ராம தேவர்
பெயர்
|
:
|
ராம தேவர் (அ) யாக்கோபு
|
பிறந்த மாதம்
|
:
|
மாசி
|
பிறந்த நட்சத்திரம்
|
:
|
பூரம்
|
உத்தேச காலம்
|
:
|
கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள்
|
குரு
|
:
|
புலஸ்தியர், கருவூரார்
|
சமாதி
|
:
|
அழகர் மலை
|
வாழ்நாள்
|
:
|
700 வருடம் 6 நாட்கள்
|
குலம்
|
:
|
மறவர். விஷ்ணு குலம் என்றும் கூறுவர்
|
மரபு
|
:
|
ஓதுவார்
|
ராம தேவர் விஷ்ணு குலத்தில் மாசி மாதம் பூர நட்சத்திரம் இரண்டாவது பாதத்தில் பிறந்த பிராமணர் என்றும் பின் வீரம் மிகுந்த தேவர் குலத் தோன்றலாகவும் விளங்கியவர் என்றும் கருவூர்த் தேர்வர் (கீழே உள்ள பாடலில்) பாடியுள்ளார். மெயராம தேவர் ஆதி வேதப் பிராமணராம் பின்பு உய்யவே மரவர்தேவர் உயர்குலச் சாதியப்பா உள்ளமாகிய கோவிலில் இறைவனை இருத்தி, அன்றாடம் சித்த சுத்தியுடன் வழிபட்டால் எல்லா சித்திகளும் கைவரப்பெறலாம் என்பது இராம தேவரின் பூசை விதி முறையின் பொதுக்கருத்தாக கீழ்கண்ட பாடலில் அமைகிறது. “ஆதியென்ற மணி விளக்கை அறிய வேணும் அகண்ட பரிபூரணத்தைக் காண வேணும் சோதியென்று துய்யவெளி மார்க்க மெல்லாஞ் சுகம் பெறவே மனோன்மணி யென்னைத்தாள் தன்னை நீதியென்ற பரஞ்சோதி ஆயிபாதம் நிற்குணத்தினின்ற நிலையாருங் காணார் வேதியென்ற வேதாந்தத்துள்ளே நின்று விளங்குவதும் பூசையிது வீண் போகாதே” சிந்தையை அடக்கி சும்மா இருப்பது சுகம் என்பர் யோகிகள். ஆனால் அது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. இராமதேவர் தன்னுடைய பாடல்களில் மனதை அடக்கவும், உள்ளத்தை ஒருநிலைப்படுத்தவும் உலகின் முழுமுதற் பொருளை வணங்கிவழி காட்டுகிறார். இராமதேவர் வாழ்ந்தது நாகப்பட்டினத்தில். அவரது உள்ளமெல்லாம் இறையுணர்வு எப்போதும் நிறைந்திருந்தது. அரபு நாடுகளில் ஏராளமான கற்ப மூலிகைகள் கிடைக்கும் என்றெண்ணி அடிக்கடி அரபு நாடுகளுக்குச் சென்று வந்தார். அவ்வாறு சென்ற பொழுது, இஸ்லாமியர்கள் ராமதேவரின் விருப்பத்தோடு அவரை மதம் மாற்றி யாக்கோபு என்று பெயரிட்டு குரான் கற்பித்தார்கள். இந்த உதாரணமே, சித்தர்கள் மக்கள் நல்வாழ்வு வாழ வழி காட்டும் அணைத்து மதங்களையும் நேசிப்பவர்கள் என்பதற்கு சான்று. இராமதேவர் பல சித்தர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இராமதேவன் அரபுமொழியில் 17 மருத்துவ நூல்களை எழுதினார். இராம தேவருக்கு நபிகள் நாயகம் ஒருமுறை காட்சி கொடுத்ததாகக் கூறுகின்றனர். அதன்பின்பு சிலகாலம் சமாதிநிலையில் இருந்தார். போகமுனிவர் ஒரு நாள் இராமதேவர் தியானத்திலிருக்கும் போது வந்தார். அப்போது இராமதேவரிடம் “மெக்காவால் யாக்கோபுகளாவும் தமிழ்நாட்டில் இராமதேவராகவும் இருக்கும் சமாதி அடைய வேண்டிய காலம் இதுவல்ல. இன்னும் ஏராளமான பயனுள்ள காரியங்கள் நீ செய்ய வேண்டியுள்ளன. எனவே, அவற்றையெல்லாம் முடித்த பின்பு சமாதியடைவது நல்லது என்றார். போகரின் உபதேசத்தால் இராமதேவர் பல்வேறு அரிய கற்ப மூலிகைகளை பற்றி அறிந்து, அவற்றை சேகரிக்க தமது ஒப்பற்ற சித்தியால் காடுமலைகளையெல்லாம் சுற்றித்திரிந்தார். இராமதேவருக்கு சதுரகிரி மலையில் சித்திகள் பல கைகூடியதால் அங்கிருந்து தவம் செய்தார். அவர் சதுரகிரியில் வைத்திய சாஸ்திர நூல்களை தமிழில் எழுதினார். இராமதேவர் எழுதிய நூல்கள்: வைத்திய காவியம் பரிபாஷை தண்டகம் வைத்திய சூத்திரம் நிகண்டு கலைஞானம் அட்டாங்கயோகம் முப்பு சூத்திரம் சிவயோகம் பட்கணி-பரஞானகேசரி வாத சூத்திரம் யாக்கோபுசவுக்காரம் வைத்திய சிந்தாமணி சதுரகிரி வனத்தில் இராமதேவர் தங்கியதால் இராமதேவர் வானம் என்ற பெயரும் உண்டு. இவர் மெக்காவில் சமாதி அடைந்தார். அழகர் மலையில் சமாதியடைந்ததாக சில நூல்கள் கூறுகின்றன. சித்தர்கள் பற்றிச் சிந்திக்கும்போது பாமரர்களுக்குக்கூட சில கேள்விகள் எழும். அதில் பிரதானமானது_சித்தர்கள், கடவுளர்களை நம்புகின்றவர்களா, இல்லையா? என்பதாகும். மதச் சின்னங்கள் இல்லாத அவர்களது தோற்றம், ஆடை அணிகளில் கூட அவர்களுக்கு இல்லாத அக்கறை, புதர்போல தாடி மீசை, கசக்கி உடுக்காத