அடால்ஃப் ஹிட்லரின் குடும்பப் பின்னணி, ஆரம்பகால வாழ்க்கை, காதல் வாழ்க்கை, திருமணம் மற்றும் மரணம் உட்பட அவரது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைக் ஜோதிட முறையில் ஆராயலாம்.
|
சூரியன்
செவ்வாய்
புதன்
சுக்கிரன் (வ)
|
மாந்தி
|
ராகு
|
|
ராசி
|
சனி
|
|
|
சந்திரன்
குரு
கேது
|
|
ல
|
|
|
மாந்தி
|
புதன்
ராகு
|
சூரியன்
|
|
நவாம்சம்
|
|
சனி
|
சந்திரன்
குரு
|
|
செவ்வாய்
சுக்கிரன்(வ)
கேது
|
ல
|
|
அடால்ஃப் ஹிட்லர் பிறந்த விவரங்கள்
தேதி : ஏப்ரல் 20, 1889
நேரம் : 18:30 (6:30 PM)
உள்ளூர் நேரம் (UTC +1)
இடம் : Braunau am Inn, Austria-Hungary (தற்போது ஆஸ்திரியா)
ஜாதக பொது விதிகள்
பாவாதிபதிகள்
*ஒன்றாம் பாவாதிபதி (கேந்திரம்) சுக்கிரன்
*இரண்டாம் பாவாதிபதி (பணபரம்) செவ்வாய்
*மூன்றாம் பாவாதிபதி (ஆபோக்லிமம்) குரு
*நான்காம் பாவாதிபதி (கேந்திரம்) சனி
*ஐந்தாம் பாவாதிபதி (திரிகோணம்) சனி
*ஆறாம் பாவாதிபதி (ஆபோக்லிமம்) குரு
*ஏழாம் பாவாதிபதி (கேந்திரம்) செவ்வாய்
*எட்டாம் பாவாதிபதி (பணபரம்) சுக்கிரன்
*ஒன்பதாம் பாவாதிபதி (திரிகோணம்) புதன்
*பத்தாம் பாவாதிபதி (கேந்திரம்) சந்திரன்
*பதினொன்றாம் பாவாதிபதி (பணபரம்) சூரியன்
*பன்னிரண்டாம் பாவாதிபதி (ஆபோக்லிமம்) புதன்
கிரக சேர்க்கைகள்
சந்திரன்,குரு,கேது, சேர்க்கை
சூரியன்,செவ்வாய்,புதன்,சுக்கிரன், சேர்க்கை
மறைவு ஸ்தானங்கள்
ஒரு ஜாதகத்தில் 3,6,8,12 ஆகிய இடங்கள் மறைவு ஸ்தானங்கள் அல்லது துர்ஸ்தானங்கள் எனப்படும். இந்த இடங்களில் சுப கிரகங்கள் எனப்படும் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் நின்றால் சுப பலன்களை தரமாட்டார்கள். மாறாக் 3,6,8,12 ம் இடங்களில் பாவ கிரகங்கள் எனப்படும் சூரியன், செவ்வாய், சனி, ராகு - கேது நின்றால் ஜாதகருக்கு எந்த விதமான கெடு பலன்களையும் தராது.
இந்த ஜாதகத்தில் மறைவு ஸ்தானத்திலுள்ள கிரகங்கள்
சந்திரன் லக்னத்துக்கு 3 இல் மறைவு ஸ்தானத்தில் உள்ளது
குரு லக்னத்துக்கு 3 இல் மறைவு ஸ்தானத்தில் உள்ளது
ராசிகளுக்குக் கேந்திரபலம்
மிதுனம், கன்னி, துலாம், தனுசின் முற்பகுதி, கும்பம் இவைகள் மனுஷ்ய ராசிகள்.
மேஷம், ரிஷபம், சிம்மம், தனுசின் பிற்பகுதி மகரத்தின் முற்பகுதி இவைகள் மிருக ராசிகள்
விருச்சிகம், கடகம், மகரத்தின் பிற்பகுதி, மீனம் இவை ஜல ராசிகள்.
மனுஷ்ய ராசிகள் லக்னத்திலும், மிருக ராசிகள் பத்தாம் பாவத்திலும் விருச்சிக ராசியானது 7-வது பாவத்திலும், ஜல ராசிகள் 4-வது பாவத்திலும் பலமுள்ளவை.
ஜாதகத்தில் கிரகங்களின் வீடுகள்
சனி பகை வீட்டில் உள்ளது
ராகு நட்பு வீட்டில் உள்ளது
கேது நட்பு வீட்டில் உள்ளது
கிரக பார்வைகள்
சூரியன் பார்வையுள்ள ராசி
சூரியன் மேஷம் ராசியில் இருந்துக் கொண்டு, (ஏழாம் பார்வையாக) துலாம் ராசியை பார்க்கிறார்.
சந்திரன் பார்வையுள்ள ராகு
சந்திரன் தனுசு ராசியில் இருந்துக் கொண்டு, (ஏழாம் பார்வையாக) மிதுனம் ராசியை பார்க்கிறார்.
செவ்வாய் பார்வையுள்ள சனி
செவ்வாய் மேஷம் ராசியில் இருந்துக் கொண்டு,நான்காம் பார்வையாக கடகம் ராசியையும், (எட்டாம் பார்வையாக)விருச்சிகம் ராசியை பார்க்கிறார். (ஏழாம் பார்வையாக) துலாம் ராசியை பார்க்கிறார்.
புதன் பார்வையுள்ள ராசி
புதன் மேஷம் ராசியில் இருந்துக் கொண்டு, (ஏழாம் பார்வையாக)துலாம் ராசியை பார்க்கிறார்.
குரு பார்வையுள்ள சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், ராகு
குரு தனுசு ராசியில் இருந்துக் கொண்டு, ஐந்தாம் பார்வையாக மேஷம் ராசியையும், (ஒன்பதாம் பார்வையாக)சிம்மம் ராசியை பார்க்கிறார். (ஏழாம் பார்வையாக) மிதுனம் ராசியை பார்க்கிறார்.
சுக்கிரன் பார்வையுள்ள ராசி
சுக்கிரன் மேஷம் ராசியில் இருந்துக் கொண்டு, (ஏழாம் பார்வையாக) துலாம் ராசியை பார்க்கிறார்.
சனி பார்வையுள்ள சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன்
சனி கடகம் ராசியில் இருந்துக் கொண்டு,மூன்றாம் பார்வையாக கன்னி ராசியையும், (பத்தாம் பார்வையாக) மேஷம் ராசியை பார்க்கிறார். (ஏழாம் பார்வையாக) மகரம் ராசியை பார்க்கிறார்.
நட்சத்திரம் : பூராடம். பாதம் : 1
குண அமைப்பு; பூராடம் போராடும் என்று கூறப்படுவதைப் போல ஹிட்லர் எந்த பிரச்சனைகளையும் கண்டும் பயப்படாமல் எப்பாடு பட்டாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்ற நினைத்தவர். எந்த வொரு விஷயத்தையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர். அவரின் ஆத்திரத்திலும், ஆவேசத்திலும் கூட ஒரு நளினம் இருக்கும்.
பூராடத்தில் நூலாடாது என்ற பழமொழி இருந்தாலும் இது தவறானதாகும். இதனை பெண்களுக்கு மாங்கல்ய பலம் இருக்காது என்று கூறுவார்கள். ஆனால் நூல் என்பதை பாட நூலாக கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது சிறு வயதில் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருக்கும்.
