,
அவருக்கு 28 ஆண்டுகள் வரை இந்தத் தோஷம். உண்டு.
*பிறகு தோஷம்* விலகியவுடன் அதுவே யோகமாக மாறி
ஜாதகரை உயர்
விற்குக் கொண்டு போகும்.*
*இந்தியாவின் ஜாதகத்தில் லக்கினத்தில் 44 பரல்கள்.*
*நாம் சுதந்திரம்*
*அடைந்த 1947ஆம்*
*ஆண்டு கூட்டல்*
*அந்த 44 = 1991ஆம் ஆண்டுவரை*
*நம் நாட்டை தோஷம் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது.*
*அதற்குப் பிறகு*
*தான் நாம் அசுர வேகத்தில் பல* *துறைகளிலும் முன்னேறிக்* *கொண்டிருக்*
*கின்றோம்.*
*இந்த அஷ்டகவர்க்கக் கணக்கு பலருக்கும் சரியாக*
*இருந்திருக்கிறது. நீங்களும் அதையே பின்பற்றலாம்!*
*பொதுப் பலன்கள்*
*1இந்த தோஷம்* லக்கினத்திலிருந்து (அதாவது லக்கினத்தில் ராகு அல்லது
கேது அமர்ந்திருக்க அடுத்துள்ள ஆறு கட்டங்களுக்குள் மற்ற அத்தனை
கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு) துவங்கினால், குடும்பத்தில் பல
சிக்கல்கள் இருக்கும்.ஏற்படும். தீராத பிணிகள் (chronic health problems)
ஏற்படும்!
*2இந்த தோஷம்* இரண்டாம் வீட்டிலிருந்து (அதாவது லக்கினத்திற்கு அடுத்துள்ள
இரண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது அமர்ந்திருக்க அடுத்துள்ள ஆறு
கட்டங்களுக்குள் மற்ற அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு)
துவங்கினால், குடும்பத்தில் பல சிக்கல்கள் இருக்கும்.ஏற்படும். அதோடு பணப்
பிரச்சினைகள் ஏற்படும்!
*3இந்த தோஷம்* மூன்றாம் வீட்டிலிருந்து துவங்கினால், உடன்பிறப்புக்களுடன்
சிக்கல்கள் இருக்கும்.விரோத மனப்பான்மை ஏற்படுத்தும்.
*4இந்த தோஷம்* நான்காம் வீட்டிலிருந்து துவங்கினால், தாயாருடன் கருத்து
வேற்றுமையை உண்டாக்கும். தாயாரின் அன்பு கிடைக்காமல் போய்விடும்.
வீடு, வாகனங்களை வைத்துப் பலவிதமான பிரச்சினைகள் உண்டாகும்.
*5இந்த தோஷம் ஐந்தாம்* வீட்டிலிருந்து துவங்கினால், பெற்ற குழந்தைகளை
வைத்துப் பிரச்சினைகள் ஏற்படும்.
*6.இந்த தோஷம் ஆறாம்* வீட்டிலிருந்து துவங்கினால், நோய்கள், கடன்கள்
விரோதிகள் என்று பிரச்சினைகள் வந்து குடி கொண்டுவிடும்
*7.இந்த தோஷம் ஏழாம்* வீட்டிலிருந்து துவங்கினால், செய்யும் தொழிலில்,
வியாபாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி
இருக்காது. பதிலுக்குப் பிரச்சினைகள் மட்டும் இருக்கும்.
*8.இந்த தோஷம் எட்டாம்* வீட்டிலிருந்து துவங்கினால், மனைவியுடன்
சரளமான வாழ்க்கை இருக்காது. சிக்கல்கள் இருக்கும்.அடிக்கடி
விபத்துக்கள் ஏற்பட்டுப் பல பிரச்சினைகள் உண்டாகும்.
*9இந்த தோஷம்* ஒன்பதாம் வீட்டிலிருந்து துவங்கினால், தந்தையுடன்
பிரச்சினைகள் ஏற்படும். மிகவும் துரதிர்ஷ்டமான பலன்கள் ஏற்படும்
(இது பாக்கிய ஸ்தானமல்லவா? அதனால் துரதிர்ஷ்டம் ஏற்பட்டால்
என்ன பாக்கியம் கிடைக்கும்?)
*10.இந்த தோஷம்* பத்தாம் வீட்டில் துவங்கினால், செய்யும் தொழிலில்,
வியாபாரத்தில் அல்லது வேலையில் நிலையான போக்கு இருக்காது.
அவஸ்தையாக இருக்கும்.நிம்மதி இருக்காது.
*11.இந்த தோஷம்* பதினொன்றில் துவங்கினால், நிதி நிர்வாகம், முதலீடுகள்
பங்கு வணிகம் என்று எந்த நிதி நிலைப்பாட்டிலும் நாம் நினைத்தது
நடக்காது. மாறாக நடந்து நம்மைப் புரட்டிப்போடும்.
