கார்த்திகை நட்சத்திர தேவதை | இரண்டு முகங்களும் நான்கு கரங்களும் சிவந்த நிறமும் வாய்த்த அக்னி பகவான். |
வடிவம் | தீக்கொழுந்துகள் எரிவது போன்ற வடிவமுடைய ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டம். |
எழுத்துகள் | ஆ, இ, ஊ, ஏ. |
ஆளும் உறுப்புகள் | 1-ம் பாதம் - தலை, கண்கள், 2, 3, 4-ம் பாதங்கள் - முகம், கழுத்து, தாடை. |
பார்வை | கீழ்நோக்கு. |
பாகை | 26,4 - 40.0 |
நிறம் | சிவப்பு. |
இருப்பிடம் | சூனியப் பிரதேசம். |
கணம் | ராக்ஷஸ கணம். |
குணம் | மிச்ரம். |
பறவை | மயில். |
மிருகம் | பெண் ஆடு. |
மரம் | பாலுள்ள அத்திமரம். |
மலா் | மல்லிகை. |
நாடி | வாம பார்சவ நாயு |
ஆகுதி . அன்னம் |
பஞ்சபூதம் | நிலம் |
நைவேத்யம் தயிர் சாதம். |
தெய்வம் | முருகன். |
அதிர்ஷ்ட எண்கள் | 1, 6, 9. |
அதிர்ஷ்ட நிறங்கள் | மெருன், வெளிர் சாம்பல். |
அதிர்ஷ்ட திசை | கிழக்கு. |
அதிர்ஷ்டக் கிழமைகள் | ஞாயிறு, வியாழன். |
அதிர்ஷ்ட ரத்தினம் | ஸ்டார் ரூபி. |
அதிர்ஷ்ட உலோகம் | தங்கம். |
சொல்ல வேண்டிய மந்திரம்
ஷடானனம் யோகிஹ்ரு த்யான கம்யம்
ப்ருஹத்வீரகம் திவ்ய மயூர வாஹனம்
ருத்ரஸ்ய ஸூனும் ஸூரசைன்ய நாதம்
குஹம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே|
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்: தேவசேனாபதி ஸ்ரீமுருகப் பெருமான், காச்யப மகரிஷி, ஆசார்ய வினோபாஜி, குருநானக், ரிஷிகேஷ் சுவாமி சிவானந்த சரஸ்வதி, ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி, திருமங்கையாழ்வார், திலகர்.
வானியல் விளக்கங்கள்
கார்த்திகை (Pleiades)
இது ஏழு நட்சத்திரங்களின் கூட்டமைப்பு. இந்தக் கூட்டமைப்பின் மொத்த நிறை 800 S, வயது 75 லிருந்து 1/0 கோடி. ஆண்டுகள். அதிக வெப்பத்தைத் தரக்கூடிய கதிர்வீச்சு உடையது. அபயந்தி, அம்பை, சுப்னிகை, தாலா, வர்ஷ்யனி, விடனி, கார்த்திகை என்னும் அல்சியோன் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய கூட்டம்.
நிறம் | நீல நிற நட்சத்திரங்கள். |
தோராய ஒளிப் பொலிவு | 2.86 |
நிறமாலை | 871/6 4 கடத |
ஒளிரும் தன்மை | கண்டறியப்படவில்லை |
(பூமியிலிருந்து) தொலைவு | 440 ஓளி அடிகள் |
உண்மையான ஒளிப் பொலிவு | கண்டறியப்படவில்லை. |
புற வெப்பநிலை | 13,000 K |
பொதுவான பலன்கள் :
இருபத்தேழு நட்சத்திரங்களில் சூரியனின் முதல் நட்சத்திரமாக வருவது கார்த்திகை நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அரசாங்கப் பதவிகளுக்கும் அதிகாரத்துக்கும் உரிய வாகமான சூரியனின் அம்சத்தில் பிறந்தவர்கள். இந்த நட்சத்திரத்தின் 2, 3, 4 பாதங்களைக் கட்டடக் கலைக்கும் வாகனங்களுக்கும் அதிபதியான சுக்கிரன் ஆதிக்கம் செலுத்துகிறார்.
நட்சத்திர மாலை என்னும் நூல், வார்த்தை அது உடையனாகும், வழக்கறிந்து உரைக்க வல்லன், குணமுடன் கல்வி கற்கும்... என்று கூறுகிறது. அதாவது நல்லது, கெட்டது அறிந்து நியாயத்தை நிலை நாட்டும் நீதிமான்களாகவும் குணவான்களாகவும் கல்வி மீது விருப்பம் உள்ளவர்களாகவும் விளங்குவீர்கள் என்கிறது.
