விருந்தினர் தங்கும் அறை – வாஸ்து சாஸ்திரம்விருந்தினர் தங்கும் அறை – வாஸ்து சாஸ்திரம்:
நம்மை தேடி வந்த விருந்தினர் நம்முடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அமைய வேண்டும் என்று வாஸ்து சாஸ்த்திரம் கூறுகிறது
நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் விருந்தினர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். பண்டைய இந்திய நூல்களில் கூறியுள்ள படி, விருந்தினர் கடவுளின் ஒரு பிரதிநிதி என்று கருதி விருந்தோம்பல் செய்வது நமது மரபு. விருந்தினரின் நலனைப் பற்றி அக்கறைக் கொண்டு அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் பிறந்ததிலிருந்து தன் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும். அத்தகைய விருந்தினர் தங்கும் அறை எவ்வாறு, எந்த திசையில் அமைய வேண்டும் என்பதையும் வாஸ்து சாஸ்திரம் கருத்தில் கொண்டு மிகத் தெளிவாக ஒரு வரைமுறையை கூறுகிறது.
நம்மை தேடி வந்த விருந்தினர் நம்முடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் விருந்தினர் தங்கும் அறையின் இடம் அமைய வேண்டும் என்று வாஸ்து சாஸ்த்திரம் கூறுகிறது. நாம் என்னத்தான் விருந்தோம்பலில் விருந்தினரை மகிழ்வித்தாலும் அவர்கள் தாங்கும் இடம் சரியில்லை என்றால் அவர்களுக்கு நிறைவான ஒரு திருப்தியைத் தராது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஒரு விருந்தினர் அரை எவ்வாறு அமைய வேண்டுமெனில்
- விருந்தினர் தங்கும் இடம் (ரூம்) வட மேற்கு திசையில் அமைந்திருக்க வேண்டும். இது வாயுவைக் (காற்றை) குறிப்பதால் நிரந்தரமின்மையைக் குறிக்கிறது. ஆதலால் விருந்தாளி குறுகிய காலம் மட்டுமே தங்கிச் செல்லும் வகையிலும், திருப்தியான மனநிலையுடன் வெளியேறவும் உதவிப் புரியும்.
- எக்காரணம் கொண்டும் விருந்தினரின் படுக்கையறை தென்மேற்கு திசையை நோக்கி இருக்கக் கூடாது.
- தென் கிழக்கு மற்றும் வட கிழக்கு திசையும் விருந்தினருக்கு உகந்ததல்ல. ஏனெனில் விருந்தினர்கள் குறுகியக் கால அளவு மட்டுமே தங்கும் நோக்கில் அந்த அறை அமைந்திருக்க வேண்டும். அவர்கள் நம்முடனேயே நிரந்திரமாக தங்கிவிடும் படி சூழ்நிலை அமைந்துவிடக் கூடாது.
- விருந்தினர் அறையில் அதிகப் படியான ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வடக்கு மற்றும் கிழக்கு திசை நோக்கி இருப்பது நலம்.
- விருந்தினர் அறையில், படுக்கை (கட்டில்) தெற்கு சுவற்றின் அருகே அமைந்திருப்பது நலம்.
- விருந்தினர் அறை வெள்ளை, ஊதா, சாம்பல், மென்மையான நீளம் போன்ற வண்ணத்தில் ஏதாவது ஒன்றில் இருந்தால் நல்லது.
- விருந்தினர் அறையில், அவர்கள் சென்ற பிறகு அவர் எந்த பொருளையும் விட்டுச் சென்று விடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளள வேண்டும்.
- நம்முடைய முதன்மை படுக்கையறை ( master bedroom) மற்றும் சமையலறை அவர்கள் தங்கியிருக்கும் அறையிலிருந்து தெரியாமல் இருக்க வேண்டும்.
Similar Posts :
What is meant by Vimshothiri Dasa,
1-Love Vashikaran,
Sakadeva knows present past future,
குளியல் மற்றும் கழிவறை வாஸ்து,
Jotimayamana Jothidam Part II, See Also:
welcome