சகாதேவன் பஞ்ச பாண்டவர்களில், எல்லோருக்கும் இளையவன். இவரை ஜோதிடத்தில் வல்லுனன் என்றும் முக்காலமும் அறிந்த மிகப்பெரிய சோதிடன் என்றும் கூறிவார்கள். சகாதேவனுக்கு இந்த வரம் எப்படி கிடைத்தது?.
பஞ்ச பாண்டவர்களின் தந்தையாகிய பாண்டு, தன் உயிர் பிரியும் நேரத்தில் தன் ஐந்து மகன்களையும் அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யாமல், ஐவரும் பிய்த்து தின்று விடவும் என்றும் , அவ்வாறு செய்தால் மூண்டு காலமும் (முக்காலமும்) உணரும் ஆற்றல் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் சொல்லி விட்டு உயிர் துறந்தார்.
இதை அறிந்த கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைத்தால் அது ஆபத்தாகி விடும் என்று உணர்ந்து, அதை தடுக்கும் நோக்கத்தில், பஞ்ச பாண்டவர்களை நோக்கி, சாகும் தருவாயில் உங்கள் தந்தை சுய நினைவின்றி, ஏதோ உளறிவிட்டு சென்றால், நீங்கள் அதனை செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறு. யாராவது பிணத்தை தின்பார்களா? இறந்தவர்களை தகனம் செய்வது தானே முறை என்று கூறிவிட்டு, பாண்டுவின் உடலை மிருகங்கள் தின்று விடாமலும், வேறெங்கு இழுத்து சென்று விடாமலும் இருக்க காவலுக்கு விட்டு விட்டு, விறகு எடுக்க மற்றவர்களை அழைத்துச் சென்றார்.