*12இந்த தோஷம்* பன்னிரெண்டாம் வீட்டில் இருந்து துவங்கினால், திகைக்க
வைக்கும் செலவுகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். பணத்
தட்டுப்பாடு உண்டாகும். மொத்தத்தில் செலவும், விரையங்களும் சேர்ந்து
மனிதனை (ஜாதகனை) ஒரு வழி பண்ணிவிடும்!
*சில விவரங்கள்:*
*1கால சர்ப்ப தோஷ* ஜாதகனுக்கு, அவனுடைய ஜாதகத்தில் இரண்டு
அல்லது மூன்று கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தாலும், அந்த தோஷம்
முடியும் காலம்வரை அந்த உச்ச கிரகங்களின் பலனை அவன் அடைய
முடியாது.
*2லக்கினத்தில் ராகு* இருக்க, வேறு நல்ல கிரகங்களின் பார்வையின்றி
லக்கினத்திலிருந்து (அதாவது அடுத்துள்ள ஆறு கட்டங்களுக்குள் மற்ற
அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு) கால சர்ப்ப தோஷம்
துவங்கினால், ஜாதகருக்குத் திருமண வாழ்வில் கடுமையான ஏமாற்றங்களும்,
சோதனைகளும் உண்டாகும்.
*3நான்காம் வீடு அசுபர்* வீடாக இருந்து, அங்கிருந்து இந்த தோஷம்
துவங்கினால், ஜாதகருக்குக் கல்வியில் தடை ஏற்படும்.
அதுவே சுபர்
வீடாக இருந்தால் உயர் கல்வி கிடைக்கும்.
*4.ஐந்தாம் வீட்டை*
வைத்து இந்த தோஷம் துவங்கினால், ஜாதகருக்கு
புத்திர தோஷம் ஏற்படும். குழந்தைகள் பிறப்பது தாமதப்படும். அல்லது
வேறு தீய அமைப்புக்களை வைத்துக் குழந்தைகள் இல்லாது போய்விடும்.
*5.ஆறாம் வீட்டை* வைத்து இந்த தோஷம் துவங்கினால், அங்கே ராகு இருந்து
நல்ல கிரகங்கலின் பார்வை இல்லையென்றால், சிறைவாசம், உடல்நிலை
பாதிப்பு போன்றவைகள் உண்டாகும்.
*6.ராகு அல்லது கேது* தாங்கள் இருக்கும் வீட்டில் அமரும் கிரகத்துடன்
கூட்டணி போட்டுப் பலன்களைக் கொடுப்பார்கள்.
அதனால் அவர்களுடன்
சேரும் கிரகம் தீயதாக இருந்தால் தீயபலன்கள் இரட்டிப்பாகும்.
நல்ல கிரகமாக இருந்தால் - உதாரணத்திற்குக் குருவாக இருந்தால்
ராகுவும் அவருடன் சேர்ந்து நல்ல பலன்களை வழங்க ஆரம்பித்து
விடுவார். அதற்கு ஒரு ஸ்டைலான பெயரும் உண்டு. அதாவது ராகுவும்
குருவும் சேர்ந்தால் அதற்குச் "சண்டாளயோகம்" என்று பெயர்!
*7.ராகு-சனி' அல்லது* ராகு - செவ்வாய்' அல்லது ராகு - சூரியன் என்று
இரண்டு கிரகக் கூட்டணி ஏழாம் வீட்டில் இருந்தால் கடுமையான
களத்திர தோஷம். எத்தனை தாரம் என்றாலும் ஒன்று கூட நிலைப்பதில்லை!
*8.கால சார்ப்ப தோஷம்* cum யோகம், ஒரு ஏழையைக் கோடீஸ்வரனாகவும்
செய்யும், அதெ போல பெரிய கோடீஸ்வரனை ஒன்றும் இல்லாதவனாக
தெருவில் கொண்டு வந்து நிறுத்தவும் செய்யும். அது அவரவர்கள் ஜாதகப்
பலன். அல்லது எல்லோரும் சொல்வதை
போல வாங்கி வந்த வரம்!
அந்த ராகு கேதுவின் ஏழு கட்ட பிடிப்பிற்குள் லக்கினம் மாட்டாமல்
வெளியே இருந்தாலும் அல்லது லக்கினம் மாட்டிக் கொண்டு சந்திர
ராசி (சந்திரன்) மாட்டாமல் வெளியே இருந்தாலும் தோஷம் உண்டு.
ஆனால் 80% சதவிகிதப் பலன்கள் மட்டுமே இருக்கும். அதாவது
ஏற்படும் துன்பங்களில் 20% கன்செஷன் உண்டு.
சிலர் கால சர்ப்ப தோஷம் இல்லாவிட்டாலும், இருப்பதைப் போன்ற
அளவிற்குத் துன்பப்படுவார்கள்.
