SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
விருந்தினர் அறை பற்றிய வாஸ்து
  • 2020-10-06 00:00:00
  • 1

விருந்தினர் அறை பற்றிய வாஸ்து

நம்மை தேடி வந்த விருந்தினர் நம்முடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அமைய வேண்டும் என்று வாஸ்து சாஸ்த்திரம் கூறுகிறது

நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் விருந்தினர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். பண்டைய இந்திய நூல்களில் கூறியுள்ள படி, விருந்தினர் கடவுளின் ஒரு பிரதிநிதி என்று கருதி விருந்தோம்பல் செய்வது நமது மரபு. விருந்தினரின் நலனைப் பற்றி அக்கறைக் கொண்டு அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் பிறந்ததிலிருந்து தன் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும். அத்தகைய விருந்தினர் தங்கும் அறை எவ்வாறு, எந்த திசையில் அமைய வேண்டும் என்பதையும் வாஸ்து சாஸ்திரம் கருத்தில் கொண்டு மிகத் தெளிவாக ஒரு வரைமுறையை கூறுகிறது.

நம்மை தேடி வந்த விருந்தினர் நம்முடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் விருந்தினர் தங்கும் அறையின் இடம் அமைய வேண்டும் என்று வாஸ்து சாஸ்த்திரம் கூறுகிறது. நாம் என்னத்தான் விருந்தோம்பலில் விருந்தினரை மகிழ்வித்தாலும் அவர்கள் தாங்கும் இடம் சரியில்லை என்றால் அவர்களுக்கு நிறைவான ஒரு திருப்தியைத் தராது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஒரு விருந்தினர் அரை எவ்வாறு அமைய வேண்டுமெனில்

 
 
  1. விருந்தினர் தங்கும் இடம் (ரூம்) வட மேற்கு திசையில் அமைந்திருக்க வேண்டும். இது வாயுவைக் (காற்றை) குறிப்பதால் நிரந்தரமின்மையைக் குறிக்கிறது. ஆதலால் விருந்தாளி குறுகிய காலம் மட்டுமே தங்கிச் செல்லும் வகையிலும், திருப்தியான மனநிலையுடன் வெளியேறவும் உதவிப் புரியும்.
  2. எக்காரணம் கொண்டும் விருந்தினரின் படுக்கையறை தென்மேற்கு திசையை நோக்கி இருக்கக் கூடாது.
  3. தென் கிழக்கு மற்றும் வட கிழக்கு திசையும் விருந்தினருக்கு உகந்ததல்ல. ஏனெனில் விருந்தினர்கள் குறுகியக் கால அளவு மட்டுமே தங்கும் நோக்கில் அந்த அறை அமைந்திருக்க வேண்டும். அவர்கள் நம்முடனேயே நிரந்திரமாக தங்கிவிடும் படி சூழ்நிலை அமைந்துவிடக் கூடாது.
  4. விருந்தினர் அறையில் அதிகப் படியான ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வடக்கு மற்றும் கிழக்கு திசை நோக்கி இருப்பது நலம்.
  5. விருந்தினர் அறையில், படுக்கை (கட்டில்) தெற்கு சுவற்றின் அருகே அமைந்திருப்பது நலம்.
  6. விருந்தினர் அறை வெள்ளை, ஊதா, சாம்பல், மென்மையான நீளம் போன்ற வண்ணத்தில் ஏதாவது ஒன்றில் இருந்தால் நல்லது.
  7. விருந்தினர் அறையில், அவர்கள் சென்ற பிறகு அவர் எந்த பொருளையும் விட்டுச் சென்று விடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளள வேண்டும்.
  8. நம்முடைய முதன்மை படுக்கையறை ( master bedroom) மற்றும் சமையலறை அவர்கள் தங்கியிருக்கும் அறையிலிருந்து தெரியாமல் இருக்க வேண்டும்.


Similar Posts : விருந்தினர் அறை பற்றிய வாஸ்து, குளியலறை மற்றும் கழிவறை வாஸ்து பரிகாரம்,

See Also:வாஸ்து

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 177
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
Pepper chicken
0000-00-00 00:00:00
fantastic cms
Fish Kuzhambu
0000-00-00 00:00:00
fantastic cms
Mutton sukka
0000-00-00 00:00:00
fantastic cms
Mutton Kebab
0000-00-00 00:00:00
fantastic cms
Seppa Kizhangu Varuval
0000-00-00 00:00:00
fantastic cms
சேனைக்கிழங்கு மிக்சர்
0000-00-00 00:00:00
fantastic cms
மைக்ரோவேவ் சிக்கன் குருமா
0000-00-00 00:00:00
fantastic cms
Beef Chili Fry
0000-00-00 00:00:00
fantastic cms
மஷ்ரூம் சாப்ஸ்
0000-00-00 00:00:00
fantastic cms
பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி
2020-10-14 00:00:00
  • Adi Shankara
  • Astrological predictions
  • astrology software
  • astrology-match-making-chart
  • Aswini
  • bangle
  • Barani
  • Beef Chili Fry
  • best astrology softw
  • Best Astrology software for windows
  • Bodhidharma in Nanjing
  • Bodhidharmas Guru
  • brahma-muhartham
  • Budhan
  • Chandiran
  • Hinduism
  • Mangal Singh's NDE
  • Moon
  • NDE
  • prediction
  • software
  • Tamil astrology software
  • குங்குமம்
  • சித்தர்கள்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Vedic Astrology and the Birth of Kalki
    2024-06-30 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com