பிரம்ம முகூர்த்தம், சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிடுகிறது. இந்த நேரத்தில் திருமணம், வீட்டு கிரஹப்பிரவேசம் போன்ற நல்ல காரியங்களைச் செய்யலாம்.
பொதுவாக காலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று கூறுவார்கள். ஏனெனில், இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே மறுபிறவி போலாகும். ஆதலால், ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை படைத்தல் (சிருஷ்டித்தல்) என்று சொல்வார்கள். இந்தத் தொழிலை பிரம்மன் செய்வதால், இவரது பெயராலேயே, விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று கூறுகிறார்கள். பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு நாள், நட்சத்திர, வார, திதி, யோக தோஷங்கள் என்று எதுவும் கிடையாது. இது எப்போதுமே நல்ல நேரம் (சுபவேளை) தான். இந்த நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றி என்பதாக நம்பப்படுவதால், பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவார்கள். இதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது தீர்கமான நம்பிக்கை.
உபாசனைக்கு, காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இந்த நேரத்தில் ஜீவன்களை எழச் செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது. மந்திரங்கள் ஜெபிப்பவருடைய மனதில் இருந்து படிப் படியாக அவருடைய நுண் அலைகளை, ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் ஜெபம் செய்பவரது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் ஒருவர் செய்யும் ஜெபம் அவர் செல்லும் இடமெங்கும் அவரை அறியாமலே பின் தொடர்ந்து சென்று நன்மைகளை விளைவிக்கின்றது.
இதனால் தான் அதிகாலையில் எழுவதும், காலையில் படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறினார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடும் பழக்கம் ஏற்படுத்தப் பட்டதும் இதனால் தான்.
இந்து புராண இதிகாசங்களில், முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறியலாம். அவர்களது அமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் நாம் படித்திருக்கிறோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி உள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம். இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது நமது முன்னோர்களின் அறிவு.
Similar Posts : பிரம்ம--முகூர்த்தம், Measurably Improve Your Quality of Life32, நவகிரகங்கள் என்றால், Bodhidharma Travel to China, Jotimayamana Jothidam Part I, See Also:travel passport