அழுக்கு ஆடை, அதுகூட இல்லாத நிர்வாணத் தோற்றம் என்று சிலர் திரிவதைப் பார்க்கும் போது, அவர்களைப் புரிந்துகொள்ள சிரமமாகத்தான் இருக்கும். நம்பினவர்க்கு நடராசன் நம்பாதவர்க்கு அவன் வெறும்ராசன் ‘நம்பினவர்க்கு நடராசன் நம்பாதவர்க்கு அவன் வெறும்ராசன்’ _என்பதுபோல்தான் சித்தர்கள் பலருடைய தோற்றம், பேச்சு, வாழ்க்கை முறை உள்ளது. சமுதாயத்தைக் கடைத்தேற்ற வேண்டும், மனித சமூகம் உய்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்ட சித்தர்களை விட, சமுதாய எண்ணமின்றி, எல்லாமே மாயை... இதிலிருந்து விடுபட என்ன வழி? என்று சிந்தித்து அதிலேயே உழன்று, பின் வீடுபெற்ற சித்தர்கள்தான் அனேகம். அடுத்து, சித்தர்களுக்கு மதங்கள் கிடையாதா? அவர்கள் இந்தத் தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரியவர்களா? என்பதும் பலருக்குள் தோன்றிடும் கேள்விகளாகும். ஏன் என்றால், இந்த உலகம் மிக மிகப் பெரியது. இதில் நமது மாநிலம் என்பது ஒரு மைப்புள்ளி அளவுதான். அதிலும்கூட நம் ஊர், அந்த ஊருக்குள் ஒரு வீடு, அந்த வீட்டுக்குள் இருக்கும் நாம் கண்ணுக்குப் புலனாகாத தூசியைப் போன்றவர்களே! இப்படி தூசி அளவு கூட இல்லாத நம்முள் உள்ள ஒரு சித்தர் நமக்கே கூட முழுதாக விளங்கிடாத நிலையில், உலகிற்குப் பொதுவாகி, அனைவரும் அறிந்திடும்படி ஆகிவிட இயலுமா? அல்லது அவரால், இந்தப் பரந்த உலகை விளங்கிக் கொள்ள முடியுமா? என்றெல்லாமும் கேள்விகள் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. சாதி, மொழி, மதம், இனம் என்று சுருங்கிக் கிடக்கும் சராசரி மனிதனால் வேண்டுமானால் எல்லைகளைத் தாண்ட இயலாமல் போகலாம்... சித்தர்கள் கூடவா அப்படி? அவர்களுக்கு உலகப் பார்வை இல்லையா? என்றும் கேள்விகள் எழுந்தால், அதில் பிழை இல்லை. நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று இவை எப்படி உலகில் பொதுவாகிப் போனதோ அப்படித் தங்களையும் பொதுவாக்கிக் கொண்டால்தான் ஒருவன் முழு சித்தன். இந்த சித்தனுக்கு அமெரிக்கனும் சரி, அரேபியனும் சரி, இந்தியனும் சரி, யானையும் சரி, பூனையும் சரி, எல்லாமே ஒன்றுதான் என்று, சமரச நோக்கில் வெளிப்படும் கருத்துகளையும் மறுப்பதற்கில்லை. எல்லாம் சரி... இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்கிற மாதிரி ஒரு சித்தர் இருக்கிறாரா? என்று பார்க்கும் போது அகப்படுபவர்தான், யாக்கோபு சித்தர். யாக்கோபு சித்தர் இவரைப் பற்றி அறிய முயலும்போது பல ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கின்றன. இவரது காலத்தை திட்டமிட்டு அனுமானிக்க இயலவில்லை. ஆனால் ஒன்று, இவர் காலத்தில் இந்து தர்மம் மட்டுமல்ல, இஸ்லாமிய தர்மமும் இருந்திருக்கிறது. நபிகள் நாயகம் இவருக்கு தரிசனம் தந்திருக்கிறார் என்பதும், இவரைப் பற்றி அறியமுற்படும்போது தெரியவருகிறது. ஆயினும், அதில் எந்த அளவு உண்மை இருக்கமுடியும் என்று கேட்டு அதை ஆராய்வதை விட, அதை நம்பி இன்புறுவது மனதை விசாலமாக்குகிறது. நாகப்பட்டினத்தில் வாழ்ந்து இறுதியில், மதுரை அழகர் கோயிலில் சித்தியடைந்ததாக காணப்படும் யாக்கோபு சித்தரின் வரலாறு, சித்தர்கள் வரலாற்றிலேயே ஒரு தனித்தன்மை உடையதாகும். மனிதர்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளுக்கும் சித்தபுருஷர்கள் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளுக்கும் நிறையவே வேறுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன. நமது நெறி முறைகள், விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டவை. கல்வி, கேள்விகளில் ஒருவர் மேதையாக வேண்டும் என்றால், முதலில் பள்ளிக்குச் சென்று ஒன்றாம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக தேர்ச்சி பெற்று, பின் கல்லூரி, பல்கலைக் கழகம் என்று உச்சிக்குச் செல்வது போன்றது நமது ஆன்மிக நெறி. சித்தர்களின் நெறிமுறை இப்படிப்பட்டதே அல்ல. பிறக்கும்போதே ஒரு பல்கலைக்கழகப் பட்டதாரி அளவு ஞானமுடன் பிறந்துவிட்ட சித்த