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்ணால் பார்த்ததை கையால் வரையும் ஆற்றல் கொண்டவர்கள் என்பது பொதுக் கருத்து. அதற்கேற்ப ஹிட்லர் தனது ஆரம்ப காலங்களில் ஓவியம் வரைதலை விரும்பினார். அவர் Vienna Academy of Fine Artsல் இரண்டு முறை விண்ணப்பித்தார், ஆனால் இரண்டு முறையும் அவரது வேண்டுதல் நிராகரிக்கப்பட்டது, இது அவரை கணிசமாக பாதித்தது. இந்த பின்னடைவு இருந்தபோதிலும், அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஓவியம் வரையும் கலையில் ஆர்வத்தைத் தொடர்ந்தார், குறிப்பாக முதலாம் உலகப் போரில் அவர் சிப்பாயாக இருந்த காலத்தில். அவரது கலை முயற்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் அவரது சில கலைப்படைப்புகள் இன்றுவரை நிலைத்திருக்கின்றன. , அவைகள் கலை உலகில் பரவலாக கொண்டாடப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படவில்லை.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான
Sciatica எனப்படும் கீழ் முதுகு மற்றும்/அல்லது கால்களில் வலி, கூச்ச உணர்வு, உணர்வின்மை அல்லது பலவீனம் ஏற்படுவது
நுரையீரல் பிரச்சனைகள் - தனது ஆரம்ப காலங்களில் அதிக புகைப்பிடிப்பவராக இருந்தார், ஆனால் பின்னர் அதை விட்டுவிட்டார்.
லாரன்கிடிஸ் (laryngitis) மற்றும் தொண்டை பிடிப்பு (throat spasms) உள்ளிட்ட நாள்பட்ட சுவாசப் பிரச்சினை
லும்பாகோ எனப்படும் கீழ் முதுகு வலி (Lumbago) - நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் உருவான இடுப்பு மற்றும் முழங்கால் பிரச்னைகள், முதலாம் உலகப் போரின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் அவரது உடலின் ஒட்டுமொத்த அழுத்தத்தின் விளைவாக அவரது வலது கால் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டது.
இது மட்டுமின்றி
பார்கின்சன் நோய்: பிற்காலங்களில் ஏற்படும் நடுக்கம், விறைப்பு மற்றும் மெதுவான இயக்கம்
அஜீரண பிரச்சனைகள்: மலச்சிக்கல் மற்றும் வாய்வு உட்பட்ட நாள்பட்ட செரிமான பிரச்சனைகள்
இதயப் பிரச்சனைகள்: (முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை)
மனநல பாதிப்பு: மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிற உளவியல் கோளாறுகள் (சந்திரன் கேதுவுடன் இருப்பதால் மனநலம் மற்றும் பயம் போன்ற பாதுகாப்பின்மை ஏற்படும்)
போன்ற வேறு நோய்களும் இருந்ததாகச் கூறப்படுகின்றன
ஜோதிடத்தில் பூராடத்தில் பிறந்தவர்களுக்கு பெற்றோர் அரவணைப்பு இருக்காது என்று ஒரு பொதுவான கருத்து உண்டு . ஹிட்லரின் வாழ்விலும் இது நடந்தது.
ஹிட்லரின் தந்தை மிகவும் கண்டிப்பானவர். ஹிட்லரின் தந்தைக்கும் அவருக்குமான உறவு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. செவ்வாய், சுக்கிரன், புதன், உச்சமான சூரியன் ஆகிய கிரகங்கள் ஒரே வீட்டில் அமைந்திருந்ததால், ஹிட்லருக்கு சிறுவயதிலிருந்தே பிடிவாத குணம், போரிடும் குணம், ஒதுங்கிக் கொள்ளும் குணம் ஆகியவை இருந்தன. ஹிட்லரின் தந்தை ஹிட்லரை, உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தினார். இது ஹிட்லரை ஆழமாக பாதித்ததாலேயே, கிளர்ச்சியெழும் மனநிலையை கொடுத்தது.
ஹிட்லரின் தாய் மிகவும் பாசமானவர். அவர் 1907 இல் மார்பக புற்றுநோயால் இறந்தது ஹிட்லரை ஆழமாக பாதித்தது. தாயின் இழப்பு அவரது உணர்ச்சிக் கொந்தளிப்பைச் கட்டுக்கடங்காமல் செய்தது.
ஷஷ்டி திதியில் பிறந்தவர்கள் செல்வந்தவர்களால் விரும்பபாடுவார்கள். இவர்கள் மெலிந்த உடல் கொண்டவர்கள், முன் கோபி, பொறுமைசாலி போல காணப்படுவர். ஆனால் எளிதில் கோபப்பபடக் கூடியவராக இருப்பர். உடல் ஆரோக்கியமும் மன வலிமையையும் கொண்டவர் என்பது பொது கருத்து. நர்மதா பதிப்பகத்தாரின் ஜோதிட சித்தர்களின் நுட்பங்கள் என்னும் நூலில் திரு எஸ்.பி. சுப்ரமணியன் அவர்கள் பக்கம் 55ல் சஷ்டி திதியில் பிறந்த ஜாதகர் அதிகாரம் செய்யும் குணமுடையவர் என்று கூறுகிறார். இவை அனைத்தும் ஹிட்லருக்கு நன்கு பொருந்துகிறது.
கரசை கரணத்தில் பிறந்தவர்கள் சகல ஜனங்களும் போற்றக்கூடிய புகழும் பகைவர்கள் எவ்வளவு பலம் பெற்றிருந்தபோதிலும் எதைக் கண்டும் அஞ்சாத தைரியம் அரசாகளுக்கு ராஜ குருவாக ஆலோசனைகள் கூறும் அறிவாற்றலும் பாமராகள் முதல் படித்தவர்கள் வரையில் போற்றிக் கொண்டாடும் தலைவன் என்ற பெருமைகளோடு விளங்குவார்கள் என்பதற்கேற்ப ஹிட்லர் இவை அனைத்துமே கொண்டிருந்தார்.
யோகங்கள்
இவைகள் பொதுவானைவைகளே என்றாலும், இதில் பல ஹிட்லருக்கு பொருந்துகிறது.
தரிக்கிரகம் யோகம் மூன்று கிரகங்கள் ஒரே வீட்டில் அமைந்திருந்தால் தரிக்கிரகம் யோகம் எனப்படும். ஹிட்லரின் ஜாதகத்தில் ஒரே வீட்டில் (3 ம்) சந்திரன்,குரு,கேது உள்ளது.
சூல யோகம் ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 3 ராசியில் சஞ்சரித்தால் சூல யோகம் ஆகும். ஜாதகர் அதிகத் திறமையுடையவராகவும், விடாமுயற்சியுடையவராகவும், சுக போகங்களை அனுபவிப்பவராகவும், வெட்டு, குத்து என்று அராஜகத்தில் அல்லல் படுபவராகவும்.விபத்து போன்றவற்றால் துன்பப்படுவராகவும் இருப்பார்.
திரவிய நாச யோகம் 9ல் ராகு அமையபெரின் திரவிய நாச யோகம் உண்டாகிறது.
மஹா பாக்கியயோகம் ஆணாக பிறந்தவர்களுக்கு சூரியன், சந்திரன் ஆண் ராசியில் அமர்ந்தால் மஹா பாக்கியயோகம் உண்டாகிறது. - ஒரு நாட்டையோ அல்லது ஒரு பகுதியையோ அல்லது ஒரு நிவாகத்தையோ நடத்தும் யோகம் உண்டாகிறது.
தெய்வாம்ச யோகம் சந்திரனுக்கு 4க்குடையவன் கேதுவை சேர்ந்தாலும், கேதுவிற்கு கேந்திரத்தில் இருந்தாலும், ஜாதகன் தெய்வாம்சம் நிறைந்தவன்.
