SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
Super Brain Yoga
  • 2019-10-06 00:00:00
  • Shasunder
  • 885

Super Brain Yoga

தோப்புக்கரணம் போடுவது

இந்து மதம்  இயற்கையோடு ஒன்றிய மதமாகியதால், எதையும் வெளிப்படையாக, நேரடியாகக் கூறிவிடுவதில்லை.  

பொதுவாக விநாயகரை வணங்கும் போது தோப்புக்கரணம் போடும் வழக்கம் உள்ளது. நமது உள்ளங்களில் இருந்து தலையுச்சிவரை நிறைய நரம்புக் கற்றைகள் உள்ளன. நாம் சுறுசுறுப்பாக அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருந்தால் (தோப்புக்கரணத்தால்) அந்த நரம்புக்கற்றைகள் சுருங்கிச் சோர்வடையாமல் இரத்தம் நன்கு பாய்ந்து மூளைக்கு பலம் கொடுக்கும். ஆந்த இரத்தம் மூளைக்குச் சென்றால் மனதில் சாந்தமான நினைவுகள் மலரும்.

நாம் தோப்புக்கரணம் போடும் போது உடல் அசைவில் சுஷீம்னா என்ற நாடி தட்டி எழுப்பப்படுகிறது. இரு கரங்களில் நெற்றிப்பொட்டுக்களில் குட்டிக் கொள்ளும் போது ஸஷஸ்ராரம் என்ற இடத்தில் இருந்து யோகிகளுக்கு அமிர்தம் சிந்தும் விநாயக உபாஸனையின் மூலம் சுஷீம்னா நாடி அமிர்தகலசம் இரண்டும் ஒருங்கே இயங்குவதனால் பூரண பலன்களை அடைய முடிகிறது என்பர்.

எந்தத் தேவதையை வணங்கத் தொடங்கினாலும் முதலில் விநாயகரை தியானித்து "சுக்லாம் பரதரம்" என்ற ஸ்துதியை கூறி நெற்றியில் குட்டிக் கொண்ட பின்னரே வணங்க வேண்டும் இவ்வாறு குட்டிக் கொள்வதால் ப்ரம்மரந்த்ரத்தில் அமிர்தம் பெருகி நாடிகளில் பாய்ந்து சோம்பல் முதலிய அவகுணங்களை விரட்டி நல்ல மனநிலையை அளிக்கிறது. 

மூலக்கனல் என்று சொல்லப்படும் சுஷீம்னா நாடி, மனித சரீரத்தில் அடி வயிற்றின் கீழ் ஒங்கார ரூபத்தில் அமைந்து செயலாயிற்றுகிறது. இதைத் தட்டிச் செயல்படுத்தி மேல் நோக்கி செலுத்தி அவ்விடமே அதை நிலைநிறுத்திக்கொண்டால் மனிதன் தன் நிலைமறந்து பிரம்மத்துடன் ஐக்கியப்பட்டு நிற்பான் பேரானந்தத்தைக் காண்பான். இந்த நாடியை செயல்படுத்துவதற்கு,  தட்டி எழுப்புவதற்கு அளவில்லாத உஷணத்தை உண்டு பண்ணவேண்டும் அதற்கு மனத்தை ஒரே நிலையில் ஜக்கியப் படுத்தி நெடுங்காலம் தவங்கள் புரிய வேண்டும் அதிக உஷ்ணமான பொருட்களை உபயோகித்து பூசை புரிதல் வேண்டும். ஆதலால் தான் நம் முன்னோர்கள் தாவர வர்க்கத்திலேயே மிக மிக உஷ்ணமான அறுகம் புல், வெள்ளெருக்கு வன்னிப்பத்திரம் ஆகியவை கணபதி பூசைக்கு உகந்தவை எனக் கூறியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால் தான் நம் முன்னோர்கள் விநாயக வழிபாட்டின் ஒரு பகுதியாக நெற்றிப் பொட்டில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போடுவதையும் வழிபாடு மரபாக அமைத்துள்ளார்கள். உண்மையில் இது ஒரு நல்ல உடற்பயிற்சி.

தோப்புக்கரணம் போடுவது குறித்து புராண நிகழ்ச்சி ஒன்று கூற்படுகிறது.

ஒரு முறை விநாயகர் தனது மாமா மகா விஷ்ணுவின் சக்கரத்தை விளையாட்டாக பிடுங்கி தன் வாயில் போட்டுக் கொண்டுவிட்டார். அதிர்ந்து போனார் மகாவிஷ்ணு.

விநாயகர் பலம் பொருந்தியவர். அவரை மிரட்டி சக்கரத்தை வாங்க முடியாது. அவரை சிரிக்க வைத்து அவர் வாயிலிருந்து சக்கரம் விழுந்தால் சக்கரத்தை எடுத்துக் கொண்டுவிடலாம் என்று மகாவிஷ்ணு யோசித்தார்.

தன் நான்கு கைகளாலும் காதுகளை பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டார். இதைப் பார்த்த விநாயகருக்கு சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். அப்போது வாயிலிருந்த சக்கரம் வெளியே வந்து விழுந்தது. மகா விஷ்ணு சக்கரத்தை எடுத்துக் கொண்டு விட்டார்.

தோப்புக்கரணம் போட்டதால் மகா விஷ்ணுவுக்கு அவரது பொருளைத் திருப்பித் தந்தது போல நாமும் தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் நமக்கு வேண்டிய வரத்தை அருள்வார் என்பது நம்பிக்கை.

அறிவியல்

அமெரிக்காவில் தோப்புக்கரணம் பற்றி  ஆராய்ச்சிக்கு  எடுத்துக் கொள்ளப்பட்டு கீழ்க்கண்ட முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.  தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

பிராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்ல


தோப்புக்கரணம் போடுவது ஏன் ?

Similar Posts : Super Brain Yoga,

See Also:தோப்புக்கரணம் விநாயகர்

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 101
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 16
  • Astrology Basics (English) 194
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 47
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

Vedic Astrology About Many Relationships
Vedic Astrology about Many Relationships
2019-10-06 00:00:00
Vedic Astrology About Rebirth
Vedic Astrology about Rebirth
2019-10-06 00:00:00
12 ல் சுக்கிரன்
12 ல் சுக்கிரன்
2019-10-06 00:00:00
ஆன்மீக ஈடுபாடு
ஆன்மீக ஈடுபாடு
2019-10-06 00:00:00
Is Astrology Science
Is Astrology Science
2019-10-06 00:00:00
Unlocking The Mysteries Of Astrology
Unlocking the Mysteries of Astrology
2019-10-06 00:00:00
Chinese Astrology
Chinese Astrology
2019-10-06 00:00:00
Chinese Lunar Calendar
Chinese Lunar Calendar
2019-10-06 00:00:00
Vedic Astrology
Vedic Astrology
2019-10-06 00:00:00
Influence Of Retrograde Planets
Influence of Retrograde Planets
2019-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 216
  • Agni
  • Astrological predictions
  • Astrology originate
  • astrology software
  • astrology-preliminaries
  • Aswini
  • bangle
  • Beef Chili Fry
  • best astrology softw
  • Best Astrology software for windows
  • Bodhidharma Birth
  • Bodhidharma Travel to China
  • Bodhidharmas Guru
  • Budhan
  • Cancer
  • Chandiran
  • Chandran
  • Chhajju Bania
  • Hinduism
  • Mercury
  • Moon
  • சித்தர்கள்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    Indira Gandhi Birth Chart Analysis
    Indira Gandhi Birth Chart Analysis
    2024-06-19 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com