1. லக்கினத்திற்கு அஷ்டமாதிபதி லக்கினாதிபதி இவர்கள் பாபர்களுடன் கூடியிருந்தாலும் அல்லது பார்க்கப்பட்டாலும், நீச்ச, மூட, அஸ்தங்க தோஷமடைந்து பாப ஷேத்திரத்தில் ராகு கேதுக்களுடன் கூடி இருந்தாலும், இவர்களுக்கு சுபர் திருஷ்டி இல்லாதிருந்தாலும் ஆயுள் குறையும் அல்லது ஆயுள் இல்லாமல் போய்விடும்.
2. ஜென்ம காலத்தில் லக்கினத்தில் குரூரக் கிரகமிருந்து லக்கினாதிபதியும் குரூரருடன் கூடினாலும், சந்திரன் பாபருடன் கூடி பாப ஷேத்திரத்தில் இருந்து சுபப் பார்வையை அடையாது இருந்தாலும், அஷ்டமாதிபதியும் பாபர் சம்பந்தமடைந்து சுப திருஷ்டி அடையாதிருந்தாலும், லக்கினத்திற்கு இருபுறமும், லக்கினத்திற்கு ஏழாம் இடத்திற்கு இரு புறமும் பாபர் இருந்தாலும் ராசி சந்திகளில் பிறந்திருந்தாலும் ஆயுள் குறைந்து விடும் அல்லது சீக்கிரம் மரணம் உண்டாகும்.
3. தேய் பிறை சந்திரன் எட்டடிலும், ஏழில் செவ்வாயும் இருந்து லக்கினாதிபதி பலவீனமாகி இரண்டாம் அம்சத்தில் இருந்து பூசம், பூராடம் இவற்றில் பிறந்தாலும், தேய்பிறை சந்திரன் விருச்சிகத்திலிருக்க, 7ல் சனியிருந்து, கடகம், மகரம், மீனம் இவைகளில் எதிலாவது ஒன்றில் ஜனனமாகி இருந்தாலும், ஷீணச் சந்திரன் ஆறில் அல்லது எட்டில் அல்லது பன்னிரண்டில் இருந்து திரிகோணங்களில் குரு , ரவி (சூரியன்) கூடியிருந்தாலும், ஷீணச் சந்திரன் 1-4-7-10 இல் இருக்க சுபர் கூடாதிருந்தாலும் இதற்கே 8 இல் பாவர் இருந்தாலும் 2 நாள் ஆயுளே உண்டாகும்.
4. ஜென்ம லக்கினத்திற்கு எட்டில் சுபர் இருந்து சூரிய சந்திரர் இருவரும் ஜென்ம நக்க்ஷத்திரத்திற்கு 3 வது நக்க்ஷத்திரத்தில் இருந்து இவருடன் கேது கூடினால் பிறந்த 3 நாளிலும்
5. ஜென்ம லக்கினத்திற்கு மூன்றில் சூரிய சந்திரர் இருவரும் இருந்து செவ்வாய் கடகாம்ச மடைந்தால் பிறந்த 4 நாளிலும் மரணமுண்டாகும்.
6. ஜென்ம லக்கினத்திற்கு நான்கில் சூரியனும் திரிகோணத்தில் பாவருடன் கூடி சந்திரனும் இருக்கில் 5 நாள் ஆயுளும்
7. ஜென்ம லக்கினம் எதுவானாலும் லக்கினத்தில் செவ்வாய் சூரியன் இவர்களிருந்து, இவர்களுக்கு ஏழில் சந்திரனும் இருந்து மேற்படி லக்கினாதிபதி மூடமானால் 6 நாள் ஆயுளும்
8. ஜென்ம லக்கினத்திற்கு கேந்திரங்களில் சூரியன் சனி செவ்வாய் இவர்கள் இருந்தால் 10 நாள் அல்லது 10 மாதம் அல்லது 10 வருஷம் ஆயுளும் உண்டாகும்.
9. ஜென்ம லக்கினத்திற்கு 5-7-12 இவ்விடங்களில் சூரியன் சந்திரன் சனி இவர்கள் இருந்தால் பிறந்த ஜாதகன் தன் தகப்பன் தாய் இவர்களையும் நாசம் செய்து தானும் நாசமாவான்.
