சேனைக்கிழங்கை நன்கு மண் போகக் கழுவி, கடலைப்பருப்பு அளவுக்கு சிறு சிறு சதுரங்களாக வெட்டிக்கொள்ளுங்கள். மஞ்சள்தூள், உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வையுங்கள். ஒரு கொதி வந்ததும், இறக்கி தண்ணீரை வடித்துவிடுங்கள். எண்ணெயைக்கா யவைத்து, கிழங்கைப் போட்டு மொறுமொறுவெனப் பொரித்தெடுங்கள். கறிவேப்பிலையையும் போட்டுப் பொரித்து அள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில், பொரித்த கிழங்கு, பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை, மிளகாய்தூள் போட்டு நன்கு கலந்துக் கொள்ளவும். சேனைக்கிழங்கு மிக்சர் தயார்.
Similar Posts : எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி, மினி மதியம் உணவு, முள்ளங்கி சாப்ஸ், How to Make Idly powder, முட்டை ஆம்லெட், See Also:சேனைக்கிழங்கு மிக்சர் சமையல்