Rule Like a King Varaga Horaவராக ஹோரை
புவிக்கு நாதன்
அருக்கன்மதி மேடந்தனி லவரெய்தி யுதிப்பத்
தெரிக்குஞ்சனி குடமேவிடச் சேய்மானினை மருவத்
தரிக்குங்குரு தனிவெய்திடத் தனிற்றோன்றிய சிறுவன்
புரக்கும்புவி தனையென்றுரை புகன்றார்கலை வல்லார்
ஆதித்தன் என்னும் சூரியனும், சந்திரனும் மேட இலக்கினத்தில் உதிக்க, சனி கும்பத்திலும், செவ்வாய் மகரத்திலும், வியாழன் தனுவிலும் நிற்கில் (இந்த யோகத்திற் பிறந்தோன்) புவிக்கு நாதனாம்.