- முளைகட்டிய பாசிப்பயறு - ஒரு கப்,
- சின்ன வெங்காயம் - 7,
- பச்சை மிளகாய் - 3,
- இஞ்சி - ஒரு துண்டு,
- பூண்டு - 5 பல்,
- கடலைமாவு - 4 டீஸ்பூன்,
- அரிசிமாவு - ஒரு டீஸ்பூன்,
- கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன்,
- மல்லித்தழை - ஒரு கைப்பிடி,
- உப்பு, எண்ணெய் - தலா தேவையான அளவு.
முளைப்பயறுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் கரகரப்பாக அரைக்கவும். மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும்.
கார்ன்ஃப்ளார், கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, அரைத்த கலவை, மல்லித்தழை.. எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பிசைந்து, காயும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: எந்த வகை முளைப்பயறிலும் இதைச் செய்யலாம். சுவையாக இருக்கும்