உருளைக்கிழங்கை, சிறு சதுரத்துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். கொதிக்கிற வெந்நீரில் போட்டு, உடனே எடுத்துவிடுங்கள். அதில் கார்ன்ஃப்ளார், மிளகாய்தூள், உப்பு, அரிசிமாவு ஆகியவற்றைப் போட்டு, லேசாகத் தண்ணீர் தெளித்துப் பிசறிக்கொள்ளுங்கள். வாசனை பிடிக்கும் என்றால், சிறிது சோம்புத்தூள் சேர்த்துப் பிசறலாம். பிறகு, எண்ணெயைக் காயவைத்து பிசறிவைத்த கிழங்கைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள். பொரித்து வைத்த நிமிடத்தில் ‘பொசுக்’கெனக் காலியாகிவிடும் பாருங்கள்.
உருளைக்கிழங்கு வறுவல்
Similar Posts : வத்த குழம்பு பொடி, குட்டி உருளைக்கிழங்கு வறுவல், Ingredients for Sambar powder , ஜிலேபி, வாழைக்காய் சாப்ஸ், See Also:உருளைக்கிழங்கு வறுவல் சமையல்