10. ஜென்ம லக்கினத்திற்கு 6-8-12 இல் சந்திரனிருந்து குரூரக் கிராகர்களால் பார்க்கப்பட்டும் இருந்தால் ஸத்தியோரிஷ்டம் நேரிடும். மேற்படி சந்திரன் சுபர்களால் பார்க்கப்பட்டு இருந்தால் 8 வருஷம் வரை ஆயுளுடனிருப்பார்கள். வக்கிரமடைந்த சுபர்கள் குரூரர்களால் பார்க்கப்பட்டிருந்தாலும் இதற்கே லக்கினத்தில் ஒரு சுபரும் இல்லாதிருந்தாலும் பிறந்த சிசு ஒரு மாதம் வரை உயிருடனிருக்கும்.
11. ஜென்ம லக்கினத்திற்கு ஐந்தில் சூரியன் சனி சந்திரன் செவ்வாய் இவர்கள் இருந்தால் அந்த ஜாதகனுடைய தாயும் சகோதிரரும் சீக்கிரமே மரணமடைவார்கள்.
12. ஜென்ம லக்கினத்தில் செவ்வாய் இருந்து பாபரால் பார்க்கப்பட்டு இருந்தாலும் அப்போது அஷ்டமத்தில் பாபரிருந்தாலும் லக்கினத்திற்கு இரண்டில் பாபர் இருந்தாலும்
13. ஜென்ம ல்க்கினத்தில் செவ்வாய் இருந்து ஏழாம் இடத்தில் சனி இருந்தாலும் அல்லது ஜென்ம லக்கினத்தில் சனியும் சப்தமத்தில் செவ்வாயுமிருந்தாலும், 2-8ம் இடங்களில் பாபரிருந்தாலும்,
14. சூரிய சந்திர ராசிகள் இவ்வாறாகிச் சந்திர சூரியரின் கூட ராகு கூடியிருந்தாலும், சனி செவ்வாய் இவர்களால் லக்கினம் பார்க்கப்பட்டாலும், அப்போது பிறக்கும் சிசு ஒரு பக்ஷம் தான் உயிருடன் இருக்கும்.
15. ஜென்ம லக்கினத்திற்குப் பத்தில் சனியும், ஆறில் சந்திரனும், எழில் செவ்வாயும் இருந்தால் ஜனித்த சிசு தாயாருடன் கூட மரிக்கும்.
16. ஜென்ம லக்கினத்தில் சனியும், எட்டில் சந்திரனும், 3ல் குருவும் இருந்தால் சிசு சீக்கிரமே மரித்து விடும்.
17. ஜென்ம லக்கினத்தில் ஒன்பதில் சூரியனும், எழில் சனியும், பதினொன்றில் குரு சுக்கிரரும் இருந்து, சூரிய ஓரையிலும் ஜனித்தால் சிசு ஒரே மாதம் தான் உயிருடன் இருக்கும்.
18 ஜென்ம லக்கினத்திற்கு பன்னிரண்டில் (எல்லா கிரகங்களும் இருந்தாலும்,) சூரியன், சுக்கிரன், ராகு, இவர்கள் இருந்தாலும், வெகுவாக சிசு நாசத்தை அடையும். இவர்கள் பார்த்தாலும் இப்படியே ஆகும்.
19. பாபருடன் கூடிய சந்திரன் ஜென்ம லக்கினத்திலாவது, லக்கினத்திற்கு ஏழாமிடத்திலாவது, ஒன்பதாவது இடத்திலாவது இருந்தால் மேற்படி சந்திரன் பார்க்கப் படாமலிருந்தால் சிசுவிற்கு மரணமுண்டாகும்.
