இந்து மதத்தில் எதற்கும் நேர் பொருள் படும் படி விளக்கம் கிடைக்கப் பெறாது.
சிற்ப சாஸ்திரத்தின் படி, சிலை செய்ய தேர்வு செய்யும் பாறையில் அதிகப் படியான உஷ்ணம் இருக்கும். (உதாரணத்திற்கு – திருப்பதி ஏழுமலையான் திருவுருவச்சிலை திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறை கொண்டு செய்யப்பட்டுள்ளது. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். இந்த பாறைக் கொண்டு செய்ததால் தான் ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது) இந்த பாறையை குளிர்விக்க அபிஷேகம் தேவைப்படுகிறது
அறிவியல் படி கூற வேண்டும் என்றால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதால் அப்பகுதியில் காற்று மண்டலம் ஈரமாகும். எதிர் மின்னோட்டம் அதிகமாகும். ஈரப்பதமும், எதிர் மின்னோட்டமும் இருக்கும் இடத்தில் ஆக்சிஜன் அதிகமாக வெளிப்படும். சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்கும் போது, ரத்த ஓட்டம், இதயத் துடிப்பெல்லாம் சீராகும்.
இறைவனுக்கு படைக்கும் வழக்கம் ஏற்பட்டதன் பொருள், இயற்கை கொடுக்கும் அத்தனை பொருட்களுமே இறைவனான பரம்பொருலால் படைக்கபட்டவையே என்பதை வாழும் மானிதர்களுக்கு உணர்த்துவதற்காகவே ,மேலும் படைத்த உணவை அணைத்து உயிர்களுக்கும் பகிர்ந்தளிக்கவேண்டும் என்னும் நல்ல கருத்தையே இது உணர்த்துகிறது