ஆன்மீக யோகம் குருவும், சனியும் எவ்விதத்திலாவது சம்பந்தம் பெறுவது (பார்வை / சேர்கை / பரிவர்த்தனை) ஆன்மீக யோகம் ஆகும். - தெய்வபக்தி மிக்கவர். ஆன்மிக வாழ்க்கை வாழ்பவர்.
பாரிஜாத யோகம் பதினொன்றாம் ஆம் அதிபதி ஆட்சி/உச்சம் பெறின் பாரிஜாத யோகம் உண்டாகிறது. இந்த ஜாதகத்தில் பதினொன்றாம் அதிபதி சூரியன், உச்சம்.
காஹள யோகம் நான்காம் வீட்டு அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்து லக்னாதிபதி பாலமடைந்து இருக்க காஹள யோகம் உண்டாகிறது. - பிடிவாதகாரராகவும், தைரியமிக்க்வராகவும் இருப்பார்.
மகாலட்சுமி யோகம்ஒன்பதாம் அதிபதியும் சுக்கிரனும் 1,5,9,4,7,10 ல் அமர மகாலட்சுமி யோகம் உண்டாகிறது. இந்த ஜாதகத்தில் ஒன்பதாம் அதிபதி புதன், 7 ம் இடத்தில் அமர்ந்துள்ளார். அதிகாரம் செய்யும் பதவி அடைவர். வாகன வசதி உண்டு.
குரு சண்டாள யோகம் குருவும், ராகுவும் இனைந்து காணப்படினும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும் குரு சண்டாள யோகம் உண்டாகிறது. வாழ்வில் வெற்றிகள் குவியும்.
ஸ்ரீநாத யோகம் லக்னத்திற்கு 4,7,10 ல் சூரியன், புதன் மற்றும் சுக்ரன் இணைந்து காணப்படின் ஸ்ரீநாத யோகம் உண்டாகிறது. - செல்வம் செல்வாக்கு புகழ், அந்தஸ்து உடையவர்களாக விளங்குகின்றனர். சிலர் சந்நியாசி போன்ற வாழ்க்கை நடத்துகின்றனர்.
பூமி பாக்கிய யோகம் 4,9 அதிபதிகள் 3,6,8,12 ல் அமரக்கூடாது. நீசம் பெறக்கூடாது. பாபர் சேர்கை பெறக்கூடாது. இத்தகைய அமைப்பு உண்டாயின் பூமி பாக்கிய யோகம் உண்டாகும்.
ரு(ச்)சக யோகம் இந்த யோகத்தின் காரணகர்த்தா செவ்வாய் ஆவார். செவ்வாய் கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7, 10 ஆகிய வீடுகளில் இருந்து, அவர் தன் சொந்த வீடுகளான மேஷத்திலோ அல்லது விருச்சிகத்திலோ இருந்தால் ஜாதகருக்கு ருசக யோகம் அமைகிறது. ருச்சிக யோகம் உள்ளவர்கள் உடல் பலம் மிக்கவர்கள். பேரும் புகழும் மிக்கவர்கள். அரசாலும் பெருமைக்குரியவர், தயாள குணம் மிக்கவர், மதபற்றுதல் உடையவர். பலருக்குத் தலைமை தாங்கும் நிலையில் இருப்பார். இந்த ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி
வரிஷ்ட யோகம் ஜாதகத்தில் சூரியனுக்கு 3,6,9,12 சந்திரன் அமையபெரின் வரிஷ்ட யோகம் உண்டாகிறது. - ஞானம், வித்தை,செல்வம்,புகழ்,சுகம் கிட்டும். நல்ல அறிவு, ஒழுக்கம், தைரியம், செல்வம், செல்வாக்கு போன்ற அற்புத பலன்கள் உண்டாகின்றது.
கேம துர்ம யோகம் சந்திரனுக்கு இரு பக்கங்களிலும் கிரகம் இல்லாமல் இருந்தால் கேம துர்ம யோகம் உண்டாகிறது. -இந்த யோகம் உடையவர்கள் தம் வாழ்வில் பெரும்பகுதி துக்கத்தை அணுபவிக்கின்றனர்.
அயத்தினதனலாப யோகம் லக்னாதிபதியும், இரண்டாமதிபதியும் பரிவர்தனை பெற்றால் இந்த யோகம் இருக்கும். அதிக முயற்சி இல்லாமல் செல்வத்தை சம்பாதிக்க உதவும். இதை வாய்ப்பு அல்லது அதிர்ஷ்டம் என்று கூறுவர். உண்மையில் இது அதிர்ஷ்டமோ வாய்ப்போ அல்ல, ஒருவரின் முந்தைய நல்ல கர்மாவின் விளைவு. 1 மற்றும் 2 ஆம் அதிபதிகளுக்கு இடையே பரிவர்த்தனம் மிகவும் சிறப்பான அம்சமாகும்
கேமுத்ர யோகம் லக்னத்துக்கு இரண்டாமிடத்தில் கிரகம் எதுவும் இல்லாது மூன்றாமிடத்தில் கிரகம் இருந்தால் கேமுத்திர யோகம் என்று கூறுவர். வாழ்க்கையில் வறுமை வேதனை இருக்கும். யாசகம் எடுத்து உண்ணக்கூடிய நிலை ஏற்படும் (ரிஷபானந்தர் எழுதிய அதிர்ஷ்ட ஜோதிட களஞ்சியம் பக்கம் 142)
புத ஆதித்ய யோகம் சூரியனும், புதனும் இணைந்து காணப்படின் புத ஆதித்ய யோகம் உண்டாகிறது. இது பெரும்பாலும் எல்லா ஜாதகங்களிலும் காணப்படும்.
குரு சந்திர யோகம் சந்திரனுக்கு 1,5,9 ல் குரு இருக்க, குரு சந்திர யோகம் உண்டாகிறது. நல்ல பேரும், புகழும் அமையும்.
பாடல் 122 - புலிப்பாணி ஜோதிடம் 300
கூறப்பா யின்னமொரு புதுமைசொல்வேன்
குமரனுக்கு குருச்சந்திர பலனைக்கேளு
சீரப்பா செம்பொன்னும் மனையுங்கிட்டும்
ஜெனித்ததொரு மனைதனிலே தெய்வங்காக்கும்
கூறப்பா கோதையரால் பொருளுஞ்சேரும்
குவலயத்தில் போர் விளங்கோன் கடாட்ச முள்ளோன்
ஆரப்பா அத்தலத்தோன் மறைந்தானானால்
அப்பலனை யரையாதே புவியுளோர்க்கே
இன்னுமொரு புதுமையினையும் கூறுவேன், கேட்பாயாக! குரு சந்திரயோகத்துடன் பிறந்த ஜென்மனுக்கு மிகவும் சிறப்பே கிடைக்கும். செம்பொன்னும் நன்மனையும் அவனுக்கு வாய்க்கும். அவன் பிறந்த மனையைத் தெய்வம் காவல் கொள்ளும். பெண்களால் நிறைந்த தனலாபம் ஏற்படும். பூமியில் அவன் பேரும் புகழும் பெற்று வாழ்வான். இறையருள் வாய்ந்தவன். ஆனால் குரு சந்திரயோகம் தந்த பாவாதிபதி மறைந்தால் இப்பலனைக் கூறாதே எனப் போகர் அருளாணை பெற்ற புலிப்பாணி நவின்றேன்.
