************

மிருகசீரிஷ நட்சத்திரம் !!
மிருகசீரிஷம் :

நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம், மிதுனம்

மிருகசீரிஷம் 1, 2ம் பாத நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம்

மிருகசீரிஷம் 3, 4ம் பாத நட்சத்திரத்தின் இராசி : மிதுனம்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய்

மிருகசீரிஷம் 1, 2ம் பாத நட்சத்திரத்தின் இராசி அதிபதி - ரிஷபம் : சுக்கிரன்

மிருகசீரிஷம் 3, 4ம் பாத நட்சத்திரத்தின் இராசி அதிபதி - மிதுனம் : புதன்

பொதுவான குணங்கள் :

உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பவர்கள்.

மற்றவர்களுக்கு மரியாதை மற்றும் பண்போடு பழகக்கூடியவர்கள்.

நல்ல பேச்சுத்திறமை உடையவர்கள்.

கொஞ்சம் கர்வம் மற்றும் திமிரும் உடையவர்கள்.

உறுதியான உடல் அமைப்பை உடையவர்கள்.

இரகசியங்களை பாதுகாப்பவர்கள்.

தீர்க்கமான அறிவினை உடையவர்கள்.

தாய் மற்றும் தந்தை மீது பாசம் கொண்டவர்கள்.
மிருகசீரிஷம் முதல் பாதம்

:
இவர்களிடம் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

மன பலம் உள்ளவர்கள்.

கல்வியில் ஓரளவு விருப்பம் உள்ளவர்கள்.

கலைகள் மூலம் இலாபம் அடையக்கூடியவர்கள்.

தன்னம்பிக்கை, துணிச்சல் உள்ளவர்கள்.

எல்லாம் தெரியும் என்ற கர்வம் உடையவர்கள்.
மிருகசீரிஷம் இரண்டாம் பாதம்

:
இவர்களிடம் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

புத்திசாலிதனம் உடையவர்கள்.

இரக்க குணம் கொண்டவர்கள்.

திட்டமிட்டு செயலாற்றுபவர்கள்.

சொன்னதை செய்யக்கூடியவர்கள்.
மிருகசீரிஷம் மூன்றாம் பாதம்

:
இவர்களிடம் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புபவர்கள்.

உத்தம குணங்களை கொண்டவர்கள்.

வசீகரமான தோற்றம் கொண்டவர்கள்.

கலைஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மிருகசீரிஷம் நான்காம் பாதம்

:
இவர்களிடம் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

முடிவுகளை விரைவில் எடுக்கக்கூடியவர்கள்.

வஞ்சக எண்ணங்கள் கொண்டவர்கள்.

பிடிவாத குணத்துடன் நெஞ்சில் அழுத்தம் கொண்டவர்கள்.

தானாகவே பிரச்சனைகளை உருவாக்கி கொள்ளக்கூடியவர்கள்.