தேஜஸ்வி... என்று
யவன ஜாதகப் பாடல் கூறுகிறது. ஆகவே பார்ப்பதற்கு அழகாக, தேஜஸ் உடையவர்களாக, கம்பீரமாக இருப்பீர்கள். பிருகத் ஜாதக நூல் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள் என்று கூறுகிறது. ஜாதக அலங்கார நூல், கொள்ளும் ரச வர்க்கத்தில் பிரியன்; அற்ப நித்திரையன்; கூறுஞ் செஞ்சொல்..." என்கிறது. அதாவது இனிப்பை விரும்பி உண்பவன், ஆழ்ந்த உறக்கமில்லாதவன், அரசர்களுக்குப் பிரியமானவன் என்று பொருள்.
கார்த்திகை நட்சத்திரம் முதலாம் பாதம் மேஷ ராசியிலும், 2. 4. ம் பாதங்கள் ரிஷப ராசியிலும் வரும்.
மொத்தத்தில் கார்த்திகை நட்சத்திரக்காரர்களான நீங்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுபவர்கள். சற்று உயரமும் நடுத்தர உடல் வாகும் பரந்த நெற்றியும் கொண்டவர்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பீர்கள். தசை பலத்தைவிட எலும்பு பலம் உங்களுக்கு அதிகம். எதையும் வெளிப்படையாகப் பேசுவீர்கள். குழந்தைப் பருவத்தில் கையில் இடைப்பதையெல்லாம் ௭ டுத்து வீசும் அளவுக்கு அடிக்கடி கோபம் வரும். சூடான உணவில் மட்டுமே விருப்பம் இருக்கும்.
பழைய உணவுகளைத் தொட மாட்டீர்கள். பசியைக் கொஞ்சம்கூடப் பொறுக்க மாட்டீர்கள். பள்ளிப் பருவத்தில் உராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்புக் கலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களில் பலர், சாரணர் இயக்கத்தில் பங்கேற்பார்கள்.
காரசாரமான விவாதங்களில் உங்களுக்கு நிகர் நீங்களேதான். அதனால்தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர், சிறந்த வழக்கறிஞராகவும் பள்ளி ஆசிரியராகவும். கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சிலர் மருத்துவத் தொழிலில் சிறந்து விளங்குபவர்களாகவும் மக்களுக்கு சமூக சேவை செய்யக்கூடிய பெரிய பதவியை வகிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் பலர் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களே. சித்தர்கள் மற்றும் அரசர்களில் சிலர் மேஷ ராசியில் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
2, 3, 4-ம் பாத, ரிஷப ராசியில் பிறக்கும் கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் மக்களை வழி நடத்திச் செல்பவர்களாக இருப்பார்கள். முழு சுதந்திரமுள்ள இடத்தில் வேலை கிடைக்கும். மற்றவர்கள் உங்களை கட்டுப்படுத்தினாலோ கட்டாயப்படுத்தினாலோ உத்தியோகத்தை உடனே உதறித் தள்ளிவிடுவீர்கள். அதனால் உங்களில் பலர் மத்திய வயதில் நிறுவனங்களை நிறுவி நடத்துவார்கள். உணவு, கெமிகல் வியாபாரத்தில் ஈடுபடுவார்கள்.
காதல் விவகாரத்தில் ஒதுங்கியே நிற்பீர்கள். திருமண வாழ்க்கையிலோ கறாராக இருப்பீர்கள். பலர், மனைவியிடம்கூட விட்டுக் கொடுத்துப் போக மாட்டார்கள்.
அளவுக்கு அதிகமாக ஆடை, அபரணங்களை அடுக்கி வைப்பதில் ஆர்வம் இருக்காது. ஆடமபரமாக இல்லாமல் யதார்த்தமாக இருப்பீர்கள். கனவு உலகத்தில் சஞ்சரிப்பதெல்லாம் உங்களுக்குப் பிடிக்காது. தன் சக்திக்கு முடிந்ததை செய்து முடிப்பதில் திறமையானவர்கள் நீங்கள்.
அதீதமான தெய்வ பக்தி உண்டு. ஆனால், தெய்வ பக்கியைக் காட்டிலும் தாய், தாய் நாடு, தாய் மொழியின் மீது அதிகப் பாசம் இருக்கும். 43 வயது (முதல் உங்களுடைய வாழ்வில் ஏற்றம் உண்டாகும். முன்பின் சம்பந்தமில்லாதவர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். மலேரியா. இதய நோய், ஒற்றைத் தலைவலி ஆகியவை வந்து நீங்கும். உங்களுக்கென ஒரு தனிப் பாதையை அமைத்துக்கொண்டு பயணிக்கும் நீங்கள், நீண்ட வாழ்வு வாழ்வீர்கள்.
கார்த்திகை நட்சத்திரத்தில் தொடங்கினால் வெற்றிபெறும் செயல்கள் சிலம்பாட்டம் பயில, துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட, கடன் பைசல் செய்ய, சுரங்கம் வெட்ட, செங்கல் சூளைக்கு நெருப்பிட, பழைய வாகனம் விற்க நன்று.
