வெங்காயம் நச்சுக்கிருமிக் கொல்லியாக உடம்பை மெலிதாக்க குரலை இனிமையாக்கி, விஷக்கடி, குழிப்புண்களைக் கட்டுப்படுத்த பித்தம் தணிய, மூளை சுறுசுறுப்பாக, கால் கை வலிப்பு நோய் நீங்க, கொழுப்புச் சத்தை கரைக்க, வயிற்றுக் கட்டிகளை நீக்க எனப் பல வகையிலும் பயன்படும் .
பக்கவாதம் எனப்படும் மூளை, இரத்தக்குழாய் அடைப்பு நோய்க்கு பச்சை வெங்காயம் முழு பலன் தரும். புகை, பிடிப்பதால் ஏற்படும் நிகோடின் என்னும் நஞ்சினை முறித்து நுரையீரலுக்கும் இதயத்திற்கும் வலிமையை தரும் .
ரோமானிய நாட்டில் இடைமெலிந்திருக்க பெண்கள் வெங்காயத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றும், நீரோ மன்னன் குரல் இனிமைக்காக வெங்காயத்தைத் தினமும் சாப்பிட்டார் என்றும் கூறுவார்.
தீவிர இரத்த சோகை இருப்பவர்கள் மட்டும் அதிகளவு வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்கணும். 40 வயதுக்கு மேல் ஆனவர்கள். கண்டிப்பாக வாரம் இரண்டு முறையாவது வெங்காயத்தை உணவுல சேர்த்துக் கொண்டால் மிகவும் நன்று.
வெங்காயம்