தேவையான பொருட்கள்
செய்முறை
உளுத்தம் பருப்பு கால் கிலோ மற்றும் ஒரு மேசைக்கரண்டி பச்சரிசி இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் விட்டு ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரை 400 கிராம் எடுத்து அகன்ற பாத்திரத்திலிட்டு கால் லிட்டர் தண்ணீர் விட்டு வாணலியில் பாகு காய்ச்ச வேண்டும். பிறகு கலவை பாகு கம்பி பதத்திற்கு வந்ததும் சிறிது கேசரி பவுடர் போட்டு ஆறாமல் இருக்கும் விதத்தில் அடுப்பில் சிறிது தணல் போட்டு அதில் வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து கால் கிலோ நெய் அல்லது எண்ணெய் விட்டுக் நன்கு காயவிடவும். கனமான கைக்குட்டை போன்ற துணியால் சுண்டுவிரல் நுழையக் கூடிய அளவு ஒரு சின்ன ஓட்டைப் போட்டு அதில் ஒரு கைப்பிடி மாவை எடுத்து வைத்து கைமுறுக்கு பிழிவது போன்று எண்ணெயில் மூன்ற அல்லது நான்கு சுற்றுகள் வட்டமாகப் ஒரே இடத்தில ஜிலேபி போல பிழிந்து கொள்ளவும். ஜிலேபி இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பாகில் போட்டுக் சிறிது ஊற விடவும். இதேபோன்று எல்லா மாவையும் ஜிலேபிளாகப் பிழிந்து பாகில் போட்டு ஊறியதும் எடுத்து வைக்கவும். ஜிலேபி ரெடி.
Similar Posts : வாழைக்காய் சாப்ஸ், How to Make Potato Fry, How to Make Vazhakkai Varuval, சேனைக்கிழங்கு மிக்சர், மஷ்ரூம் சாப்ஸ், See Also:ஜிலேபி சமையல்