புருஷர்கள் பலர் உண்டு. அப்படி இல்லாவிட்டாலும் கூட ஒன்று, இரண்டு என்று படிப்படியாகச் செல்வது போலல்லாமல், ஒரே நாளில் குருநாதரின் நேத்ரதீட்சையால் முழுமையான ஞானம் பெற்றவர்கள் பலர் உண்டு. அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான்_ பின்னாளில் யாக்கோபு என்று அழைக்கப்பட்ட ராமதேவர். நாகப்பட்டினத்தில் சுற்றிவந்த ராமதேவருக்கு, தான் ஒரு கூட்டுப் புழுபோல இருந்துவிடக் கூடாது என்ற எண்ணம் தோன்றிட, அவர் பல இடங்களுக்கும் செல்லத் தொடங்கினார். இந்த உலகம் முழுவதும் சென்று வர வேண்டும்; எல்லா இடங்களிலும் மனித வாழ்வு எப்படி உள்ளது என்று பார்த்து விடவேண்டும்.; எங்கே நல்லது இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பொதுமையாளன் ஆக வேண்டும் என்பது ராமதேவனின் எண்ணம். அந்த வகையில், காசிக்குச் சென்று கங்கையில் நீராடிவிட்டுத் திரும்பும்போது, சட்டநாதர் என்னும் சிவமூர்த்தியின் லிங்க ரூபம் கண்ணில்பட்டது. சிவமூர்த்தியின் ஆங்கார சொரூபத்தில் தோன்றிய சரபேஸ்வரத்தின் அம்சம் கொண்டது அந்த லிங்கம். சங்கநாதன் என்று விஷ்ணுவையும், சட்டநாதன் என்று சிவத்தையும் சூட்சுமப் பெயரில் குறிப்பிடுவார்கள். சட்டநாத ரூபம் அகந்தையை அடக்கவல்லது. பணிவைத் தந்து பரந்த நோக்கை உருவாக்குவது. இது தெரிந்தோ தெரியாமலோ ராமதேவர் அதன்மேல் பக்தி கொண்டு, அப்படியே பூசனையும் புரிந்தார். அன்று இரவு, அவர் கனவில் ‘இந்த கங்கைக் கரையை விட உனது ஊரான நாகப்பட்டின கடற்கரையில் நானிருக்க விரும்புகிறேன்’ என்று அந்த சட்டநாதர் கூறிட, ராமதேவரும் மிக மகிழ்ந்து, அதை அங்கிருந்து நாகப்பட்டினம் கொண்டு வந்து ஸ்தாபித்தார். இந்த சட்டநாதர் மிக விசேஷமானவர். ஓடும் நதிக்கரையில் தோன்றி, அது கூடும் கடலிடம் வந்து சேர்ந்த இவருடைய பின்புலத்தில் பல சூட்சுமங்கள் உள்ளன. ராமதேவர் வழிபட்ட சட்டநாதர், ராமதேவருக்கு பல சித்திகளை அந்தக் கடல்போலவே வாரி வழங்கினார். இதனால் ராமதேவர் பல சித்துக்களை எளிதில் பெற்றார். அப்படியே உடம்பை வெல்லும் வைத்ய நெறிமுறைகளில் மிகுந்த கவனம் செலுத்தி மூலிகை தேட ஆரம்பித்தார். அந்தத் தேடலில் அவருக்கு ஓர் உண்மை புலனானது. அதுதான் பூகோள ஞானம். இந்த மண்தான் உயிர்களுக்கு எல்லாவற்றையும் தருகிறது. காற்றோடும், நீரோடும், ஒளியோடும் கூடி அந்தரம் எழும்பி, இது மனித குலத்துக்கு உணவைத் தருகிறது. அந்த உணவும் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது. எல்லாவித உணவு வகைகளும் எல்லா இடங்களிலும் விளைந்து விடுவதில்லை. மலையில் விளையும் தேயிலையும் காபியும் தரையில் பட்டுப் போய் விடுகின்றன. தரையில் விளையும் சில பயிர்களோ மலையில் விளைய மறுக்கின்றன. இடத்துக்கு இடம் பஞ்சபூத கலவையில் மாறுபாடு இருப்பதால் தட்பவெப்பம், மண்சத்து, காற்றில் குளிர், பொழுதுகளில் வெப்பம் என்று எல்லாவற்றிலும் மாறுபாடுகள் உள்ளன. இந்த மாறுபாட்டிற்கு ஏற்பவே தாவரங்கள் வளருகின்றன என்பதைப் புரிந்து கொண்ட ராமதேவர், எங்கே ஒருவர் பிறக்கிறாரோ அங்கே விளையும் பொருள் எதுவாக இருப்பினும் அங்கே பிறந்தவரை அது எதுவும் செய்யாமல், அவருக்கு அது பொருந்தி விடுவதையும் பார்த்தார். அதாவது_ பூகோளமானது, மனித உடம்பையும் தன் வசம் வைத்துக் கொண்டு ஆட்டிவைப்பதையும் உணர்ந்தார். பனிமலையில் பிறந்து வளரும் ஒருவன் உடம்பு, அந்த மலைக்காட்டின் ஈரத்திற்கு ஈடு கொடுப்பதாக உள்ளது. ஆனால் தரையில் வசிப்பவன் அங்கு சென்றால், குளிரால் நடுங்கித் துன்புறுகிறான். பூகோளமானது இப்படி மனித உடம்பையும் கட்டுப்படுத்துவதை உணர்ந்தவர், உடம்பில் ஏற்படும் வியாதிகளோடு தனது பூகோள ஞானத்தை பொருத்திப் பார்த்து ஆய்வுகள் செய்தார். வெம்மை நோயால் இங்கு ஒருவர் பாதிக்கப்படுகிறார். ஆனால், வெப்பப் பிரதேசமான அரபு நாடுகளில் வாழ்பவர்களை வெப்பம் பெரிதாக பாதிப்பதில்லை. நீர்வளமே இல்லாத அந்த மண்ணில் அவர்களுக்கு நீர்ச்சத்து எதிலிருந்து, எப்படிக் கிட்டுகிறது? என்பதெல்லாம் ராமதேவரின் கேள்விகளாயின. இதனால் உலகம் முழுக்க