துலா லக்கினம்
யோககாரகர்கள்: சனி, புதன்
யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சந்திரனும் ஒன்று சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
பாடல் 28 - துலாம் இலக்கின ஜாதகர் - புலிப்பாணி ஜோதிடம் 300
கூறினேன் கோலுட யில்லு மாகில்
கொற்றவனே கதிரவனும் கோணமேற
சீரின் சென்மனுக்கு யோகம்மெத்த
சிவசிவா சிவபதவி கிட்டும் செப்பு
மாறினேன் மற்றவிடந் தன்னில்நிற்க
மார்த்தாண்டன் திசையுமது ஆகாதப்பா
தேரினேன் போகருட கடாக்ஷத்தாலே
திடமான புலிப்பாணி தெரிவித்தேனே
இலக்கினம் துலாம் ஆக இருக்க அவ்விலக்கினத்திற்குத் திரிகோண ஸ்தானமான1,5,9-இல் சூரியன் நிற்கப் பிறந்தஜாதகணுக்கு மிகவும் சிறந்த ராஜ யோகங்கள் பேரருளால்கிட்டும் என்பதையும் திடமாகக் கூறுவாயாக வேறு இடங்களில் மாறி நிற்பின் அவனது திசாபுத்திகள் மிகவும் தொல்லை தருவனவேயாகும். இதுவே என் குருநாதர் போகரது அருட்கருணை கொண்டு திடமாக நான் அறிந்து கொண்ட காரணத்தால் நீ தேர்ச்சி பெறஎடுத்துச் சொன்னேன். உணர்க! [எ-று]
இப்பாடலில் துலாம் இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
லக்கினாதிபதி சுக்கிரன் ஏழாம் பாவகத்தில் இருந்தால் ஹிட்லரின் பிறந்த கால நேரப்படி அவரின் லக்கினாதிபதி சுக்கிரன் ஆவார். இந்த பாவத்திற்குரிய காரக கிரகம் சுப கிரகமான சுக்கிரன் இவரே இந்த பாவத்தில் நிற்பதால் களத்திர பாவம் பாழ்பட்டு விடுகிறது. திருமணம் நடக்காது. நடந்தாலும் களத்திரத்திற்கு தோஷத்தை உண்டாக்கிவிடும். பொதுவாக ஏழுக்குரிய ஆதிபத்யம் சுப கிரகங்களுக்கு ஏற்படுவது நல்லதல்ல. அப்படி நேரின் அவர்கள் நற்பலன்களைத் தரமாட்டார்கள். இந்த அமைப்பு உள்ளவர்கள் காதல் திருமணத்தை தானே வழியச் சென்று செய்து கொள்ளுவார்கள்.
லக்கினத்திலிருந்து சூரியன் ஏழாம் பாவகத்தில் இருப்பதால் தீய மனம் தீய குணமுள்ளவர்களாக இருப்பார்க்கள். முன் கோபக்காரர். உயர்ந்தவர்களின் நட்பும் அவர்களால் ஆதாயமும் பெறுவர். சமூகத்தில் மதிப்பும் கௌரவமும் இருக்கும். குடும்ப வாழ்க்கை திருப்தியாக அமையாது. திருமணம் தடைப்படும். அப்படி நடந்தாலும் சந்தோஷமும் ஏற்படவோ பிரிந்து வாழவோ நேரும். மனம் வெறுத்து எப்போதும் வேதனையுடன் ஊர் சுற்றித் திரிபவராக இருப்பர். லக்கினத்திலிருந்து
சந்திரன் மூன்றாம் பாவகத்தில் இருப்பதால் அரோக்கியம் குறைந்தவராகவும் உடல் மெலிந்து காணப்படுவர். கோர மனம் கொண்டவர்களாக இருப்பர். தாயாரின் ஆரோக்கியம் கெட்டிருக்கும் அல்லது தாயாரின் வெறுப்பு ஆளாகியிருக்க நேரும். வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுடன் போராட்டம் மிகுந்திருக்கும்.
லக்கினத்திலிருந்து செவ்வாய் ஏழாம் பாவகத்தில் இருப்பதால் உஷ்ண தேகம் உள்ளவர். கண்கள்சிவந்து காணப்படும். பேசுவதும் செய்வதும் எல்லாமே தவறாக இருக்கும். தவறுகளை உணர மாட்ட்டார்கள்ர். பிறரைக்குறைக் கூறுவர். மற்றவர் களின் வெறுப்புக்கும் பகைக்கும் ஆளாக நேரும். காலம் கடந்து திருமணம் நடக்கலாம். அப்படி நடந்தாலும் கணவன் மனைவி மனமொன்றி வாழ்வதுகடினம். மனைவிக்கு தோஷம் ஏற்படவோ பிரியவோ நேரும்.
லக்கினத்திலிருந்து புதன் ஏழாம் பாவகத்தில் இருப்பதால் கடினமான காரியத்தையும் சுலபமாக முடிக்கும் திறன் பெற்றவர்கள். துணிச்சல் மிக்கவராக இருப்பர்.
லக்கினத்திலிருந்து குரு மூன்றாம் பாவகத்தில் இருப்பதால் குடும்பம் முன்னேறாது. சுயநலவாதியாக இருப்பர். அரசியலில் ஆர்வம் இருக்கும். எதையும் துணிந்து செய்யும் ஆற்றல் பெற்றவராக இருப்பர். பேரும் புகழும் கிடைக்கும். குடும்பத்தில் வறுமை நிலவும். தீயகாரியங்களில்டுபாடு கொண்டவர்களாக இருப்பர்.
லக்கினத்திலிருந்து சுக்ரன் ஏழாம் பாவகத்தில் இருப்பதால் சுயநலவாதிகளாகவும் பொறாமை குணமுள்ளவராக இருப்பர். கற்பனை வளம் உள்ளவர். கலையார்வமுள்ளவர். புதுமை விரும்பி். விரும்பிய பெண்ணையே மணக்க நேரும்.
லக்கினத்திலிருந்து சனி பத்தாம் பாவகத்தில் இருப்பதால் கடின உழைப்பாளிகள். எதையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்வர்.
லக்கினத்திலிருந்து ராகு ஒன்பதாம் பாவகத்தில் இருப்பதால் இதனை சங்ஹுக கால சர்ப்பயோகம் என்பர். தீயகுணமுள்ளவர்கள். பிறருக்கு துன்பம் தரும் காரியங்ளைத் துணிந்து செய்வர். பிறர் நலன் பற்றி எண்ண மாட்டார்கள். தன்னைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். தம் வருங்கால வாழ்க்கை சீரழிவது பற்றி எண்ணியும் பார்க்க மாட்டீர்கள். அரசியலில் ஈடுபாடும் அதனால் நன்மையும் பெறுவர்.
லக்கினத்திலிருந்து கேது மூன்றாம் பாவகத்தில் இருப்பதால் தைரியமிக்கவராகவும் எதையும் துணிந்து செய்பவர்களாகவும் இருப்பர். சொந்த முயற்சியில் முன்னேற்றம் அதிக வசதி வாய்ப்புகள் பெற்று வாழ்பவராக இருப்பர். இவர்களிடத்தில் யாரும் போட்டியிட முடியாது. எல்லாவற்றிலும் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம். இருந்தாலும் அனைவரிடமும் ஒத்துப் போகமாட்டார், பகைமையும் வெறுப்பும் கொள்வர்.
விருச்சிகம் 2 ஆம் இடமானால் கடமையே கண்ணாக உள்ளவர். நல்ல பேச்சாளர். தனுசு மூன்றாமிடமாக அமைந்தவன் வீரன். மீனம் ஆறாம் இடமானால் தன் மக்களாலும் மனைவி மூலம் பிற உறவினர்களிடமும் பகை ஏற்படும். ஜாதகரும் அவர் தந்தையும் காலம் முழுவதும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவே வாழ்வர் சிம்மம் பதினொன்றாமிடமாக அமைந்தால் பிறரை துன்புறுத்துவான். யாரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க மாட்டான். லக்கினாதிபதி 7 ம் வீட்டில் வலிமையுடன் இருந்தால் தான் என்னும் குணம் உடையவராக இருப்பார். லக்னாதிபதி இரண்டாம் அதிபதியுடன் பரிவர்தனையாவதால் சிறந்த பேச்சாளாராக விளங்குவார்கள்.
