வாஸ்து சாஸ்த்திரப் படி ஒரு வீட்டின் குளியல் அறையும், கழிப்பறையும் எதிர்மறை ஆற்றலை உருவாக்க பெரும் பங்கு வகிக்கிறது. ஆதலால் வீடு கட்டும் பொழுது இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அத்தியாவசியமாகிவிடுகிறது. ஒரு வீட்டை வாஸ்து முறைப் படி அமைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அவ்வாறு இல்லாவிடில், பல எதிர் வினைகளை சந்திப்பது தவிக்க இயலாததாகிவிடுகிறது.
பழங்காலத்தில் குளியல் அறையும், கழிப்பறையும் வீட்டிற்கு வெளியே கட்டுவதையே பழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இது இன்றைய நவ நாகரீக காலத்திற்கு பொருத்தமாய் இருக்காது. இருப்பினும் நாம் இதனை கருத்தினில் கொண்டு வாஸ்து முறைப்படி வீட்டினை அமைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
ஏற்கனவே கட்டி பயன்பாட்டில் உள்ள வீட்டிற்கு தோஷங்கள் இருந்தால் அதனை வாஸ்த்து தோஷ நிவர்த்தி மூலம் நிவர்த்தி செய்துக் கொள்ளலாம். குளியல் மற்றும் கழிப்பறைகளுக்கு சில வாஸ்து டிப்ஸ்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. அவை
குளியல் மற்றும் கழிப்பறைகளை
பயன்படித்தியப் பிறகு கதவை எப்பொழுதும் மூடியே வைத்திருக்க வேண்டும். இதனால் எதிர்மறை ஆற்றல்கள் நாம் வாழும் இடத்திற்குள் நுழைவதிலிருந்து தடுக்கப்படுகிறது. இந்த அறைகளில் நறுமணம் வீசும் படி வைத்துக் கொண்டால் மிகவும் சிறப்பு. துர் நாற்றம் இருந்தால் எதிர் வினைகள் உருவாக மிகவும் வசதியாய் அமைந்துவிடும்.
குளியல் மற்றும் கழிப்பறைகளுக்கு
முன்னால் எந்த வித நல்ல செயல்களும் செய்வது சிறப்பானது அல்ல. நல்ல செயல்களை இங்கு செய்வதால் எந்த வித நல்ல பயனையும் எதிர்பார்க்க முடியாது. எல்லாமே தீமையிலேயே முடியும் அல்லது ஒரு முன்னேற்றமும் ஏற்படாது. உதாரணமாக படிப்பது. குளியல் மற்றும் கழிப்பறைகளுக்கு முன்னால் படித்தால் முழு கவனமும் படிப்பின் மேல் செலுத்த இயலாது.
குளியல் மற்றும் கழிப்பறைகளில்
கண்ணாடி இருப்பது கூடாது. ஏனெனில், கண்ணாடி எதிர் வினைகளை (negative energy) பல மடங்காக்கி அந்த வீட்டில் வாழ்பவர்களுக்கு உடல் நலக் கேட்டை உண்டாக்கும். மேலும் கண்ணாடி, குளியல் மற்றும் கழிப்பறைகளினுள் நல் வினைகள் (Positive Energy) வந்தாலோ, இருந்தாலோ, உற்பத்தியானாலோ அதனை ஈர்த்துக் கொள்ளும். இதனால் நமக்கு தீமையே அன்றி நன்மை எதுவும் இல்லை.
Similar Posts : திருமண தடை பரிகாரம், திருமண பரிகாரம், புத்திர தோஷம் பரிகாரம், சகோதர தோஷ பரிகாரம், விருந்தினர் அறை பற்றிய வாஸ்து, See Also:வாஸ்து பரிகாரம்