சுற்றி வரப் புறப்பட்ட ராமதேவர், மெக்கா நகரின் வறண்ட சூழலிலும் அங்கு பல அற்புத மூலிகைகள் இருக்கக் கண்டார். பூகோள அமைப்பில் அங்கே ஒரு விசையும் இருப்பது புலனானது. பல லட்சம் முகம்மதியர்கள் அது தங்களை கடைத்தேற்றும் இடம் என்று மன ஒருமையோடு வழிபடுவதால் அங்கே அருள் அலைகளும் பரவியிருந்தன. இதை தன் தவ உடம்பால் உணர்ந்த ராமதேவருக்கு, மெக்காவை விட்டு வர மனமே இல்லாது போயிற்று. அங்கேயே தங்கி தன் ஆய்வுப் பணியை மேற்கொண்ட ராமதேவர், அங்கு நோயால் துன்புற்றவருக்கு தானறிந்த மருத்துவத்தால் அங்குள்ள மூலிகைகளையும் சேர்த்து சிகிச்சையளிக்க... அதனால் பெரிய நிவாரணம் ஏற்பட்டது. இதனால் அங்கே ராமதேவருக்கு பெரிதும் வரவேற்பு கிட்டியது. கூடவே, ஓர் அன்னியன் இங்கு வந்து ஆதிக்கம் செலுத்த முற்படுவதா? என்று எதிர்ப்பும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், உண்மையும் சத்தியமும் எவரையும் வெல்லும் என்பதற்கேற்ப, அந்த எதிர்ப்பெல்லாம் காலத்தால் அடங்கிவிட... ராமதேவரும் இஸ்லாமியத்தின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். அங்குள்ளோர் ராமதேவரை யாக்கோபுவாக்கினர். யாக்கோபுவான ராமதேவரும் குர்_ஆன் ஓதிக் கற்றார். தொழுகைகள் புரிந்தார். ஏற்கெனவே சித்த ஞானம் கை கூடி இருந்ததால் மன ஒருமை மிக இலகுவாக ஏற்பட்டதில் நபிகள் நாயகத்தின் ஆன்ம தரிசனமும் யாக்கோபுவுக்குக் கிட்டியதாகக் கூறுவர். அதன் எழுச்சியாக, பதினாறு நூல்களை அரபு மொழியிலேயே எழுதியதாகவும் கூறுவர். அப்போது, அவரைப்போலவே உலகம் முழுக்க யாத்திரை மேற்கொண்ட போகர், மெக்கா வந்தபோது ராமதேவருக்கு தரிசனம் தந்தார். ‘தாய் மண்ணை மறந்து இங்கே இப்படி இருப்பது சரியா? எதை அறிய வந்தாயோ அதை அறிந்த நீ, அதை இங்குள்ளவர்களுக்கு மட்டும் அளித்தால் போதுமா? உலகிற்கு அதை பொதுவாக்க வேண்டாமா?’ என்று போகர் கேட்க, யாக்கோபுவான ராமதேவருக்கு ஒரு விழிப்பு ஏற்பட்டது. மெக்காவை விட்டு நீங்கிய ராமதேவர், மீண்டும் நாகை வந்து, சட்டநாதரை வணங்கி, தான் மெக்காவில் அறிந்தவற்றை தமிழிலும் எழுதினார். அதுவே ‘ராமதேவ வைத்ய சாரம்’ என்ற நூலானது. இதை சிலர் ‘யாக்கோபு சாஸ்திரம்’ என்றும் கூறினர். இந்த வைத்ய முறை, மற்ற சித்த வைத்ய முறைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது. ரத்தசோகை, இரும்புச்சத்து குறைபாடு, வெம்மை நோய்கள் போன்றவற்றுக்கு இவரது வைத்தியம் பெரிதும் கை கொடுத்தது. பின்னாளில் ராமதேவருக்கு பல சித்த புருஷர்களின் தரிசனம் கிட்டியது. அவர்களில் காலாங்கி நாதரும் ஒருவர். காலாங்கி நாதர் உபதேசம் ராமதேவரான யாக்கோபுவை தவத்தில் மூழ்க வைத்தது. நெடுங்காலம் தவமியற்றிய ராமதேவருக்கு மேலும் பல சித்திகள் ஏற்பட்டன. திரும்பவும் மூலிகை தேடிப் புறப்பட்ட ராமதேவரால், பொதிகைக்கும், சீனத்துக்கும் ஆகாயமார்க்கமாக நினைத்தவுடன் சென்று வர முடிந்தது. பின் கொல்லிமலை, தென்கயிலாயம் எனப்படும் சதுரகிரித்தலம் என பல தலங்களுக்குச் சென்று அங்கே தங்கி ஆய்வு செய்தவர், இறுதியாக மதுரை அழகர் மலைக்கு வந்து அங்கேயே தங்கி விட்டார். அழகர்மலை, சிலகாலம் சமணர்கள் ஆதிக்கத்தில் இருந்தது. இங்கே நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. இதில் நீராட இந்திரன் முதலான தேவர்கள் வருவர் என்பது புராண வழிச் செய்தியாகும். இந்த மலையின் பின்புறத்தில் சைவம், வைணவம், சமணம் முதலிய பலவித ஆன்மிக நெறிகளின் சங்கமம் உள்ளது. எவ்வளவோ மலைத்தலங்கள் இருப்பினும் அழகர் மலைத் தலம் அவைகளில் பெரிதும் மாறுபட்டு, தட்பவெப்ப சூழலில் உலகின் எல்லாவித தட்பவெப்ப நிலை அமைப்பையும் தன்னகத்தே கொண்டிருப்பது. வெப்பம், குளிர், வசந்தம், வேனில் என்று எல்லாவித பருவங்களிலும் ஒரு சமமான, மிகையிலாத்தன்மை உடையது என்பர். எனவே ராமதேவராகிய யாக்கோபு சித்தர், தன் அந்திமக்காலத்தை இங்கேயே கழித்து இறுதியாக இங்கேயே சமாதியானார் என்பர்! நாகப்பட்டினத்தில் அனுதினமும் அம்பிகையின் நினைவாக வாழ்ந்து கொண்டிருந்த சித்தர்தான் இராமதேவர். சித்தர்கள் அனைவரும் சக்தி வழிபாடு உடையவர்கள்.