துலாம் லக்னத்தின் லக்னாதிபதி சுக்கிரன் ஏழில் அமர்ந்து ஏழாம் வீட்டுக்குடைய செவ்வாயுடன் சேர்ந்து லக்கினத்தைப் பார்க்கின்றார். ஒரு இடத்தில் இருப்பதை விட, பார்வைக்கு வலிமை அதிகம் என்பதன் அடிப்படையிலும், இவர்களுடன் உச்சம் பெற்ற லாவாதிபதி சூரியனும் கூட்டாக இருந்து, பாக்கியாதிபதி புதனும் சேர்ந்ததால் நான்கு வலிமையான கிரகங்களும் எழில் அமர்ந்து ஹிட்லருக்கு உலகப் புகழைக் கொடுத்து ஆளுமை சக்தியையும் கொடுத்தன. இந்த கிரகங்களின் கூட்டணி மற்றவர்களின் பலவீனத்தைப் புரிந்துக் கொள்ளும் சக்தியையும் கொடுத்தன.
ஆனால் லக்கினத்திற்கு யோககாரனல்லாத குரு, தனது சொந்த வீட்டில் அமர்ந்து, ஐந்தாம் பார்வையாக ஏழாம் வீட்டை, அதாவது நான்கு கிரகங்களையும் தன பார்வையின் கீழ் வைத்திருந்ததால் ஹிட்லரை ஒரு சர்வாதிகாரியாக கொடுங்கோல் ஆட்சியாளாராக மாற்றியது.
சூரியன் ஏழில் இருந்து லக்கினத்தைப் பார்ப்பதால், அசாத்திய மனவுறுதி கிடைத்தது.அனால் சந்திரன் மற்றும் குருவுடன் சேர்ந்த கேது, சண்டாள யோகத்தை வலுவாகக் கொடுத்து கொடூர மன நிலையையும், எண்ணங்களையும் கொடுத்தது. ஆறாம் வீட்டு அதிபராகிய குருவின் பார்வை பெற்ற, ஏழாம் வீட்டால் ஹிட்லருக்கு உலகம் முழுவதும் பல எதிரிகள் உருவாகி அவருடைய அழிவிற்கும் அதுவே காரணமாக அமைந்தது.
செவ்வாயும் சுக்கிரனும் கூட்டணி பெண்கள் விஷயத்தில் பலவீனமடைய செய்தது.
மேலும் லக்கினம் (1) சந்திர லக்கினம் (3) சூரியன் (7) ஆகியவைகள் ஒற்றைப்படை ராசிகளில் அமரும் போது கிடைக்கும் மகாபாக்கிய யோகத்தால் 12 ஆண்டுகளில் உலகின் பாதியை தன்வசப் படுத்தி ஆளச் செய்தது.
துலா லக்கினத்திற்கு, சனி யோககாரகனாகவும், நான்காம் மற்றும் ஐந்தாம் வீடுகளுக்கு உரியவனாகவும் இருந்து பத்தாம் வீட்டில் அமர்ந்ததால் ஹிட்லரை ஆட்சியாளராக்கினான். ஆனால் அதே சனி செவ்வாயின் பார்வையால் ஹிட்லரின் அழிவிற்கும் துணை போனார். பத்தாம் வீட்டில் சனி இருக்கும் ஜாதகர் நுழையும் துறையில் மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவார்.
ராசி கட்டம் பொது பலன்கள்
ஜனனி ஜன்ம சௌக்யானம், வர்த்தினி குல சம்பதம்
பதவீம் பூர்வ புண்யானாம், லிக்யதே ஜன்ம பத்ரிகா
- இந்த ஜன்மத்தில் ஒருவர் அடையக்கூடிய நன்மை, தீமைகள், அவன் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் கணிக்கப்பட்டு ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் அமைப்பில் சந்கேதமாகக் குறிக்கப்பட்டுள்ளது என்பது பொருள்.
குறிப்பு : இவை அனைத்தும் ஜாதக பொது விதிகள். எல்லோருக்கும் எல்லாமுமே பொருந்தாது. தனிப்பட்ட கிரக நிலை வைத்து பலன் சொல்வது துல்லியமாக இருக்காது. மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை பொறுத்து பலன்கள் வேறுபடலாம் முரண்பாடான கருத்துக்களுக்கு தகுந்த ஜோதிடரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும். அவர்கள் தான் 12 ராசிகள், 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள், திசை புத்தி அந்தரம் கலந்த கூட்டு பலனாக சொல்வார்கள்.
நவகிரகத்திற்கான பொதுவான நட்பு, பகை வீடுகள்
சூரியன்
நட்பு வீடுகள் : தனுசு, கும்பம், மீனம், கடகம்
பகை வீடுகள் : மகரம், ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம்
சந்திரன்
நட்பு வீடுகள் : கன்னி,தனுசு,மேஷம்
பகை வீடுகள் : மிதுனம்,சிம்மம், துலாம், மகரம், கும்பம், மீனம்.
செவ்வாய்
நட்பு வீடுகள் : மிதுனம்,சிம்மம், துலாம், மீனம்
பகை வீடுகள் : ரிஷபம், கன்னி, தனுசு, கும்பம்
புதன்
நட்பு வீடுகள் : விருச்சிகம், மகரம், மேஷம், சிம்மம்
பகை வீடுகள் : துலாம், தனுசு,கும்பம், ரிஷபம், கடகம்
குரு
நட்பு வீடுகள் : கும்பம்,மேஷம், மிதுனம், விருச்சிகம்
பகை வீடுகள் : ரிஷபம், சிம்மம்,கன்னி, துலாம்
சுக்கிரன்
நட்பு வீடுகள் : தனுசு, கும்பம், மேஷம்
பகை வீடுகள் : விருச்சிகம், மகரம், மிதுனம், கடகம், சிம்மம்
சனி
நட்பு வீடுகள் : மிதுனம்,சிம்மம், கன்னி
பகை வீடுகள் : மீனம், ரிஷபம், கடகம், விருச்சிகம், துலாம்
ராகு
நட்பு வீடுகள் : மகரம், மீனம்,மிதுனம், துலாம்
பகை வீடுகள் : தனுசு,கும்பம்,மேஷம், கடகம்,சிம்மம், கன்னி
கேது
நட்பு வீடுகள் : மகரம், மீனம், மிதுனம், துலாம்
பகை வீடுகள் : தனுசு,கும்பம்,மேஷம், கடகம்,சிம்மம், கன்னி
ஜாதகத்தில் 2 கிரகங்கள் ஆட்சியில் மற்றும் 2 கிரகங்கள் நட்பில் உள்ளது.
வர்கோத்தமம்
வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்! ஒரு கிரகம் வர்கோத்தமம் பெற்றால் அது வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகருக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். இது தவிர, வர்கோத்தமம் பெறும் கிரகம், ஜாதகத்தில் அது எந்த பாவத்திற்கு/வீட்டிற்கு உரியதோ, அந்த வீட்டிற்கான பலன்களை உரிய நேரத்தில் வாரி வழங்கும். ஹிட்லரின் ஜாதகத்தில் லக்னம், துலாம் ராசியில் வர்கோத்தமம் பெற்றுள்ளது ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்! லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகர் நீண்ட ஆயுளூடன் இருப்பார் என்பது பொது கருத்து. சுப. சுப்பிரமணியன் என்பவர் பரிவர்த்தனை தரும் யோகம் பக்கம் 31இல் கிரகங்கள் சரராசியில் வர்கோத்தமம் பெற்றால் எண்ணங்கள் நிறைவேறும். ஜாதகர் பிரபலமானவர்களாக இருப்பார் என்று கூறுகிறார்.
