உருளைக்கிழங்கை, சிறு சதுரத்துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். கொதிக்கிற வெந்நீரில் போட்டு, உடனே எடுத்துவிடுங்கள். அதில் கார்ன்ஃப்ளார், மிளகாய்தூள், உப்பு, அரிசிமாவு ஆகியவற்றைப் போட்டு, லேசாகத் தண்ணீர் தெளித்துப் பிசறிக்கொள்ளுங்கள். வாசனை பிடிக்கும் என்றால், சிறிது சோம்புத்தூள் சேர்த்துப் பிசறலாம். பிறகு, எண்ணெயைக் காயவைத்து பிசறிவைத்த கிழங்கைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள். பொரித்து வைத்த நிமிடத்தில் ‘பொசுக்’கெனக் காலியாகிவிடும் பாருங்கள்.
உருளைக்கிழங்கு வறுவல்
Similar Posts : புளி ரசம், How to make the Mushroom chops, மதியம் உணவு , நிச்சயதார்த்த மெனு, சேப்பங்கிழங்கு வறுவல், See Also:உருளைக்கிழங்கு வறுவல் சமையல்
Comments