- கத்திரிக்காய் (பச்சைக் கத்திரிக்காய் என்றால் சுவை கூடுதலாக இருக்கும்) - கால் கிலோ
- கடலைமாவு - அரை டீஸ்பூன்
- கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன்
- மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
- உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
அரைக்க:
- மிளகு - அரை டீஸ்பூன்
- சோம்பு - கால் டீஸ்பூன்
- பட்டை - 1
- இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
கத்திரிக்காயை நீள நீளமாக, கனமான துண்டுகளாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்தெடுங்கள். கத்திரிக்காயை மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடுங்கள். ஆனால் ஒரே கொதியில் எடுத்து, நீரை வடித்துவிடவேண்டும். இல்லையெனில் குழைந்துவிடும். அரைத்த மசாலா, கார்ன்ஃப்ளார், கடலைமாவு, உப்பு சேர்த்துப் பிசறி, எண்ணெயில் பொரித்தெடுங்கள். கத்திரிக்காய் சாப்ஸ் தயார்.
கத்திரிக்காய் சாப்ஸ்