சந்திரன் கேது இணைவு
சந்திரன் கேது இணைவு மன அழுத்தம், மன இறுக்கம், மன நிலை தடுமாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தும். இந்த இணைவு ஜாதகரை தனிமையை நோக்கி பயணப்பட வைக்கிறது. மனம் தெளிவற்ற நிலையில் எப்போதும் செல்ல வைக்கிறது. கடும் உடல்நல கோளாறுகளை உண்டாக்குகிறது. (ஏன் எனில் சந்திரன் கால புருஷ தத்துவத்தின் படி 4 ஆம் அதிபதியான சுக ஸ்தான அதிபன் என்பதால்). ஒரு சிலருக்கு இந்த இணைவு தற்கொலை எண்ணத்தை தூண்டுகிறது. கேன்சர் போன்ற கடும் நோய்களை நிச்சயம் அளிக்கிறது. இதனை சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் என்றும் கூறுவர்.
ஏழாவது இடத்தில சூரியன்
ஏழாவது இடத்தில சூரியன் இருக்கப் பிறந்த ஜாதகருக்கு களத்திர தோஷம் மற்றும் தாமதத் திருமணம் ஏற்படும்.
8 ம் ஆதிபதி 7 ல் முதுகு வலி.
சுக்கிரனுக்கு 4 ல் சனி இருந்தால் சோர கற்பம் உண்டாக காரணமாக இருக்கிறது.
சுக்கிரனுடன் செவ்வாய் சேர்க்கை
சுக்கிரனுடன் செவ்வாய் சேர்ந்திருக்கப் பெற்றவர்கள் மிகுந்த தைரியசாலிகள். எதையும் சாமர்த்தியமாகத் திட்டமிட்டுச் செய்து, வெற்றி பெறக் கூடியவர்கள். கலைகளில் பிரியம் உள்ளவர்கள்.
சுக்கிரனுடன் புதன் சேர்க்கை
சுக்கிரனுடன் புதன் சேர்ந்திருக்கப் பெற்றவர்கள் எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு, வெற்றிவாகை சூடுவார்கள். நல்ல பேச்சாளர்கள். எவ்வளவு பெரிய விஷயமானாலும் எளிமையாக புரியவைக்கும் பேச்சுத்திறமையும், பேசுவதற்கு கான விஷய ஞானமும் பேச்சில் சாதுர்யமான வார்த்தை பிரயோகமும் இருக்கும். சிந்தித்துச் செயலாற்றும் திறன் கொண்ட இவர்களால் தோல்வியை மட்டும் தாங்கிக் கொள்ளவே முடியாது. இயல்பிலேயே நகைச்சுவை அனுபவம் மிக்க இவர்கள் கலகலப்பாகப் பேசிப் பழகுவார்கள். வாழ்க்கையில் அனைத்து சுக சௌகர்யங்களையும் அனுபவித்து மகிழ்வார்கள். சுக்கிரனுடன் புதன் சேர்ந்தால் பெரியோர்கள் நட்பு பெற்றவனாகவும், சிறந்த பாடகனாகவும் விளங்குவான். சிலருக்கு தன் கைகளை கன்னத்தில் வைத்திருப்பது பிடிக்கும் அல்லது உறங்கும் போது கைகளை முட்டுகொடுத்து தூங்குவார்கள். புதன் – கைகள்,சுக்கிரன் – கன்னம், முகம்)
ஒருவர் ஜாதகத்தில் லக்கினாதிபதி, தனாதிபதியுடன் அதாவது 2-ம் அதிபதியுடன் இணைந்து, லக்கினத்திற்கு 2,5,7,9,11-ல் இருந்தால் நினைத்த எண்ணங்கள் ஈடேறும்.
லக்னாதிபதியுடன் செவ்வாய் இருந்து, அவரை சனி பார்த்தால் ஜாதகர் சண்டையால் அல்லது தலையில் அடிப்பட்டு அல்லது பிளந்து அதனால் வரும் நோயால் இறக்க வாய்ப்பு உண்டு. ஹிட்லர் தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார் என்று கூறுவார்கள்.
ராகு மிதுனத்திலிருந்தால் ராகு மிதுனத்திலிருந்தால் ஆயிரம் ராஜயோகங்களையும் கெடுக்கும் (அழிக்கும்) என பூர்வபாராசர்யம் என்னும் நூலில் பக்கம் 61 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
லக்னாதிபதி வக்கிரம் அடைந்தால்
லக்கினாதிபதி வக்கிரம் பெற்றால் உடல் பலம் குறையும் தோற்றத்தில் பாதிப்பு எற்படும். லக்கின காரகங்கள் பதிக்கும். வக்கிரம் பெற்று நன்மையான பலனை செய்தால் ஜாதகருக்கு நிகர் ஜாதகர் மட்டுமே. ஜாதகரை பகைத்து கொள்பவர்களின் சொத்து இவருக்கு வந்து சேரும். எந்த காரியத்தை தொட்டாலும் பொன்னாகும். வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். விரைவான முன்னேற்றம், ரகசிய வழியில் பணம் வருவது, திடீர் அதிர்ஷ்டம் போன்ற அமைப்புகள் ஜாதகருக்கு அமையும். சொத்து சுக சேர்க்கை குறுகிய காலத்தில் அடைந்து விடும்தன்மை ஜாதகருக்கு ஏற்படும். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் ஜாதகருக்கு அமையும் வாய்ப்பை பெறுவார். உடல் நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். பல நல்ல பலன்களே ஜாதகருக்கு நடக்கும். பொதுவாக லக்னாதிபதி வக்கிரம் பெற்றால் அந்த ஜாதகரின் மனது கல் மனது என்று தெளிவாக சொல்லிவிட முடியும். அது நன்மையாகவும் இருக்கலாம், தீமையாகவும் இருக்கலாம். வக்கிரம் பெற்று தீமையான பலனை செய்தால் ஜாதகர் தனது வாழ்க்கையை தானே கெடுத்துக் கொள்ளும் நிலை ஏற்படும். நேர்மையான வழியில் நடப்பதை விட்டு விட்டு குறுக்கு வழியை தானே தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார். தனிமையை விரும்பும் சூழ்நிலைக்கு வந்து விடுவார். மனதில் உள்ளதை வெளியே சொல்லவும் தெரியாது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் சூழ்நிலை வரும். எதையும் போராடி பெரும் நிலை வரும். வளரும் சூழ்நிலை சிறப்பாக இருக்காது. சிந்தனை செய்யாமல் செயல்களை செய்துவிட்டு பிறகு வருந்தும் தன்மை ஏற்படும். நல்ல நண்பர்கள் அமைய மாட்டார்கள்.
சுக்கிரன் வக்கிரம்
சுக்கிரன் வக்கிரம் பெற்றால் சுக போகத்தில் வக்கிரக எண்ணம் உண்டாகும். பலருடன் தொடர்பு எற்படும்
சனி பத்தில் அமர்ந்தால்
கரமகாரகன் சனி பத்தில் அமர்ந்தால், ஜாதகனை ஒரு நாளாவது சிறையில் இருக்கும்படி செய்துவிடுவான் என்பார்கள். மேலும் ஜாதகன் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவான். சாதனைகள் செய்வான். செயல்களை முடிக்கும் உத்வேகம் இருக்கும்.
லக்கினாதிபதி சந்திரனுக்கு 5-ல் அல்லது 10-ல் இருந்தால் ராஜயோகம் .
