தனுசு ராசிக்காரர்கள் பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்தவர்கள்
என்றாலும் தற்பெருமை அதிகம் உடையவர்கள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும்., சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வார்கள். இவர்களுக்கு பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் பிடிக்காது. இவர்களுக்கு கோபம் வந்தால் எதிரில் யாருமே நிற்க முடியாது. நல்ல சுறுசுறுப்புடன் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பார்கள். எல்லோருக்குமே மரியாதை கொடுப்பார்கள். கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும். இவர்களிடம் எந்த ரகசியமும் இருக்காது. யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது இவர்களுக்கு இயலாத காரியமாகும். கெட்டவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்த இவர்களால் முடியும். இவர்களிடம் அன்பாக பழகினால் எதையும் சாதித்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்புடையவர்களாதலால் அடிக்கடி ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்வார்கள். சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் இருக்கும்.
மணவாழ்க்கை,
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணம் சற்று தாமதமாக அமைவதுதான் நல்லது. சீக்கிரமாக மண வாழ்க்கை அமைந்தால் பலவகையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையும் அடிக்கடி பாதிப்படையும். இதனால் குடும்பத்தில் பிரிவும் துயரமும் ஏற்படும். ஆண்களாக இருந்தால் மண வாழ்க்கைக்குப் பின்பும் சபலம் உண்டாகும். மனைவியால் தனுசு ராசிக்காரர்களுக்கு துன்பமும் தொல்லையும் அதிகம் ஏற்படும்.
இவை பொது பலன்களே.
Similar Posts :
தனுசு ராசிக்காரர்கள், See Also:
தனுசு ராசி பொது பலன்கள் தனுசு பொது பலன்