லக்கினத்தில் செவ்வாய், சனி சேர, சந்திரன் நான்காம் வீட்டில், குரு ஏழாம் வீட்டில், சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில், சூரியன் சுக்கிரன் பத்தாம் வீட்டில், புதன் பதினொன்றாம் வீட்டில் நின்றால் ஜாதகர் நாடாளும் யோகம் பெற்றவராவார்.
லக்கினத்தில் குரு, இரண்டாம் வீட்டில் செவ்வாய், நான்காம் வீட்டில் சூரியன்,சுக்கிரன், பத்தாம் வீட்டில் சந்திரன், பதினொன்றாம் வீட்டில் சனி நின்றால் ஜாதகர் நாடாளும் யோகம் பெற்றவராவார்.
புதன், குரு, சுக்கிரன் லக்கினத்தில் இருந்து, சனி ஏழாம் வீட்டில் நின்றால் ஜாதகர் சுக போக வாழ்வும், செல்வம், செல்வாக்கு உடையவர் ஆவார். நாடாளும் அந்தஸ்து பெற்றவர்.