உருளைக்கிழங்கை குண்டு, குண்டாக நறுக்கிக்கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கிக்கொள்ளுங்கள். வரமிளகாயை இரண்டாகக் கிள்ளிக்கொள்ளுங்கள். ஒரு கடாயில் கால் கப் எண்ணெய் விட்டு, சோம்பு போட்டு வெடித்ததும் வரமிளகாய் போட்டு கருகாமல் வறுக்கவும். பிறகு, வெங்காயம், உருளைக்கிழங்கு போட்டு நன்றாகக் கிளறி அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, உப்புப் போட்டு நன்றாகக் கொதிக்கும்போது மூடி, தீயைக் குறைத்துவிடுங்கள். கிழங்கு நன்றாக வெந்தபிறகு, தீயை அதிகரித்து, தண்ணீர் வற்றியதும், சுருளக் கிளறி தீயைக் குறையுங்கள். மேலும் சிவக்க சிவக்க கிளறி இறக்குங்கள். வரமிளகாயுடன் சேர்ந்து வெந்தால்தான் கிழங்கில் உப்பு, காரம் நன்றாக ஊறி இறங்கும். தயிர்சாதத்துக்கு வெகு பொருத்தம் இந்த வறுவல்
Mutton Chops
Similar Posts : பருப்பு ரசப் பொடி, மைக்ரோவேவ் சிக்கன் குருமா, How to Make Idly powder, குட்டி உருளைக்கிழங்கு வறுவல், வளைகாப்பு - 5 வகை சாதம், See Also:உருளைக்கிழங்கு வரமிளகாய் வறுவல் சமையல்