அதற்குக் காரணம்,
அந்த ஏழுகட்ட
அமைப்பு இல்லாவிடினும், அவர்களுடைய ஜாதகத்தில் முக்கியமான
கிரகங்கள் எல்லாம், ராகு அல்லது கேதுவின் நட்சத்திர சாரத்தில்
(திருவாதிரை, சுவாதி, சதயம் - அஸ்வினி, மகம், மூலம் )இருக்கும்.
*அதை ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலப்படும்.*
*கால சர்ப்ப தோஷம்* உள்ள சிலருக்கு, அந்த தோஷ காலம் முடிந்த
பிறகே திருமணம் நடைபெறும்.
அதுபோல கால சர்ப்ப தோஷத்துடன் பிறக்கும் குழந்தைகள் உள்ள
பெற்றோர்களும், கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.
பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் என்று
இந்த தோஷத்தில் பிடிபட்ட பலரும் சிறுவயதில் பல தொல்லைகளுக்கு
ஆளாகியிருக்கிறார்கள். அந்த தோஷம் நிவர்த்தியான பிறகு
உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே
தங்கள் சொந்த முயற்சியால்தான் அந்த நிலையை எட்டியிருப்பார்கள்.
இந்த தோஷத்தில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டு மீண்டு,
பிறகு ஒரு உன்னத நிலையை எட்டி, பிறகு சிறிது காலத்திற்குப்
பிறகு, படு பாதாளத்தில் விழுந்து விடும் நிலையும் சிலருக்கு
ஏற்படுவது உண்டு. அது அவர்களின் தனிப்பட்ட ஜாதகத்தில்
உள்ள வில்லங்கமான கிரக அமைப்புக்களால் ஏற்படுவதாகும்.
*கால சர்ப்ப தோஷம்* உள்ளவர்களுக்கு, ராகு அல்லது கேதுவின்
திசைகள் வந்தால், நற்பலன்கள் உண்டாகும்.
அதே நேரத்தில் அந்த
திசை முடியும் போது போர்டிங் பாஸ் கொடுத்து அவர்கள் ஜாதகனை
மேலே அனுப்பியும் வைத்து விடுவார்கள்.
ஆனால் அவ்வாறு வரும் திசைகளில் துன்பமான பலன்களையே
ஒருவர் அனுபவித்தால், அவரை அவர்கள் உயிரோடு விட்டு விட்டு
அடுத்து வரும் திசைகளில் நற்பலன்களை அனுபவி என்று சொல்லிக்
கைகுலுக்கி விட்டுப் போய்விடுவார்கள்.
*கால சர்ப்ப தோஷம்* உள்ள ஆண், அதேபோல கால சர்ப்ப தோஷம்
உள்ள பெண்ணை மணம் செய்து கொள்வது நல்லது.பல பிரச்சினைகளை
இருவரும் தவிர்க்கலாம்.
*கால சர்ப்ப தோஷத்திற்கான பரிகாரங்கள்:*
*ராகுவின் நட்சத்திரங்களான* திருவாதிரை, சுவாதி, சதயம், போன்ற
நட்சத்திரங்கள், வரும் நாட்களில் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திரம்
வரும் நாட்களில், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகஸ்வரம்
என்னும் ராகு பகவான் குடிகொண்டிருக்கும் திருக்கோவிலுக்குச் சென்று
ராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்து வணங்கி வழிபட்டு வருவது
முதல் பரிகாரம் ஆகும்.
அதனால் தடைகள் அகலும். துன்பங்கள்
குறையும்.
*கேதுவை வழிபடக்* காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தசுவாமி திருக்கோவி
லுக்குச் சென்று வழிபட வேண்டும். அன்று அவருடைய (கேதுவினுடைய)
நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும்
நாட்களில் ஒன்றாக இருந்தால் நல்லது.
திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காளஹஸ்தி
என்கின்ற திருத்தலமும், இதற்கு உகந்ததாகும். அதுபோல ராமேஸ்வரமும்
தோஷ பரிகாரத்திற்கு மிகவும் உகந்த ஸ்தலமாகும்.
*கால சர்ப்ப தோஷம்* பாதிப்புகளில் இருந்து விடுபட
சர்ப்ப தோஷம் உடையவர்கள்,
குல கடவுள் வழிபாடுகளை மேற்கொள்வது பாதிப்பில் இருந்து விடுபட வழி வகுக்கும்.
*குறிஞ்சியின் இறைவனும்,* தமிழர்களின் குல கடவுளுமான முருகனின் 6 படை வீடுகளுக்கும் சென்று தமிழ் முறைப்படி வழிபாடுகள் செய்து வழிபட்டால் பாதிப்புகளில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.
*முருகனை வணங்கும் பொழுது தமிழ் தவிர்த்த பிற மொழிகளை*
*காதில் வாங்காமல் வணங்கினால் சிறப்பிலும் சிறப்பாக அமையும்*