நெருப்பு ராசிக்காரர்கள் ஆளுமை தன்மை கொண்டவர்கள். அனைத்தும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பர். இந்த ராசியின் திசை கிழக்கு. நெருப்பு ராசியினர் எளிதில் கோபப்படுபவராகவும். மிக வேகமாக செயல்படுபவராக இருப்பார். தலைமை தாங்குபவர்களாகவும், தைரியசாலிகளாகவும், தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்
ஒன்பதுக்குடையவன் ஏழில் இருக்கும் ஜாதகர்களில் பெரும்பாலோர், தந்தையை இளமையில் இழந்து விடுகின்றார்கள். அல்லது ஒன்பதுக்குடையவன் கோசாரரீதியாக ஏழில் வரும் போது தந்தையின் மரணம் நிகழ்கின்றது.
சனிபகவான்சரராசி தனிலிருந்தால்
சார்ந்தமறுதேசத்தில் மரணமாகும்
....
கனிவுடையஜாதகத்தின் பலனாராய்ந்து
கணிதத்தூரைப்பீர்விபரமாய் ஜோதிடவேல்லோரே . (97)
உரை : சனிபகவான் சரராசியிலிருந்தால் ஜாதகர் மறு தேசத்தில் மரணமாகும்படி அமையும்
செவ்வாய் புதன் சேர்க்கை
செவ்வாய் புதனோடு இணைந்தால், சிந்தனையில் சுணக்கம் எழாமல் செய்து, உசுப்பி செயல்படவைத்து வெற்றி பெற வைப்பான். சிந்தனைத் திறன் குறையாமல் பாதுகாக்க வெப்பம் உதவும். ரஜோ குணம் சுறுசுறுப்பை ஏற்படுத்தி, சிந்தனையை வளரவிட்டு உதவி புரியும். செல்வாக்கும் செவ்வாயின் இணைப்பில் வளரும். அரசானை நம்மை ஆட்கொண்டு பணிய வைக்கும் வல்லமையை நிலைக்கச் செய்ய, செவ்வாயின் பங்கு அவசியம்.
செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை
செவ்வாய் சுக்கிரனோடு இணைந்தால், உலக சுகத்தை சுவைத்து மகிழ வைப்பார். சுக்கிரன் பெண்மை பெற்ற கிரகம் எனச் சொல்லும் ஜோதிடம், செவ்வாயை ஆண்மை பெற்றது என்கிறது. மாறுபட்ட இனத்தின் இணைப்பே உலக சுகம். 'சேர்க்கையில் விளைந்த செயற்கையான சுகம் - உலக சேர்க்கையைத் துறந்து தனிமையில் கிடைக்கும் சுகம் - ஆன்ம சுகம்' என்ற விளக்கமும் உண்டு. ஜாதகர் பொருளாதாரச் செழிப்பு, படாடோபமான வாழ்க்கை, அளவு கடந்த அலங்காரம், செல்வச் செருக்கு ஆகியவற்றை சுக்கிரன் அளித்தாலும், செவ்வாயின் சேர்க்கையில் சிந்தனை திசைமாறி, வாழ்க்கை தடம் புரள, சோகத்தை சந்திக்க வைப்பான் அவன். வலுவான செவ்வாயுடன் வலுவான சுக்கிரன் இணையும் போது, புகழுடன் வாழ்வதுடன், இறந்த பிறகும் புகழுடன் திகழ்வார்.
லக்கினம் சர ராசி
சர ராசி ஒன்றை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்களுக்கு சில விஷேசத் தன்மைகள் உண்டு. சர ராசியில் பிறந்தவர்கள் கலகலப்பானாவர்கள். உற்சாகம், ஆர்வம் மிக்கவர்கள் செயல்களில் வேகம் உடையவர்கள். தனித்து இயங்கக்கூடியவர்கள். சுதந்திர மனப்பான்மை மிக்கவர்கள் பொறுப்பான பதவிகளுக்குத் தகுதியானவர்கள். துணிவு மிக்கவர்கள். பெயர், புகழ் என்று அவர்களை அனைத்தும் தேடிவரும். ஒரு செயலைத் திறமையாகவும், குறுகிய காலத்திலும் செய்து முடிக்கக்கூடியவர்கள்.
செவ்வாய் ஆட்சி உச்சம்
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அவருக்கு அரசியலில் பெரிய செல்வாக்கு ஏற்படும். மக்களை ஆளும் தன்மை ஏற்படும். ஆனால், செவ்வாய் திடீர் மரணத்திற்குக் காரணகர்த்தா. இரத்தத்தைச் சிந்திக் கொடூரமரணத்தைக் கொடுப்பவர். அதனால்தான் ஹிட்லர் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார்.
ஜாதகர் இறக்கும் ஊர்
எட்டாம் வீட்டு அதிபதி ஆறு, பன்னிரெண்டாம் இல்லத்து அதிபதிகளுள் யாராவது ஒருவருடன் அல்லது இருவருடன் கூடி ஓர் ராசியில் இருந்தால் அந்த ஜாதகர்வெளியூரில் இறப்பார்.
விவேகமுடையவர்
ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரனும், புதனும் கூடி இருந்தால்அந்த ஜாதகர் விவேகமுடையவராய் இருப்பார்!
சந்திரன் குரு சேர்க்கை
ஜோதிடத் தென்றல் S.அன்பழகன் அவர்களின் நவீன வேத ஜோதிடம் என்னும் நூலில் பக்கம் 271 இல், இரண்டு சுபர்களின் கூட்டணி. குரு-சந்திர யோகம் களை கட்டும். எதிரிகளுக்கு ஜாதகர் எமன்.
சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை
சூரியனுடன் சுக்கிரன் கூடில் விளையாட்டினாலும், ஆயுத முதலானவையாலும் லபிக்கப்பட்ட (கிடைக்கப்பட்ட) தனமுடையர் என்று வராக ஹோரை கூறுகிறது.
சூரியனும் செவ்வாயும் கூடி நின்றால்
ஜோதிடத் தென்றல் S.அன்பழகன் அவர்களின் நவீன வேத ஜோதிடம் என்னும் நூலில் பக்கம் 270 சூரியன் ராசி மண்டலத்தின் தலைமைக் கோள். செவ்வாய் போர்ப்படை தளபதி. இவ்விருவரும் இணைவதால் அரசு, முப்படைகள், போலீஸ் துறை சிறக்கும். சகோதரர்களிடம் அன்புள்ளவர். பரம்பரை நிலச்சுவான்தார்கள் எனலாம்.
சாராவளி அத் 15 சு 6 - ஞாயிறும் வெள்ளியும் கூடிய இருகோள் யோகத்திற் பிறந்தவன் படைக்கலங்களைச் செலுத்தும் ஆற்றலுள்ளவனாகவும், வலிமையுள்ளவனாகவும், முதுமையில் கண்ணொளி குறையப் பெற்றவனாகவும், போர் பயிற்சியிற் சிறந்தவனாகவும், பெண்கள் கூட்டத்தாற்கிட்டும் போருலுள்ளவனாகவு மிருப்பன்
சாராவளி அத் 15 சு 3 ஞாயிறும் செவ்வாயும் கூடிய இருகோள் யோகத்திற் பிறந்தவன் ஆண்மை உள்ளவனாகவும், ஆற்றல் வாய்ந்த செயல்களைச் செய்பவனாகவும், அறிவின்றி வலிவும் வீரமும் உடையவனாகவும், பொய்ம்மொழியும், பாவ என்னமும் உடையவனாகவும், தீய செயல்களில் விருப்பமுடையவனாகவு மிருப்பான்
சாராவளி அத் 15 சு 4 - ஞாயிறும் புதனும் கூடிய இருகோள் யோகத்திற் பிறந்தவன் அடிமை வாழ்வு உள்ளவனாகவும் நிலையில்லாப் பொருள்களை உடையவனாகவும், பிறர் விரும்பும்படிப் பேசுபவனாகவும், புகழை எடுத்துக் கொள்பவனாகவும், மதிக்கப்படுபவனாகவும், அரசர்க்கும், நன்மக்களுக்கும் விருப்பமுள்ளவனாகவும், ஆற்றல் அழகு கல்வி இவற்றை உடையவனாகவும் இருப்பன்.
