SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
புலஸ்தியர்
  • 2019-10-06 00:00:00
  • 1

புலஸ்தியர்

புலஸ்தியர்
புலம் என்றால் தவம். இவர் தவத்தினால் புகழ் பெற்றவர் ஆதலால் இப்பெயர் பெற்றார் என அபிதான சிந்தாமணி நூல் குறிப்பிடுவதன் மூலம் உணரலாம். கமலமுனியின் பேரன் தான் புலஸ்தியர் என்றும், அகத்தியருக்கு பிரியமான சீடன் (அகத்தியரின் முதல் மாணாக்கராக விளங்கியவர்)  என்றும், சிவராஜ யோகியான இவர் திருமந்திர உபதேசம் பெற்றவர் என்றும் போகர் தனது போகர் 7000 என்னும் நூலில் சொல்லியிருக்கிறார்.  இவர் சிவராச யோகி என்ற பெயரும் பெற்றவர். இவரே முதலில் புராணங்களை வெளிப்படுத்தியவர் என்பர்.     

பொதிகை மலைச் சாரலில் உள்ள பாபநாசம் என்னும் இடத்தில் சமாதியடைந்த இவர், தேரையாருக்கு உபதேசம் செய்ய வெளியே வந்து, அவருக்கு போதித்து விட்டு இரண்டாவது முறையாக ஆவுடையார் கோவிலில் சமாதியாடைந்தார் என்று சொல்லப்படுகிறது. பிரம்மாவின் புத்திரர்களில் ஓருவரான புஸ்திய மகரிஷி, மேரு மலையில் தவம் செய்து வந்தார். அப்போது அங்கே வந்த தெய்வ நங்கையர்களது கூச்சலால் புலஸ்தியரின் தவத்துக்கு இடையூறு ஏற்பட்டது. கோபம் கொண்ட புலஸ்தியர், இங்கு வரும் கன்னிப் பெண்கள் கர்ப்பிணியாக கடவர் என்று சபித்தார். இதை அறிந்த பெண்கள் அந்த பகுதிக்கு வருவதையே தவிர்த்தனர். 

இந்த நிலையில் திரணபிந்து என்ற ராஜரிஷியின் மகள் ஆவிற்பூ. முனிவரது சாபம் பற்றி அறியாமல், அவர் தவம் செய்யும் இடத்துக்கு வந்தாள். அவரை பார்த்த மறு நிமிடமே கர்ப்பமானாள். பின்னர். தன் மகளை ஏற்க வேண்டும் என்று திரணபிந்து வேண்டிக் கொள்ள அவளையே மணம் புரிந்தார் புலஸ்தியர். மனைவியின் நல்ல குணங்களால் மனம் மகிழ்ந்த புலஸ்தியர் நம் மகன் என்னை போலவே மகாதபஸ்வியாக இருப்பான் என்று ஆசிர்வதித்தார். அதன்படி பிறந்த விஸ்ரவஸ் மகரிஷியாக விளங்கினார். இவருக்கு தன் மகள் இளிபிளையை மணம் செய்து வைத்தார் பரத்வாஜ மகரிஷி. இவர்களுக்கு பிறந்தவளே குபேரன். இதனிடையே மகாவிஷ்ணுவால் இலங்கையில் இருந்து பாதாளத்துக்கு விரட்டப்பட்டனர். அசுரர்கள். இதனால் கலக்கமுற்ற அசுரர்களின் தலைவன் சுமாலி. இனி நம் குலம் சிறப்பது எவ்விதம்? என்று சிந்தித்தான். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக தன் மகள் கைகசியை அழைத்தான். 

