நவாம்சத்தின் பயன் ராசியில் ஒரு கிரகம் நின்ற சார வலுவை தெரிவிப்பதாகும், நவாம்சம் பழங்காலத்து முதல் எழுதப்பட்டே வந்துள்ளது, ஓலை சுவடி முதல் இன்றைய கணினியில் ஜாதகம் கணிப்பது வரை நவாம்சம் இடம்பெற்றே இருக்கிறது, இதன் காரணங்களை தெளிவாக கூறவே இந்த பதிவு, தொடர்ந்து படிக்கவும்...
நவாம்சம் கட்டம் ராசியில் அந்த கிரகம் நின்ற சார வலுவை எளிதாக கூறிவிடும், இதன் மூலம் நேரம் மிச்சமாகும், ஜோதிடருக்கு சார பலம் கணிக்க அவசியம் இருக்காது, இல்லையேல் ஜோதிடர் நவாம்சம் கணித்தே சார வலு கணிக்க வேண்டும், இன்னொரு பயன்பாடு என்னவென்றால் கிரகங்களின் குணாதிசயத்தை வெளிப்படுத்தும், அதாவது ராசியில் ஒரு கிரகம் நின்ற நிலையே நிரந்தரமானது, நவாம்சத்தில் அந்த கிரகம் பெற்ற சார வலுவில் வழியே ராசியில் அந்த கிரகம் நின்ற நிலையில் என்ன குணாதிசயத்தில் செயல்படும் என்பதை எடுத்து காட்டுவதே நவாம்சத்தின் தலையாய உபயோகம் ஆகும், ஒரு கிரகம் ராசியில் நின்ற நிலையை ஜாதகரின் வாழ்நாளில் முதல் பாதியிலும், நவாம்சத்தில் பெற்ற சார வலுவை வாழ்நாளில் பிற்பாதியிலும் வழங்கும், சோதித்து பார்த்தால் இதன் உண்மைத்தன்மை விளங்கும், ராசிக்கு மட்டுமே பார்வை, பரிவர்த்தனை, இவ்வாறான அமைப்புகள், நவாம்சத்துக்கு இந்த அமைப்புகள் கிடையாது ஏனெனில் நவாம்சம் சார வலு எனும் குணாதிசயத்தை குறிப்பதால், இதனால் தான் திருமணம் என்றால் நவாம்சம் முக்கியம் என்கிறார்கள், ஏனெனில் ராசியில் கிரகம் எந்த நிலையில் நின்றாலும் நவாம்சத்தில் அந்த கிரகத்தின் குணாதிசயம் பிரதிபலிக்கும் என்பதால், அதே போல் ராசியில் பகை, நீச்சம், இவ்வாறான நிலையில் நின்ற கிரகம் நாவம்சத்தில் சார வலுவில் தன் குணாதிசயத்தின் வழியே வலு பெற்றால், அந்த கிரகம் அசுப நிலையில் இருந்து வெளிவரும் ஆற்றல் பெற்றதாகும், இதனால் நீச்ச நிலையில் நின்ற கிரகம் காலம் செல்ல செல்ல மெல்ல மெல்ல நீச்ச நிலையில் இருந்து வெளிவரும் என்பதே பொருள், நவாம்சம் உண்மையில் மிக பயனுள்ளதே அதை மேலே கூறிய காரகத்தின் வழியே கணித்தால் இல்லையேல் பயன் இல்லாமல் போகும், மீண்டும் சந்திப்போம்...
Source
Karthik subramanyam
Similar Posts : நவாம்சம் கட்டம் , See Also:நவாம்சம் நவாம்ச பலன்