வராக ஹோரை - சூரியனுடன் புதன் கூடில் நிபுணன் சுகம் புத்தி கீர்த்தியுடையன். சூரியனுடன் செவ்வாய் கூடில் பாவி
ஒரே வீட்டில் நான்கு கிரகங்கள்
ஜோதிடத்தில், ஒரே வீட்டில் நான்கு கிரகங்கள் இணைவது ஒப்பீட்டளவில் அரிதான மற்றும் சக்திவாய்ந்த அம்சமாகும், மேலும் அதன் விளைவுகள் ஒரு நபரின் ஜாதகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். இந்த இணைப்பின் குறிப்பிட்ட தாக்கம் சம்பந்தப்பட்ட கிரகங்கள், அவர்கள் இருக்கும் வீடு மற்றும் அவர்கள் ஆக்கிரமித்துள்ள அறிகுறிகளைப் பொறுத்தது. அத்தகைய இணைப்பு எதைக் குறிக்கலாம் என்பதற்கான சில பொதுவான நுண்ணறிவுகள் இங்கே:
தீவிரம்: ஒரு வீட்டில் நான்கு கிரகங்கள் இணைந்திருப்பது, அந்த வீட்டின் கருப்பொருள்களுடன் தொடர்புடைய ஆற்றல் மற்றும் வெளிப்பாட்டின் தீவிர கவனத்தை உருவாக்கும். இந்த நபர் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் சவால்களை அதிக தீவிரம் மற்றும் ஆர்வத்துடன் அனுபவிக்கலாம்.
வீட்டின் முக்கியத்துவம்: இணைப்பு ஏற்படும் வீடு குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், ஏனெனில் இது இந்த தீவிர ஆற்றல்கள் செல்லும் வாழ்க்கையின் முதன்மை பகுதியாக இருக்கும். உதாரணமாக, 7 ஆம் வீட்டில் இணைவு இருந்தால், உறவுகள் மற்றும் கூட்டாண்மைகள் மையமாக இருக்கும்.
கிரக இயக்கவியல்: சம்பந்தப்பட்ட தனிப்பட்ட கிரகங்களும் முக்கிய பங்கு வகிக்கும். ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் சொந்த குறியீடு மற்றும் ஆற்றல் உள்ளது. உதாரணமாக, சூரியன் சுயத்தையும் ஈகோவையும் குறிக்கிறது, அதே சமயம் சனி ஒழுக்கத்தையும் கட்டமைப்பையும் குறிக்கிறது. இந்த ஆற்றல்களின் கலவையானது சிக்கலான இயக்கவியலை உருவாக்க முடியும்.
பதற்றம் அல்லது நல்லிணக்கம்: சம்பந்தப்பட்ட கிரகங்களைப் பொறுத்து இணைப்பின் தன்மை இணக்கமாகவோ அல்லது பதட்டமாகவோ இருக்கலாம். எடுத்துக்காட்டாக, வீனஸ், வியாழன், புதன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் இணைப்பு மிகவும் இணக்கமான மற்றும் நேசமான ஆளுமையை உருவாக்கலாம், அதே சமயம் செவ்வாய், சனி, புளூட்டோ மற்றும் யுரேனஸ் ஆகியவற்றின் இணைப்பு மிகவும் தீவிரமான மற்றும் சவாலான ஆளுமையைக் குறிக்கும்.
பலம் மற்றும் சவால்கள்: இணைப்பு வீடு மற்றும் கிரகங்கள் தொடர்பான பலம் மற்றும் சவால்கள் இரண்டையும் முன்னிலைப்படுத்தலாம். ஒரு முழுமையான படத்தைப் பெற, இந்த கோள்கள் மற்ற கிரகங்களுக்குச் செய்யும் அம்சங்களை (எ.கா., ட்ரைன்கள், சதுரங்கள், எதிர்ப்புகள்) கருத்தில் கொள்வது முக்கியம்.
வாழ்க்கைக் கருப்பொருள்கள்: தனிமனிதன் இணைந்திருக்கும் வீட்டோடு தொடர்புடைய கருப்பொருள்களில் ஆழ்ந்த கவனம் செலுத்தலாம். இந்த கருப்பொருள்கள் அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் ஆதிக்கம் செலுத்தலாம், அதாவது தொழில், உறவுகள் அல்லது தனிப்பட்ட வளர்ச்சி.
உருமாற்றம்: நான்கு கிரகங்களின் இணைப்பானது, வீட்டில் குறிப்பிடப்படும் வாழ்க்கைப் பகுதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கான தேவையைக் குறிக்கலாம். இந்த நபர் இந்த பகுதிகளில் ஆழமான மாற்றங்களையும் பரிணாம வளர்ச்சியையும் அனுபவிக்கலாம்.
ஆளுமையின் தீவிரம்: இந்த இணைப்பில் உள்ள நபர்கள் வலுவான மற்றும் காந்த ஆளுமை கொண்டவர்களாக இருக்கலாம். அவர்கள் தங்கள் இலக்குகள் மற்றும் லட்சியங்களைப் பின்தொடர்வதில் உந்துதல், உணர்ச்சி மற்றும் உறுதியுடன் இருக்க முடியும்.
வெற்றிக்கான சாத்தியம்: கிரகங்கள் மற்றும் அவற்றின் அம்சங்களைப் பொறுத்து, இந்த இணைப்பு வீட்டின் பகுதியில் பெரும் வெற்றி மற்றும் சாதனைக்கான சாத்தியக்கூறுகளைக் குறிக்கும். இருப்பினும், இது சவால்கள் மற்றும் கடக்க வேண்டிய தடைகளுடன் வரலாம்.
ஒரே வீட்டில் நான்கு கிரகங்கள் அமைவதால் நேர்மறை மற்றும் எதிர்மறை பலன்கள் கலந்திருக்கும். அது அந்த வீட்டோடு தொடர்புடைய ஆற்றல்களைப் பெருக்கும் அதே வேளையில், அது தனிநபரின் ஒட்டுமொத்த பிறப்பு ஜாதகம் மற்றும் அந்த கிரகங்களின் நிலையைப் பொறுத்தது. இந்த கிரக சேர்க்கையின் பலன்கள் ராசி மற்றும் லக்னத்தின் அடிப்படையில் மாறுபடும்.
சூரியன்-செவ்வாய்-புதன்-சுக்கிரன் இணைவு - 4 கிரக சேர்க்கை
இது ஒரு ஜாதகருக்கு அசுப சேர்க்கையாகும். இந்த நான்கு கிரகங்களின் சேர்க்கையின் பலனில் உள்ளவர்கள் பொதுவாக புத்திசாலிகள். இருப்பினும், அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை தங்கள் சொந்த நன்மைக்காக பயன்படுத்தி அதை ஒரு ஆக்கபூர்வமான பயன்பாட்டிற்கு பயன்படுத்தத் தவறிவிடுகிறார்கள். அவர்களின் தோற்றம் மற்றும் ஆடை உணர்வு ஒரு குறிப்பிட்ட விசித்திரத்தன்மையால் குறிக்கப்படுகிறது.
Similar Posts :
இரட்டைக் குழந்தை பிறப்பு பற்றி ஜோதிடம்,
ஜாதகர் இரட்டைக் குழந்தைகளில் ஒருவரா,
நடிகை மனீஷா கொய்ராலா ஜாதகம் அலசல்,
நடிகர் மோகன்லால் பிறப்பு ஜாதகம்: ஓர் அலசல்,
வீரப்பன் பிறப்பு ஜாதகம் - ஓர் அலசல், See Also:
ஹிட்லர் ஆராய்ச்சி