அண்டத்தின் சக்தியைப் பிண்டத்தில் அறிந்து வழிபட்டவர்கள் சித்தர்கள்.அகத்தெளிவும் சமுதாய ஈடுபாடும், மனச்சான்றின் பேரெழுச்சியும்தான் சமயம் என்பதை வலியுறுத்தியே சித்தர் பூசா விதிகளை வரையறுத்துள்ளனர். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்ற மெய்யுணர்வு பெற்றவர்கள் சித்தர்கள். மனிதர்கள் அனைவரும் உதட்டில் ஒரு குணமும், உள்ளத்தில் ஒரு குணமுமாக வேடமிட்டு வாழ்வதை எண்ணி வேதனைப்பட்டு, மனம் வெம்பி அன்றாடம் தேவியுடம் கண்ணீர் விட்டழுவதும்அரண்டுவதும் சித்தர் இராமதேவர் வழக்கமாக இருந்தது. இதே சிந்தையுடன் விரக்தியுமாய் நாகபட்டினத்திலிருந்து காசிக்குச் சென்றார். கங்கை நதியில் மூழ்கி குளித்து விட்டு கரையேறும்போதுகங்கைக் கரையோரத்தில் சட்டைநாதர் சுவாமியின் விக்ரகம் ஒன்று அவருக்கு கிட்டியது. பக்தகளின் துணையோடு இராமதேவர் சட்டைநாதரின் விக்ரகத்தை நாகபட்டினம் கொணர்ந்து பிரதிஷ்டை செய்தார். இரவு பகலாக இடையறாது சட்டைநாதரை உருகி வழிபாடு செய்து வந்தார். வழிபாட்டின் பயனாக பல சித்தர்களின் அபூர்வத் தொடர்புகள் ஏற்பட்டன. தொடர்பின் பயனாக சித்தர்கள் பலரும் இராமதேவரை வேண்டினர். “ இராமதேவரே! மக்கா நகரில் பல அபூர்வமான சக்தி வாய்ந்த கல்ப மூலிகைகள் ஏராளமாகஉள்ளன. அவை யாவும் உயிர் காக்கும் மூலிகைகள் மட்டுமல்ல இமைக்கும் நேரத்தில் பலனைக் கொண்டு வரும் மந்திர சக்தி வாய்ந்த மூலிகையாகும். மக்கள் நலத்திற்காக அந்த மந்திர மூலிகைகளின் இரகசியங்களால் இந்த உலகையும், உயிரையும் காக்கும் பொருட்டு, நீங்கள் மக்கா நகருக்குச் சென்று வாருங்கள் “ என்றனர். நன்மைக்கும் தீமைக்கும் ஏதுவான மந்திரங்களை “அதர்வணாங்கிரஸ்” என்று வேதம் கூறுகிறது. அவற்றிம் வெளிப்பாடாகவே அன்றைய சித்தர்கள் மந்திர தந்திர ஜாலங்களையும்,மந்திர மூலிகை இரகசியங்களையும் பரிபாஷையாகத் தெரிவித்துள்ளனர். இராமதேவர் இயற்றிய ‘பூஜாவிதிப் பாடல்கள்’’ இதனை ஆதி என்றமணிவிளக்கு எனப் போற்றினார். ஆதியென்ற மணிவிளக்கை அறிய வேணும்’ அகண்டபரி பூரணத்தை காண வேண்டும், சோதியென்ற தூய்யவெளி மார்க்க மெல்லாஞ் சுகம் பெறவே மனோண்மணியென் னாத்தாள் தன்னை நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம் நிற்குணத்தி நினின்ற நிலை யாரும் காணார், வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று விளங்குவதும் பூசையிது வீண்போ காதே. தியானத்தின் போது குண்டலி சிரசை அடைந்து புருவ மத்தியில் வெண்ணிறவொளியாய் காட்சி தரும் இதுவே பரிபூரண இன்பமாகும். மனோன்மணியேகுண்டலி சக்தியாகும். மனோன்மணியைப் பெண் சக்தியாக பரிபாஷையில் சித்தர்கள் குறிப்பிடுவார்கள். ஆத்தாள்(அகத்தாள்) எனவும்,தாயாகவும் கருதுகிறார்கள். அகத்தில் பேரொளியாய் சக்தி திகழ்வதால் இச்சக்தியை அகத்தாள் என்கிறார்கள் சித்தர்கள் அந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி குண்டலினி யோகத்தாலும், இரசமணி சித்தியாலும்,குளிகையாலும் நாகப்பட்டினத்திலிருந்து மக்கா நகரத்துப் பாலைவன மணலில் வந்துசேர்ந்தார்.வறண்ட பாலைவனம் எங்கும் மணல். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல். ஒட்டங்களின் வரிசை.அப்போதுதான் இராமதேவருக்கு மிகபெரிய சோதனை வந்து சேர்ந்தது.தங்கள் நாட்டில் யாரோ அந்நியன் புகுந்து விட்டதைக் கண்டு, கூட்டமாய் அரேபியர்கள் இராமதேவரைச் சூழ்ந்து கொண்டனர்.’ ’யார் நீ…. திடிரென்று இந்த இடத்திற்கு எப்படி வந்தாய்? ஏன் வந்தாய்? உன்னைக் கொல்லாமல் நாங்கள் விடபோவதில்லை” என்று அலறினார்கள். ‘’ இராம தேவர் அவர்களுக்கு பதில் கூற முயன்றும் அவரது பதிலை காது கொடுத்துக் கேட்போர் யாருமில்லை. அவர்கள் ஆக்ரோஷத்துடன் அவரைக் கொல்ல நெருங்கினர். அவர்களில் ஒரு புத்திசாலி இருந்தான். அவனால் இராமதேவர் பிழைத்தார் என்று போகர் 7000 இல் (கீழே உள்ள பாடலில்) பாடியுள்ளார். யூகியாம் மதிமந்திரி யோகவானாம் உத்தமனார் அங்கொருவர் தான் இருந்தார் யோகியாம் சின்மயத்தில் சேர்ந்த சித்து ஒளிவான ரிஷி ஒருவர் அங்கிருந்தார் தீன் (அரபியர்கள்) தேசத்துக்குள் உன் வரவின் நோக்கம் என்ன? உண்மையிலேயே நீர் யார்? உன்னை தண்டிக்காமல் விட மாட்டோம் என்றும் கூறினர். இது பற்றி போகர் 7000 இல் 5800 ஆவது பாடலில் (கீழே உள்ளவாறு) பாடியுள்ளார். போனாரே மலைநாடு குகை கடந்து பொங்கமுடன் நபிதனையே காணவென்று கானாறு பாதைவழி செல்லும்போது கருங்காளை நபிக்கூட்டம் மிகவாய்க் கண்டு மானான மகதேவர் பதியிலப்பா மார்க்கமுடன் வந்ததனால் உந்தமக்கு தீனான தீன்பதியில் உந்தனைத் தான் திட்டமுடன் சபித்திடுவோம் என்றிட்டாரே - 5800 அதற்க்கு இராம தேவர், அய்யா, இங்கு வருவது தவறு என்று எனக்குத் தெரியாது.’’ ‘’ அப்படியென்றால் நீ வேற்று மதத்துக்காரானா? உனக்கு இங்கு என்ன வேலை?’’ ‘’ அய்யா, நான் தவசாதனையில் ஈடுபட்டுள்ள சித்தர். எல்லா மதமும் சம்மதமே. நான் மத வேறுபாடுகளை பார்ப்பதில்லை.எனக்கு மனித உயிர்கள்தான் முக்கியம்.இங்குள்ள உயிர்காக்கும் கல்ப மூலிகைகளுக்காகவே நான் வந்தேன்’’ ‘’ ஓ! நீங்கள் தவயோகியா? சித்தரா? நீங்கள் இங்கே தங்க வேண்டுமானால் மதம் மாற வேண்டும், சுன்னத் செய்ய வேண்டும். மத வேறுபாடு நீங்கள் பார்ப்பது இல்லை என்பது உண்மையானால் அதற்குச் சம்மதிக்கிறீர்களா?’’ ‘’ சம்மதிக்கிறேன்” ‘’ இனிமேல் நீர் குரான் ஓத வேண்டும் ‘’ “எல்லாம் இறைவன் செயல்” என்று கூறிய இராமதேவர், சுன்னத் செய்துக் கொண்டு அன்று முதல் யாக்கோபுவாக மதம் மாறினார். மக்கா நகரத்து மனிதர் யாவருடனும் இன்முகத்துடன் பழகினார். இதனை போகர் 7000 இல், 5801 மற்றும் 5802 பாடலில் கூறியுள்ளார். என்றவுடன் இராமதேவர் தான் பணிந்து எழிலான வார்த்தையது கூறும்போது சென்றதுமே யாகோபு என்று கூறி சிறப்புடனே சுன்னத்து செய்துமல்லோ தின்றிடவே ரொட்டியது தானும் ஈந்து சிறப்புடனே அசன் உசேன் என்று கூறி வென்றிடவே உபதேச பிரணவத்தை விருப்பமுடன் மலுங்குமார் ஒதினாரே - 5801 ஓதவே நபிநாயர் கூட்டத்தார்கள் உத்தமர்கள் மனம்போலே மனதுவந்து நீதமுடன் மக்கபுரி கோட்டைக் குள்ளே நிஷ்களங்க பக்கிரி யாகோபு தன்னை கோதமுடன் கொண்டு சென்றார் அரண்மனைக்குள் கேறாமல் கொத்துபா ஓதினார்கள் வீதமது பயனறிந்து சித்து தாமும் விடுபட்டு வந்ததொரு யாகோபாச்சே - 5802 அங்குள்ள காயகல்ப மூலிகைகளைக்கண்டறிந்து அவற்றை சாதனைக்குப் பயன்படுத்தியதுடன் மற்றவருக்கும் அதன் மகத்துவம் பற்றிஎடுத்துரைத்தார்.மக்கா நகரின் இசுலாமிய மக்களிடையே இரண்டறக் கலந்து அவர்களின் நோயகற்றும் மருத்துவராக இருந்து எல்லா காலங்களுக்கும் பயன்படும்படியான மருத்துவ நூல்களை அராபிய மொழியில் பாடி வைத்தார்.அங்குள்ள நபிகள் நாயகம் சமாதியைத் தொழுது துதித்து வருவதை யாக்கோபுச் சித்தர் வழக்கமாகக் கொண்டு வந்தார். ஒருநாள் ஆகாயம் அதிரும்படியான பெருத்த ஓசை ஏற்பட்டது. அன்பர்கள் அனைவரும் குரானை ஓதித்தொழுத போது யார் கண்ணிலும் படாமல் நபிகள் நாயகம் யாக்கோபுச் சித்தருக்கு மட்டும் காட்சி தந்தார். ஆத்ம அநுபவம், தெய்வ நுட்பம் போன்ற உயரிய சாதனைகள் பற்றி நபிகள் நாயகம் யாக்கோபுச் சித்தருக்கு மட்டும் உபதேசித்து மறைந்தார். யாக்கோபுச் சித்தர் அதன்பின் சமாதி நிலையடைய விரும்பி அதற்காக சாதகம் செய்து வந்தார். மனமானது ஒன்றையே எண்ணியிருந்து வேறு நிலையில் எண்ணா நிலைக்காதிருக்குமானால் அதுவே சாமதி. ஒரு பூரணத்துவம் வாய்க்கப்பெற்ற சித்தர் ஆன்ம ஞானத்தைப் பெருக்கிக்கொண்டு தாம் உடலுடன் இருக்கும் போது நினைவு, செயல் யாவற்றையும் துறந்து சிவனுடன் சேர்ந்து விடுவார்.