SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
முக்காலமும் அறிந்த சகாதேவன்
  • 2020-10-06 00:00:00
  • 1

முக்காலமும் அறிந்த சகாதேவன்

ஜோதிடத்தில் வல்லவன், முக்காலமும் அறிந்தவன் சகாதேவன்

சகாதேவன் பஞ்ச பாண்டவர்களில், எல்லோருக்கும் இளையவன். இவரை ஜோதிடத்தில் வல்லுனன் என்றும்  முக்காலமும் அறிந்த மிகப்பெரிய சோதிடன் என்றும் கூறிவார்கள். சகாதேவனுக்கு  இந்த வரம் எப்படி கிடைத்தது?.

பஞ்ச பாண்டவர்களின் தந்தையாகிய பாண்டு, தன் உயிர் பிரியும் நேரத்தில் தன் ஐந்து மகன்களையும் அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யாமல், ஐவரும் பிய்த்து தின்று விடவும் என்றும் , அவ்வாறு செய்தால் மூண்டு காலமும் (முக்காலமும்) உணரும் ஆற்றல் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் சொல்லி விட்டு உயிர் துறந்தார்.

இதை அறிந்த கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைத்தால் அது ஆபத்தாகி விடும் என்று உணர்ந்து, அதை தடுக்கும் நோக்கத்தில்,  பஞ்ச பாண்டவர்களை நோக்கி, சாகும் தருவாயில் உங்கள் தந்தை சுய நினைவின்றி, ஏதோ உளறிவிட்டு சென்றால், நீங்கள் அதனை  செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறு.  யாராவது பிணத்தை தின்பார்களா? இறந்தவர்களை தகனம் செய்வது தானே முறை என்று கூறிவிட்டு, பாண்டுவின் உடலை மிருகங்கள்  தின்று விடாமலும், வேறெங்கு இழுத்து சென்று விடாமலும் இருக்க காவலுக்கு விட்டு விட்டு, விறகு எடுக்க மற்றவர்களை அழைத்துச் சென்றார்.

 
இருப்பினும் பாண்டு தன் தந்தையின் கடைசி வாக்கை நிறைவேற்றும் பொருட்டு  சுண்டு விரலை மட்டும் உடைத்து தின்றுவிட்டார். இதனால் சகாதேவனுக்கு முக்காலமும் அறியும் சக்தி கிடைத்து விடுகிறது.
 
கிருஷனனரைத் தவிற, விறகு பொறுக்கச் சென்ற மற்றவர்கள்,  விறகுகளைப் பொருக்கி வந்து வைத்து விட்டு களைப்பில் இளைப்பாற அமர்ந்தனர். அப்பொழுது கிருஷ்ணர் அவருடைய தலைக்கு அரையடி மேல் ஒரு விறகு கற்றையை சுமந்து வருவதை சகாதேவன் பார்க்கிறார். இது மற்றவர்கள் கண்களுக்கு தெரியவில்லை. அருகில் வந்ததும் கிருஷ்ணரும் தன் தலை மேல் இருந்த விறகை கீழே போட்டு விட்டு தானும் களைப்படைந்தது போல அமர்கிறார். இதனைப் பார்த்த சகாதேவன் கிருஷ்ணருக்கு அருகில் சென்று, மற்றவர்கள் விறகினை சுமந்து வந்தார்கள். அவர்கள் களைப்படைவதில் ஞாயம் இருக்கிறது. ஆனால் நீங்கள் விறகு கற்றையை காற்றில் சுமந்து தானே வந்தீர்கள். உங்களுக்கு எப்படி களைப்பு ஏற்படும் என்று கேட்டார்.
 
இதனை கேட்ட கிருஷணர், சகாதேவனை தான் சென்ற பிறகு என்ன செய்தாய் என்று உண்மையை கூறும் படி  கேட்டார். அதற்கு சகாதேவன் பாண்டுவின் சுண்டு விரலை சாப்பிட்டதை சொன்னார்.
 
அதற்கு கிருஷ்ணர், எதிர்காலம் தேவ ரகசியம், மேலும் அது இறைவன் போக்கில் தலையிடுவது என்றும் அது அதர்மம் என்றும் கூறி, இனி தனக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்கு சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.
 
ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் தர்மர்  (யுதிஷ்டிரர் ) மிகவும் வற்புறுத்தி கேட்டதால் உங்களால் உங்கள் குலம் அழியும் என்று சகாதேவன் கூறிவிடுகிறார்.


Similar Posts : முக்காலமும் அறிந்த சகாதேவன், சகாதேவன்,

See Also:சகாதேவன் முக்காலமும் அறிந்த சகாதேவன்

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 177
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
மாமனாருக்கு கண்டம் தரும் ஜாதகம்
2019-10-06 00:00:00
fantastic cms
திருமண அமைப்பு இல்லாத ஜாதகம்
2019-10-06 00:00:00
fantastic cms
Vedic Astrology about struggle in life
2019-10-06 00:00:00
fantastic cms
Vedic Astrology about Many Relationships
2019-10-06 00:00:00
fantastic cms
Vedic Astrology about Rebirth
2019-10-06 00:00:00
fantastic cms
12 ல் சுக்கிரன்
2019-10-06 00:00:00
fantastic cms
ஆன்மீக ஈடுபாடு
2019-10-06 00:00:00
fantastic cms
Is Astrology Science
2019-10-06 00:00:00
fantastic cms
Unlocking the Mysteries of Astrology
2019-10-06 00:00:00
fantastic cms
Chinese Astrology
2019-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • Abishegam
  • After Death
  • Aries
  • Ascendant
  • Astrology
  • astrology software
  • astronomy
  • bangle
  • Barani
  • Beef Chili Fry
  • best astrology softw
  • Best Astrology software for windows
  • best-astrology-software
  • Bodhidharma in Nanjing
  • brahma-muhartham
  • Budhan
  • Chandiran
  • Chhajju Bania
  • Chhajju Bania's NDE
  • Chicken Biryani in English
  • Hinduism
  • software
  • Tamil astrology software

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com