விவாகரத்து பெற்று மீண்டும் இணையும் வாய்ப்பை எற்படுத்தும் கிரக அமைப்பு

ஓம் சரவண பவ!

*விவாகரத்து* பெற்று மீண்டும் இணையும் *வாய்ப்பை* எற்படுத்தும் *கிரக_அமைப்பு!*

வணக்கம் நண்பர்களே! நேற்று அடியேனின் பார்வைக்கு வந்த ஒரு ஆண் ஜாதகம் இது.ஜாதகர் 5.03.1979 மாலை மணி 5.20 க்கு சென்னையில் பிறந்திருக்கிறார்.ஜாதகருக்கு சிம்ம லக்னம்,ரிஷப ராசி,ரோகிணி நட்சத்திரம் 3 ஆம் பாதம்.இப்பொழுது ஜாதகருக்கு 42 வயது முடிந்து,11 மாதம் 22 நாள் ஆகிறது. இப்பொழுது குரு திசை 13.05.2023 வரையும், இதில் இறுதி புத்தியான ராகு 13.05.2023 வரையும், புதன் அந்தரம் 13.05.2022 வரையும் நடைபெற இருக்கிறது.

இந்த ஜாதகத்தை ஆய்வு செய்து ஜாதகரிடம்,*குடும்ப வாழ்க்கை* சிறப்பில்லை என்றும்,கணவன் மனைவி பிரிந்து விட்ட போதும், அடுத்த *திருமணமும்* நடைபெறமால் காலம் கடத்தி கொண்டிருக்கும் நபர் எனவும்,மேலும் ஒரு அறிய வாய்பாக பிரிந்த *மனைவியே மீண்டும்* சேர்ந்து வாழ்வதற்கான சூழலை கிரகங்கள் எற்படுத்துகின்றன என்றும் கூறினேன். (Astro Sadaiji )

ஜாதகரும் ஆம் அய்யா, 2008 ஆம் வருடம் திருமணம் ஆகியதுங்க, 2012 லியே, இருவரும் பிரிவதாக முடிவு செய்து, ஜீவனாம்சமும், குழந்தையும் அவருடன் இருப்பதாக தீர்ப்பு வந்ததால் இருவரும் சட்ட ரீதியாக *விவாகரத்து பெற்றோம்*. இது வரை நானும் சரி,அவளும் சரி *வேரொரு திருமணம்* செய்து கொள்ள வில்லை.இருப்பினும் அவரின் அண்ணன், *குழந்தையின் எதிர்கால* நலனுக்காக மீண்டும் என்னுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக ஒரு வருடமாக சொல்லிக் ( 81221 56377 ) கொண்டிருக்கிறார்கள். நான் தான் நம்மையே வேண்டாம் என குழந்தையுடன் சென்றவள் தானே, நமக்கு இனி குடும்ப வாழ்க்கை ஒத்து வராது என நினைத்து ஒதுங்கியே இருந்தேன்.

மேலும் சமீபத்தில் எனது தாயாரும் இறந்து விட்டதால் பெரிய குழப்பத்தில் இருக்கிறேன்.மீண்டும் ஏற்றுக்கொண்டால் எங்களுக்குள் பிரச்சனை வருமா? இல்லை நான் இப்படியே இருந்து விடவா? ஜாதக ரீதியாக நல்லதொரு பதிலை தாருங்கள் அய்யா என்றார்.

சரியென கூறி ஜாதக ரீதியாக அவர்களுக்கு பதில் கொடுத்து அனுப்பினேன்.அவை!உங்கள் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானதிபதியான புதன் எட்டாமிடத்தில் சனியின் சாரம் பெற்று *நீசபங்க ராஜ யோகத்தில்* இருந்தாலும் கூட களஸ்திர ஸ்தானத்தில் இருக்கும் சூரியன் செவ்வாய் கேதுவிற்கு, லக்னத்தில் அமர்ந்த சனி பார்வை இருந்ததாலும், சனி செவ்வாய் சமசப்த பார்வையுடன் சனிக்கு அயனசயன போக ஸ்தானதிபதியான சந்திரனுக்கும் *சனி_செவ்வாய்* பார்வை இருந்ததாலும்,கணவன் மனைவிக்குள் பிரச்சையாகி விவாகரத்தை தந்திருக்கிறது. இருப்பினும் குடும்ப காரகனான குரு ஐந்து எட்டுக்கு அதிபதியாகி சனியின் சாரம் பெற்றதால் குரு திசையில் சனி புத்தியிலியே விவாகரத்து பெற வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை.
மேலும் லக்னாதிபதியான சூரியன் குருவின் சாரம் பெற்று நவாம்ஸத்தில் *உச்சத்தில்* இருந்தால்,இந்த மனைவியை தவிர மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய மனம் இடம்கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அத்துடன் இந்த ஜாதகமும் *மதிமதியுடன் போராடும்* தன்மையில் இருந்தால் ஒரு *வைராக்கிய வாழ்க்கையை* வாழ்ந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.அத்துடன் லக்னத்தில் நின்ற ராகுவும் சுக்கிரன் சாரம் பெற்றும்,அந்த சுக்கிரன் நவாம்ஸத்தில் உச்சத்தில் இருப்பதாலும் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கும் விதமாக, மீண்டும் சேர்ந்து வாழ ராகுவே,விருப்பத்தை தெரிவிக்க வழிவகுத்திருக்கிறது. மேலும் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருந்தாலும் கூட அவை மறைவு ஸ்தானம் இல்லைதானே! எனவே சுக்கிரன் லக்னாதிபதியின் சாரம் பெற்றதால்,விவாகரத்து பெற்றிருந்தாலும்,மற்றொரு திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாமல் 10 வருடமாக வாழ வைத்திருக்கிறது என்பது நிதர்சண உண்மை.
எனவே இவரின் ஜாதக அமைப்பு படி வாழ்ந்து கெட வேண்டியதும், கெட்டு வாழ வேண்டியதும் ஜாதக அமைப்பாக இருக்கிறது. எனவே 13.04.2022 குரு பெயர்ச்சி பிறகு மனைவியை அழைத்து வந்து நல்லதொரு நாளில் மறு *தாலிகட்டி* வாழ்க்கை நடத்த துவங்குவது நல்லது.இருப்பினும் ஏழாமிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாப கிரகம் இருந்த போதிலும் அயனசயன போக ஸ்தானத்தில் இருந்த குரு,மற்றொரு திருமணத்திற்கு அனுமதிக் கவில்லை என்பது புரிகிறது.எனவே ஜாதகர் விவாகர்த்து பெற்ற பெண்ணையே மறுபடியும் திருமணம் செய்து வாழலாம் என்றும், அதற்கு பரிகார வழிபாடுகளையும் சொல்லி உரையை நிறைவு செய்தேன்.

ஜாதகரும் மிக்க மகிழ்ச்சிங்க சார், அடுத்தாக,மனைவி குழந்தை ஜாதகமும் அனுப்புகிறேனுங்க, இரண்டொரு நாளில் பார்த்து சொல்லுங்க சார் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

என்ன நண்பர்களே! இந்த ஜாதகத்தில் ஏன் விவாகர்த்து ஆனாது என்பதற்கும்,மறு மணம் புரியாமல் இருந்ததற்கும்,அந்த பெண்ணுடனே சேர்ந்து வாழ வேண்டிய காரணத்தையும் தெளிவாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அடுத்த தருணத்தில் மற்றுமொரு ஆய்வு ஜாதகத்தில் சந்திக்கும் வரை.
என்றும் ஜோதிடப்பணியில்
Astro Sadaiyappa
8122156377
 
Top