மு.க.ஸ்டாலின் ஜாதகம் ஓர் ஆய்வு
திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வாய்ப்பு உள்ளதா?
தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் சிறு வயது முதலே தன் தந்தையோடு அரசியல் செய்து வருபவர் அவர் பலமுறை பலவாறு முயற்சி செய்தும் அவரின் முதல் அமைச்சர் கனவு மட்டும் நிறைவேறவில்லை. ஆண்டவன் அருளால் துணை முதல் அமைச்சர் பதவியை மட்டும் சிறு காலம் அனுபவிக்க ஆசி கிடைத்தது. அவருக்கு முதல் அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்குமா? அவரின் ஜாதகம் என்ன சொல்லுகிறது என்று பாப்போம்.. குறிப்பு இது ஒரு ஆய்வுக்கு மட்டுமே. ஜாதகத்தில் யோகம், பலம் போன்றவைகள் இருந்தாலும் அது நடப்பதும் நடக்காததும் அவரவர் கர்மபலன்.
பிருகு நந்தி & சப்த ரிஷி நாடி விதிகள்படி (உபயம் ஜோதிடர் ஜோதிஷண்முகம், பறக்கை, குமரிமாவட்டம்)
ராசி மண்டலத்தில் லக்னாதிபதியின் சந்திப்புகள்:
செவ்>சுக்>குரு>கேது>சந்><(சனி)>ரா>சூரி>புத
பாவகாரகங்களின் சந்திப்புகள்:
1> 7&12 > 2&5 >கேது >9 > 3&4 > 10> 8 &11
ஜாதகர் என்ற லக்னாதிபதி செவ்வாயுடன் நீச புதன் எனவே பேச்சு எழுத்து அறிவு புத்திசாலித்தனம் இவை எப்போதும் சிக்கல் தான். இந்த புதனிடம் இருக்கும் பாவ காரங்கள் 8&11 அதாவது அவமானம் நஷ்டம் லாபம். எனவே
இவருக்கு புதனின் காரகமான பேச்சு எழுத்து மூலம் அவமானம் உண்டு*
செவ்வாய்க்கு பின்னால் இருக்கும் நீச புதனை பின்னாலிருந்து ஒளி கொடுத்து இயக்குவது தந்தை காரகன் & 10 க்குடைய கர்ம காரகன் என்ற சூரியன்*
அதோடு இவரது தொழில் கர்ம ஸ்தானத்தில் தந்தை பாவத்தின் அதிபதியான சந்திரன் அமர்ந்து ஏழாம் பார்வையாக 10 க்குடைய சூரியனை பார்த்து ஜாதகருக்கு தனது அரசியல் செல்வாக்கை கொடுக்கிறார்.
(கலைஞர் சம்பாதித்தது > ஸ்டாலினுக்கு செல்கிறது என்று கற்பனை செய்க)
லக்னாதிபதி செவ்வாய் ராசி மண்டலத்தில் முதலில் சந்திப்பது இன்ப காரகன் சுக்ரனை சுக்ரனிடம் இருப்பது அழகு ஆடம்பரம் சுக போக வாழ்க்கை அவரிடமுள்ள பாவ காரகங்கள் 7&12 மனைவி + வெளிநாடு ஆனால் இந்த சுக்ரனை இவர் சந்திப்பது 6:மிடம் என்ற மறைவிடத்தில் எனவே இவருக்கு 7+12 பாவக பலன்கள் அனைத்தும் நோய்,கடன்,எதிர்ப்பு என்ற 6 ம் பாவத்தை நிழலாக கொண்டே இயங்கும்.
ஜாதகருக்கு பின்னால் தந்தை என்ற சூரியன் ஜாதகருக்கு முன்னால் புத்திர ஸ்தான குரு எனவே இங்கே கலைஞர் >> ஸ்டாலின் >>உதயநிதி என்று பரம்பரை அலகு குத்தப்படுகிறது.