பரத்தோடு சேர்ந்து பரப்பிரம்மமாய் எங்கும் நிறைந்தவர்களாகி விடுவார்கள். அரேபிய நாட்டின் பல்வேறு கல்பமூலிகைகளைப் பற்றி அறிவதற்காக தமிழ் நாட்டிலிருந்து போகர் சித்தர் மக்காவுக்கு வந்திருக்கின்ற செய்தி அறிந்து யாக்கோபுச் சித்தர் அவரை எதிர்கொண்டு வரவேற்றார். காயசித்தி,யோகசித்தி,கற்பசித்தி அனைத்தும் பெற்றவர் சித்தர்லலவா போகர்! முதன் மையான சித்தராக போகர் கருதப்படுகின்றார். போகமுனிவர் யாக்கோபுச் சித்தருக்கு உபதேசம் செய்தார். ”மக்காவில் யாக்கோபுவாகவும், தமிழ்நாட்டில் இராமதேவராகவும் இருக்கின்ற நீ சமாதி அடைய வேண்டி காலம் இதுவல்ல. இந்தப் பூதலத்தில் உன்னால் பலரும், பாமர மக்களும் பயன் கிட்டியபின் நீ சமாதி நிலை நாடுவதுதான் சரியான வழி” போகமுனிவரிடம் அவ்வாறு உபதேசம் பெற்ற யாக்கோபுச் சித்தர் அதன்பின் தம்முடைய ஒப்பற்ற சித்தியால் யார் கண்ணிலும் தென்படாது அங்கிருந்து மறைந்தார். யாக்கோபுச் சித்தர் காடு,மலைஎல்லாம் சுற்றி அலைந்து திரிந்தார்.தம்மை சந்தித்தவர்கள் எல்லார்க்கும் உபதேசம் செய்ததுடன் பிரச்சனைகளைக் களைந்து மகிழ்வித்தார். காற்றையே உடலாகக் கொண்டவர் என்றும்; காலனை போன்ற நெருப்பானவர் என்றும்; காலனால்நெருங்க முடியாதவர் என்றும் கூறப்படும் காலங்கிநாதர் எனும் சித்தரின் ஆசியைப்பெற விரும்பினார் யாக்கோபுச் சித்தர். பலயுகம் கடந்து வாழ்ந்துவரும் காலங்கிநாதர் ரிஷிகள் பலரின் ஆசீர்வாதங்களைப்பெற்றவர். எனவேதான் யாக்கோபுச் சித்தர் அவரது ஆசீர்வாதத்தை பெற விரும்பினார். ஒருநாள்காலங்கிநாதர் சமாதி முன் சென்று அவர் வணங்கிபோது சமாதியிலிருந்து அவர் வெளிப்பட்டுயாக்கோபுச் சித்தரை ஆசீர்வதித்தார்.தம்முடைய அனுபவ இரகசியங்களை யாக்கோபுச் சித்தருக்குஉபதேசித்தார். தான் சமாதிநிலை அடைய இதுவே சரியான தருணம் என முடிவுசெய்து தமது சீடர்களை அழைத்தார் ’’சீடர்களே நான் இப்போது சமாதியில் அமரப் போகிறேன். பத்து ஆண்டுகளுக்குப் பின்பு சமாதியிலிருந்துமீண்டும் நான் எழுந்து வருவேன்,நான் சாமதியிலிருந்து வெளிவரும் காலத்தில் இங்கு பல அற்புதங்கள்நிகழும். விலங்குகள் கூட ஞானம் பேசும். நறுமலர்கள் பூத்து மணம் கமழும். இது போன்ற அடையாளங்கள்நான் திரும்பி வரும் நாள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இப்போது சமாதியைமூடிவிடுங்கள்.” என்று கூறியபடி யாக்கோப்பு சித்தர் சமாதி உள்ளே சென்று விட்டார். இதை போகர் தன்னுடைய போகர் 7000 த்தில் 3872 ம் பாடலில் பாடியுள்ளார். இறங்கியே சமாதிதனில் இருந்துக்கொண்டு எழிலாகச் சீடனுக்கு அதிகம் சொல்வார் சுரங்கம் என்ற குழிதனிலே போறேன் அப்பா சுருதிபொருள் கருவி கரணாதி எல்லாம் அரங்கமுடன் உள்ளடக்கி மனதிருத்தி வையகத்தின் வாழ்க்கை எனும் தளை அகற்றி உறங்களுடன் பத்தாண்டு இருப்பேன் என்று உத்தமனார் யாக்கோபு கூறினாரே “மாயத்தைக் கண்ட சித்தர் மதியதைப் பெருக்கிக் கொண்டு காயத்திலிருக்கும் போது கர்த்தனைக் கலந்துகொள்வார் ” என அகத்தியருக்கு கந்தபெருமான் அட்டமாசித்தி உரைத்தன் பொருளாய் யாக்கோபுச் சித்தர்உடம்போடு சமாதி நிலை கொண்டார். யாக்கோபுச் சித்தர் சமாதிக்குள் போனவர் இறந்துவிட்டார் என்றே மக்கள் யாவரும் நம்பினர். அவரது சீடர்களும் பல இடங்களுக்கு சென்றுவிட்டனர். யாக்கோபுச் சித்தர் மீண்டும் வரமாட்டார் என்று சீடர்களும் நம்பினார்கள்.ஆனால் ஒரு சீடர் மட்டுமே நம்பிக்கையோடு சமாதிக்கருகிலேயே இருந்து வந்தார். அந்த சீடரின் நம்பிக்கை வீண் போகவில்லை.தன்னுடைய குருநாதர் கூறியதைப் போலவே சமாதியிலிருந்து எழுந்து வந்ததைக் கண்டு சீடர் மகிழ்ந்தார். “குருவே! தாங்கள் சமாதிக்குள் சென்ற பின்பு மக்கள் எல்லோரும் தாங்கள் இறந்து விட்டதாகவும், தங்கள் உடல் மண்ணோடு மண்ணைப் போகும் எனவும், தங்களிடம் சித்து ஏதும் இல்லை என்றும் கேலி பேசினார்கள்” என்று சீடர் கூறியதைக் கேட்டார். மேலும் அந்த சீடர் தான் அதை எதனையும் காதில் போட்டுக் கொள்ளாமல், ராம தேவரின் சாமாதி அருகிலேயே இருந்ததாகவும், படுத்து உறங்கியாதகவும், இரவும் பகலும் சமாதிக்கு காவலாய் இருந்ததாகவும், ஒரு முறை கூட தனது ஊருக்குப் போகவில்லை என்றும் கூறினார். இதை போகர் 7000 இல் கீழே உள்ளவாறு பாடியுள்ளார். கூச்சலுடன் வெகு மாண்பர் கும்பல் கூடி குவலயத்தில் வேகமுடன் வார்த்தை சொன்னார் ஏச்சாகக் கூறினதோர் மொழிகட்கு எல்லாம் எதிராக யான் ஒன்றும் பேசேன் பாரே - 3886 பாரினிலே வருவாரும் பூவாரும் உண்டு நேரேதான் அவர்களிடம் வார்த்தை பேசேன் நேர்மையுடன் சமாதியிடம் பள்ளி கொள்வேன் கூரேதான் சாமாதியிடம் இருந்து கொண்டு கொப்பெனவே தேவர் வரும் காலம் மட்டும் ஊரேதான் போகாமல் காத்திருந்து உறுதியுடன் சேவையது கண்டிட்டேனே - 3887 “சீடனே! அவ்வாறு கூறியதில் தவறு இல்லை.