20. சந்தியா காலத்தில் அதாவது சூரியன் உதயமாகி பாதி மண்டலம் தெரிய ஆரம்பிப்பதற்கு முந்தி மூன்று நாழிகையும், அஸ்த்தமன காலத்தில் சூரியன் பாதி மறைய ஆரம்பிப்பதிலிருந்து மூன்று நாழிகையும், ஆகிய சந்தியா காலத்தில் சந்திர ஓரையிலும், கண்டாந்தத்திலும் பிறந்தால் மரணம் உண்டாகும். மேலும் அப்போது சந்திரனும் பாபருடன் கூடி கேந்திரங்களிலிருந்தால் வெகு சீக்கிரமாகவே மரணமுண்டாகும்
21. சக்கிர பூர்வ, அபரார்த்தங்களென்கிற ராசி சக்கிரங்களில் குரூரர்கள் இருந்தாலும், கடக விருச்சிகங்கள் லக்கினங்களாகி, சுபர்கள் குரூர்களுடன் கூட மேற்படி லக்கினத்திலிருந்தாலும் மரணமே உண்டாகும்.
22. ஜென்ம லக்கினத்திற்கு ஆறு பன்னிரண்டாம் இடங்களில் பாபர் இருந்தாலும், எட்டாம் இடம், இரண்டாம் இடம் இவ்விடங்களில் இருந்தாலும், லக்கினம் இரண்டு பாபர்கள் மத்தியில் இருந்தாலும் பாலாரிஷ்டத்தினால் மரணம் உண்டாகும்.
23. லக்கினம், சப்தமம், சந்திரன் இவைகள் பாபருடன் கூடினாலும் சுபர்களால் பார்க்கப்படாதிருந்தாலும் சீக்கிரமாகவே மரணம் உண்டாகும்.
24. ஷீணசந்திரன் ஜென்ம லக்கினத்திலும் பாபர்கள் கேந்திர (அஷ்டம்)ங்களிலு மிருந்தாலும் அந்த ஜாதகன் சீக்கிரமாகவே மரணத்தை அடைவான்.
25. சந்திரன் பாபர்களுடன் கூடி அல்லது பாபர் மத்தியிலிருந்து லக்கினத்தினின்றும், எட்டு, ஏழு, பன்னிரண்டு இந்த ஸ்தானங்களில் இருந்தாலும் லக்கினத்திலேயே பாபருடன் பாபர் மத்தியிலிருந்தாலும் வெகு சீக்கிரமாகவே மரணமுண்டாகும்.
26. ஜென்ம லக்கினத்திற்கு இரு புறமும் பாபர்கள் இருந்து சந்திரனும் (மேற்படி) பாபர் மத்தியில் இருந்தாலும் ஏழு எட்டு இந்த ஸ்தானங்கள் பாபருடன் கூடினாலும் பிறந்த பிள்ளை தாயுடன் கூட மரிக்கும்
27. ஜென்ம லக்கினத்தினின்றும், ( எட்டு, ஒன்பது, பன்னிரண்டு இந்த ஸ்தானங்களில்) செவ்வாய், சூரியன், சனி இவர்களிருந்து சுபர்களாலும் பார்க்கப்படாது இருந்தால் ஜாதகன் நிச்சயம் சீக்கிரமாகவே மரணம் அடைவான்.
28. குரூரக் கிரகங்கள் எந்த திரிகோணத்தில் இருந்தாலும், எந்த லக்கினமானாலும், ஷீணசந்திரன் அந்த ஸ்தானத்தில் இருந்தால் ஜீவித்திருப்பவனும் கூட சத்தியோரிஷ்ட மடைவான்.
29. ஜென்ம லக்கினத்திற்கு 8 மாதி 12 மாதியுடன் கூடி மூன்றிலேயே இருந்து ராகுவின் பார்வையை அடைந்திருந்தால் ஜனித்த ஏழாவது மாதத்தில் மரணம் உண்டாகும்.
30. ஜெனம லக்கினத்திற்கு நான்கில் ஏழாம் அதிபதி பாபருடன் கூடி இருந்தாலும் சுபருடன் கூடாமலிருந்தால் ஏழாம் நாளிலேயே மரணம் உண்டாகும்
31. ஜென்ம லக்கினத்திற்கு ஏழாமதிபதி பன்னிரண்டில் ஒன்பதாமதிபதியுடன் கூடி இருந்தாலும், ராஜ்ஜியாதிபதியால் பார்க்கப்பட்டால் பிறந்த ஒரே இரவில் மரணம் உண்டாகும்.