இதன் பிறகு செவ்வாயின் சந்திப்பு குருவோடு நிகழ்கிறது குருவிடம் இருப்பது 2+5.பாவ காரகங்களாகிய பணம்,குடும்பம், புத்திர ஸ்தானம். இதுவும் 6 ம் பாவத்தில் நிழலாகவே நிகழ்கிறது*
லக்னாதிபதி செவ்வாய் 6 ம் பாவத்தில் குருவை சந்திப்பதால் இவர் குருவின் காரகம் பெற்ற இந்து சனாதனத்தை எதிர்ப்போம் அறுப்போம் என்று சொல்லிவிட்டார்*
குரு செவ்வாய் பரிவர்த்தனையின் நல்ல / தீய விளைவுகள் பற்றி இவருக்கு இன்னும் யாரும் சொல்ல வில்லை*
இந்த சந்திப்புக்கு பிறகு செவ்வாய் சந்திப்பது தடை/விரக்தி என்ற கேதுவை அதுவும் தந்தை ஸ்தானம் என்ற 9 மிடத்தில்.இதுதான் இவர் வாழ்வில் மிகப்பெரிய முட்டு கட்டை ஏனென்றால் 9 ல் உள்ள கேது 10 ல் உள்ள பதவியை தொடுவதற்கு தடையாக உள்ளார் இவரின் தந்தையே இவரை முதல்வராக அமர்த்தி அழகு பார்க்க விரும்பவில்லை.
அதாவது ஜாதகரின் 10 மிடம் என்ற தொழில் கர்மாவில் சிம்ம ராசியில் அமர்ந்துள்ள 9 க்குடைய சந்திரன் ஜாதகருக்கு கொடுக்க இருக்கும் பதவியை 9 ல் உள்ள கேது தடுத்துவிடுகிறார்.
எனவே தந்தை இருக்கும் வரை இவருக்கு தந்தை அனுபவித்த நாற்காலியின் சுகம் கிடைக்காது என்பது தெளிவாகிவிட்டது.
இதையும் தாண்டி ஜாதகர் என்ற செவ்வாய் வக்ரம் பெற்ற சனி என்ற பொது மக்களை சந்திக்கும் போது இவரது ஆணவ அதிகார செவ்வாயின் குணங்களால் கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட கறுப்பு சட்டைகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட அப்பாவி மக்களை இவர் தன் வசமாக்கி வைத்துக்கொள்கிறார்.
இப்படி ஜாதகர் என்ற செவ்வாய் தனது 10 க்குடைய சூரியனை தொடுவதற்கு எடுக்கும் முயற்சியில் பல்வேறு கிரக காரகங்களையும் பாவ காரகங்களையும் சந்தித்து ஓடிக்கொண்டிருக்கிறார்.
இவர் தொடுவதற்கு முயலும் சூரியனை இவர் தொட வேண்டும் என்றால் முதலில் இவர் குருவின் காரகங்களை மதிக்க வேண்டும் எந்த இந்து மதத்தை இவர் பழித்து வருகிறாரோ எந்த சனாதன தர்மத்தை எதிர்க்கிறாரோ அதற்கு காரகம் பெற்ற குருவை இவர் தன் இருகரம் கூப்பி விழுந்து வணங்க வேண்டும்.நெற்றியில் குங்கும் என்ற வெற்றித்திலகம் இடவேண்டும்.
இவரது வாக்கு & பூர்வ புண்ணியத்திற்கு குருவே அதிபதி இவருக்கு இருக்கும் நீச புதனுக்கு ராஜயோகம் கொடுப்பதே குரு செவ்வாயின் பரிவர்த்தனைதான்.
குருவின் அருளால் புதனுக்கு நீச பங்கம் ஏற்படும்!
வாக்கில் தெய்வ அருள் வந்து அமரும்!
பூர்வ புண்ணியத்தை மீட்டெடுத்து
இவரால் சூரியனை தொடமுடியும்!
தந்தை அனுபவித்த முதல்வர் நாற்காலியில் இவரும் உட்காரலாம்
Similar Posts :
ஹிட்லரின் ஜாதகம் ஆய்வு,
சுவாமி விவேகானந்தாவின் ஜாதக அலசல்,
எம்.ஜி.ஆர் ஜாதக அலசல்,
இரட்டைக் குழந்தை பிறப்பு பற்றி ஜோதிடம்,
வீரப்பன் பிறப்பு ஜாதகம் - ஓர் அலசல், See Also:
மு.க.ஸ்டாலின் ஆராய்ச்சி