இந்த உடல் நிலையானதல்ல.என்றேனும் ஒருநாள் மண்ணுக்கு இரையாகத்தான் வேண்டும். நான் மீண்டும் சமாதியில் இறங்கப் போகிறேன். முப்பது ஆண்டுகள் கழித்துத் திரும்பவும் வருவேன். என்னைப் பற்றி தவறாகப் பேசியவர்கள் கண்கள் குருடாகப் போய்விடும்” என்று யாக்கோபுச் சித்தர் கூறியபடி மீண்டும் சாமதிக்குள் இறங்கிச் சென்று விட்டார். கேலி செய்த மக்கள் யாக்கோபுச் சித்தர் சாபத்தினால் கண் பார்வை அற்றவர்களாயினர். இதை போகர் 7000 இல் 3901 வது பாடலில் கூறியுள்ளார். குருடராய்ப் போனவர்கள் சிலது மாண்பர் குவலயத்தில் அழிந்தவர்கள் சிலது மாண்பர் திருடராய் ஒளிந்தவர்கள் சிலது மாண்பர் தீர்க்கமாய் வாய்க்குளறிச் சிலது மாண்பர் தங்கள் தவறை அவர்கள் உணர்ந்தனர். கண் பார்வை கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பது போல் வருந்தினர். வாய்க் கொழுப்பினால் வந்த வினை இனி தீருமோ என்று கதறி அழுதனர். இதை போகர் 7000 இல் 3902 வது பாடலில் கூறியுள்ளார் முன்னின்று யாக்கோபு வருவதெப்போ மூவுலகில் சாபமது தவிர்பதெப்போ மன்னரவர் மாண்பர்களின் வினையைநீக்கி மானிலத்தில் வரம்கொடுக்கும் காலம் எப்போ - 3902 தங்களுக்குக் கண்பார்வை வேண்டி யாக்கோபுச் சித்தர் சமாதியிலிருந்து வெளியே வரும் வரை அவர்கள் யாவரும் சமாதிக்குப் பூஜை செய்து வணங்கிக் காத்திருந்தனர். நீண்ட காலம் என்பதால் அதில் பலர் இறந்தும் போய்விட்டனர். இதை போகர் 7000 இல் 3903 வது பாடலில் கூறியுள்ளார் கோடியாம் சிலபேர்கள் ஞானவான்கள் குவலயத்தில் வெகுநாளாய்ப் பேருண்டாக நாடியே சாமதியிடம் கிட்டிருந்து நாதாந்தப் பேரொளிவின் சாமாதி முன்னே வாடியே காத்திருந்த சீடர் தாமும் வன்மையுடன் உபதேசம் பெற்றார் தானே. - 3903 முப்பதாண்டுகள் கழித்துச் சமாதியில் இருந்து எழுந்து வந்த யாக்கோபுச் சித்தர் நடந்தது யாவும் அறிந்தார். தன்னிடம் மன்னிப்பு கோரியவர்களுக்கெல்லாம் அவர்களின் குறைபாடுகளை போக்கி அருள் புரிந்தார். ஜோதி வடிவாய் வெளிவந்த யாக்கோபு தம் சீடர்களது குறைகளையும் போக்கியருளினார். ஆனால் அவருக்கு மெக்கா நகரத்து வாழ்க்கை அலுத்துப் போனது. ஜீவன் முக்தி அடைய தான் தமிழகத்திற்குத் திரும்பிச் சென்றிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டானாது. சிறிது காலம் தன் சீடர்களுடன் தங்கிய யாகோபு அவர்களுக்கு வேண்டிய நல் உபதேசங்களைச் செய்தருளினார். பின் அவர் தன் சீடர்களிடம் "நான் மீண்டும் சமாதிக்கு செல்கிறேன். இனி நான் திரும்பமாட்டேன்" என்றுரைத்தருளினார். யாக்கோபு கூறியதைக் கேட்டு அவரது சீடர்கள் திடுக்கிட்டனர். அவரைப் பணிந்து தொழுது அழுதனர். அவர் மீண்டும் சமாதிக்குச் செல்லக் கூடாது, தங்களுடனே இருக்க வேண்டும் எட்ன்று மன்றாடினர். ஆனால் அவர்களிடம் யாக்கோபு "அட மூடர்களே! அவ்வாறே நான் இருந்தாலும் நான் இருக்கும் காலம் வரை நீங்களும் இருக்க இயலுமா? பிறந்தர்வரகள் அனைவரும் இறந்தே தீர வேண்டும். இந்த உடம்பு தான் அழியுமே தவிர ஆன்மா ஒரு போதும் அழியக் கூடியதல்ல. எனவே நீங்கள் வருந்த வேண்டாம். நான் என்றும் உங்களுடனேயே இருப்பதாக எண்ணுங்கள் என்று கூறிவிட்டு விடைபெற்று மீண்டும் சமாதிக்குள் புகுந்தார். யாகோபு மெக்காவில் சமாதி கொண்டதாகச் சிலர் கூறுவர். ஆனால் அவர் சமாதியுள் இருந்து வெளிப்பட்டுத் தமிழகம் வந்தவுடன் சதுரகிரியில் சிறிது காலம் தங்கி இருந்தார். தாம் மெக்காவில் இருந்த போது அரபி மொழியில் எழுதிய மருத்துவ நூல்களை தமிழில் இயற்றினார். பின் சதுரகிரி வனத்தில் சில காலம் தங்கிய யாக்கோபு என்ற இராமதேவர் பின் அழகர்மலைக்கு சென்று அங்கே சமாதி அடைந்தருளினார்.
Similar Posts :
கோரக்கர்,
நந்தி தேவர்,
பட்டினத்தார்,
திருமூலர்,
தேனி ஸ்ரீசச்சிதானந்த சாமி, See Also:
ராமதேவர் சித்தர்கள்