32. ஷஸ்டாஷ்டமங்களில் சுபர் இருந்து ஷெ ஸ்தானங்களில் ஒன்று சூரியனுடைய ஸ்தானமாகி சந்திரனால் பார்க்கப்பட்டிருந்தால் மரணமே உண்டாகும். இத்துடன் உதய லக்கினத்தில் கேது இருந்தால் பிறந்த இரண்டாவது மாதத்தில் உயிர் பிரியும்
33. ஜென்ம லக்கினத்தில் சனி இருந்து ஷெ சனி பாபருடன் கூடி இருந்தால் ஜனித்த பதினாறாவது வருஷத்தில் மரணம் நேரிடும். இவர்களை பாபர்களே பார்த்தால் ஒரே வருஷத்தில் மரண முண்டாகும்
34. ஆறு எட்டாம் இடங்களில் சந்திரன் இருந்து பாபரால் பார்க்கப்பட்டால் சத்தியோ மரணமும், சுபர்களால் பார்க்கப்பட்டால் ஆயுள் எட்டு வருஷமும், சுபர் பாபர் இருவர்களாலும் பார்க்கப்பட்டால் ஆயுள் நான்கு வருஷமும் ஏற்படும்.
35. ஜென்ம லக்கினத்திற்கு மூன்றாம் இடத்தில் சந்திர சூரியயிருந்து, அந்த ஸ்தானம் மீனமுமாகின் வியாதி ஏற்பட்டு பிறந்த மூன்றாம் நாளிலேயே மரணமுண்டாகும்.
36. சந்திர சூரியனுடன் கூடி, ஐந்து ஒன்பதாம் இடங்களில் இருந்துவிடின் இருபது நாளுக்கு மேல் சிசு ஜீவித்திருக்காது.
37. சூரியன் பாப ஓரையிலிருந்து குருவும் கேந்திரங்களில் இல்லாவிடில் லக்கினத்தில் மற்றவர் எவரிருந்தாலும் பிறக்கும் சிசு மரணத்தை அடையம்
38. வெகு கிரகங்கள் கூடி எட்டாமிடத்தின் சந்தியிலிருக்கும் போது எந்த ஜாதகர் பிறந்தாலும் ராசி சந்தியில் ஜனித்தவருக்கு வெகு கிரகங்கள் எட்டா மிடத்திலிருந்தாலும், அந்த ஜாதகன் பிறந்து ஒரு மாதம் அல்லது ஒரு வாரம் வரை தான் ஜீவித்திருப்பான்
39. செவ்வாய் சத்துரு ஓரையில் இருந்து அவருடைய கேந்திரத்தில் சுக்கிரனிருந்தால் மறுபடியும் ஷெ ஓரையில் செவ்வாய் சந்திரனிவர்கள் வரும் போது ஷெ ஜாதகர்கள் மரணத்தை அடைவார்கள்
40. ஜென்ம லக்கின ஓராதிபதி எட்டாமிடத்திலிருந்து எல்லாப் பாபக் கிரகங்களாலும் பார்க்கப்பட்டால் ஜாதகன் ஜனித்த நான்காவது மாதத்தில் சந்தேகமின்றி மரிப்பான்.
41. ஜென்ம லக்கினாதிபதியும் ராகுவும் கூடியிருந்தாலும், லக்கினத்திற்கு ஆறு எட்டாமிடங்களில் சந்திரனிருந்தால ஜாதகன் பிறந்து இருபது தினங்களே ஜீவித்திருப்பவன்
42. ஜென்ம.லக்கினத்திற்கு நான்காமிடத்தில் ராகு இருந்து சந்திரன் கேந்திரத்திலிருந்தால் ஜாதகன் பிறந்து இருபது நாட்களே ஜீவித்திருப்பான்.
Similar Posts : ஆயுர்த்தாயம் அல்லது அஷ்டமபாவம், See Also:ஆயுர்த்தாயம் அல்லது அஷ்டமபாவம்