அவளிடம் விஸ்ரவஸ் என்பவர் மகா தபஸ்வி. பரத்வாஜ முனிவரின் மகளை மணந்து செல்வத்துக்கு அதிபதியான குபேரனை மகனாக பெற்றவர். அவரிடம் சென்று உன்னை மணந்து கொள்ளும்படி வேண்டிக்கொள் அவர் உன்னை மணந்தால், உனக்கும் குபேரன் போல சிறப்புள்ள மகன் பிறப்பான் என்ற சுமாலி இன்னொன்றையும் சொன்னான். நானே போய் என் மகளை திருமணம் செய்து கொள் என்று கேட்டால் அசுரனின் மகளை நான் திருமணம் செய்வதா? முடியாது என்று மறுத்து விடுவார். எனவே நீ மட்டும் செல். தானே விருப்பத்துடன் வரும் கன்னிப் பெண்ணை மணம் புரிய மறுப்பது அதர்மம் என்ற தர்மசாஸ்திரத்தை அறிந்தவர் அவர். உன்னை நிச்சயம் ஏற்றுக்கொள்வார். நம் குலம் மீண்டும் தழைக்கும். என்றான் சுமாலி ஒரே மூச்சில். அதன்படி கைகசி, விஸ்ரவஸிடம் சென்று தனது விருப்பத்தை சொல்லி தங்கள் மூலம் எனக்கு குழந்தை வேண்டும். எனவே என்னை இப்போதே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றாள். அதற்கு விஸ்ரவஸ், இது நல்ல நேரம் அல்ல. நாம் இப்போது சேர்ந்தால் அசுரனே பிறப்பான் என்றார். கைகசியோ இப்போதே மணம் புரியுங்கள் என்று வற்புறுத்தினாள். அதற்கு அவர் நமக்கு நான்கு குழந்தைகள் பிறப்பர். மூவர் அசுர குணங்களை கொண்டிருப்பர். இதில் ஒரு பெண்ணும் உண்டு. நான்காவது பிள்ளை தர்மாத்மாவாக இருப்பான் என்று ஆசீர்வதித்தார். அதன்படி விஸ்ரவஸுக்கும் கைகசிக்கும் பிறந்தவர்களே ராவணன், கும்பகர்ணன், சூர்பனகை, விபீஷணன். இதில் கடைசி மகனான விபீஷணன் தர்மாத்மாவாகவே வாழ்ந்தான் என்கிறது புராணம்.

இவர் இயற்றிய நூல்கள் : 
வைத்திய வாதம் 1000 
வாத சூத்திரம் 300 
கற்ப சூத்திரம் 300 
ஞான சூத்திரம் வைத்திய 100 
வாதம் 100 
உழலைச் சுருக்கம் 13 
புலஸ்தியர் வைத்தியவாதம் 
புலஸ்தியர் வாத சூத்திரம்
புலஸ்தியர் வழலைச் சுருக்கம் 
புலஸ்தியர் ஞான வாத சூத்திரம் 
புலஸ்தியர் வைத்தியம் 
புலஸ்தியர் கற்ப சூத்திரம் 
ஆகிய நூல்களை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது. 

பெயர் :புலஸ்தியர்
உத்தேச காலம் :
குரு : அகத்தியர்
சீடர்கள் :
மனைவி : திரணபிந்துவின் மகள் ஆவிருப்பு
மகன் : விசித்திர வாசு
சமாதி : பொதிகை மலைச்சாரலில் பாபநாசம்
மரபு:சிங்களவர்


Similar Posts : திண்டுக்கல் ஓதி சுவாமிங்கள், ராமதேவர், திருவள்ளுவர், கருவூரார், திருச்சி மாக்கான் சுவாமிகள்,

See Also:புலஸ்தியர் சித்தர்கள்

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 177
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
சண்டிகேஸ்வரர் பற்றிய தகவல்
2016-10-06 00:00:00
fantastic cms
சந்தனம் விபூதி எதற்காக
2019-10-06 00:00:00
fantastic cms
சந்திரன்
2019-10-06 00:00:00
fantastic cms
சரணாகதி–அர்த்தம் என்ன
2019-10-06 00:00:00
fantastic cms
சரஸ்வதி வழிபாடு
2019-10-06 00:00:00
fantastic cms
சனி பகவான்
2016-10-06 00:00:00
fantastic cms
சாங்கு சித்த சிவலிங்க நாயனார்
2019-10-06 00:00:00
fantastic cms
திருமூலரின் ஜீவசமாதி
2019-10-06 00:00:00
fantastic cms
சாமிக்கு படைத்தல் ஏன்
2019-10-06 00:00:00
fantastic cms
சிதம்பரம் கோவில்
2019-10-06 00:00:00
  • After Death
  • Aries
  • Astrological predictions
  • Astrology originate
  • astrology software
  • astrology-preliminaries
  • astronomy
  • bangle
  • Barani
  • Best Astrology Software
  • best-astrology-software
  • Bodhidharmas Guru
  • Cancer
  • Chandiran
  • Chhajju Bania
  • Chick
  • Chicken Biryani in English
  • Hinduism
  • Mangal Singh
  • Mangal Singh's NDE
  • medicine
  • Moon
  • software
  • குங்குமம்

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com