கார்த்திகை நட்சத்திர பரிகார ஹோம மந்திரம்
அக்னிர் ந: பாது க்ருத்திகா|
நக்ஷத்ரந் தேவமிந்த்ரியம் இதமாஸாம் விசக்ஷணம்|
ஹவிராஸஞ்ஜுஹோதன।| யஸ்ய பாந்தி ரச்மயோ யஸ்ய கேதவ:।
யஸ்யேமா விச்வா புவனானி ஸர்வா|
ஸ க்ருத்திகாபிரபிஸம்வஸாந;:|
அக்னிர்நோ தேவ: ஸுவிதே ததாது|
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பனிரெண்டு முகம் ருத்ராட்சம் அணிய வேண்டும்.
கார்த்திகை நட்சத்திரம் 1ம் கால் 24*40 மேஷம் முதல் 30 மேஷம் முடியஉள்ள ராசி செவ்வாயாலும் நட்சத்திரம் சூரியனாலும் ஆளப்படுவனவாக உள்ளன. நட்சத்திரம் சுட்டிக்காட்டும் உடலின் உறுப்புஈ தலை, கண்கள், மூளை, பார்வை, முகம், கழுத்து, குரல் வளையின் மேற்பகுதி, அடிநாக்கின் அடியில் இருக்கும் இரண்டு கழலைகள் கீழ்தாடை, தலையின் பின்புறம் உள்ள பகுதி. நட்சத்திரம் சுட்டிக்காட்டும் நோய்கள்ஈ குளிர்காய்ச்சல், முறைக்காய்ச்சல், யானைக்கால் வியாதியை உண்டு பண்ணும் ரத்தத்தில் உள்ள சிறிய ஒட்டுஉண்ணிகள், கொள்ளை நோய், பெரியம்மை, காயங்கள், வடுக்கள், மூளை சார்ந்ததண்டு மூளைக்காய்ச்சல், வெட்டுக்கள், விபத்து, முகப்பருக்கள், திடீர்வெடிப்புகள் தீவிபத்து ஆகியவற்றால் ஏற்படும் காயங்கள் போன்றன நோய்களாகும். பரு, முகப்பருக்கள், வெட்டுக்காயங்கள், சிவந்துபோன கண், கண்வலி, தொண்டையில் தொந்தரவுகள், முழங்கால்களில் கட்டிகள், கழுத்திற்கு மேற்பகுதியிலான வீக்கம் மூக்கில் கட்டிகள் போன்றன நோய்களாகும்.
கார்த்திகை 2, 3 மற்றும் 4ஆம் கால்கள் ரிஷபத்தின் 0 முதல் 10 வரை. சுக்கிரன் ராசியதிபதியாக இருக்கிறது.. சூரியன் நட்சத்திராதிபதியாக இருக்கிறது.. நட்சத்திரம் சுட்டிக்காட்டும் உடலின் உறுப்பு முகம், கழுத்து, குரல் வளையின் மேற்பகுதி, அடிநாக்கீன் அடியில் இருக்கும் இரண்டு கழலைகள் கிழ்தாடை, தலையின் பின்புறம் உள்ள பகுதி. நோய்கள் பரு, முகப்பருக்கள், வெட்டுக் காயங்கள், சிவந்து போன கண், கண்வலி, தொண்டையில் தொந்தரவுகள், முழங்கால்களில் கட்டிகள், கழுத்திற்கு மேற்பகுதியிலான வீக்கம், மூக்கீல் கட்டிகள்.
இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் முருகப் பெருமான்.
நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் உங்களின் ஜென்ம ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு அலங்காரப்படுத்தி புஷ்பம் மஞ்சள் குங்குமம் எண்னெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்)எண்ணிக்கை யின் படி அன்னாதானம் செய்து விட்டு வர உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார்
கோயில்: கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர்
அம்மன்: துங்கபால ஸ்தனாம்பிகை
தல வரலாறு: தேவர்கள், பத்மாசுரனிடம் இருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அப்போது, சிவன் இங்கு நெருப்பு வடிவில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். தவம் கலைந்த அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் பறந்தன. அதிலிருந்து கார்த்திகேயன் (முருகன்) அவதரித்தார். தீப்பொறி பொன்னிறமாக எழுந்ததால் "காஞ்சன நகரம்' எனப்பட்டது. அதுவே "கஞ்சாநகரம்'(பொன்நகரம்) என்றாகிவிட்டது.
சிறப்பு: கார்த்திகையில் பிறந்தவர்கள் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாளில் தீபமேற்றி வழிபட வாழ்வு வளம் பெறும். கார்த்திகையில் பிறந்த கன்னிப்பெண்கள் அம்மனை வழிபட விரைவில் திருமணயோகம் கைகூடும்.
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் 8 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை10- 11, மாலை4-5
போன்: 94874 43351, 04364 282 853.Similar Posts :
கிருத்திகை நட்சத்திர பலன்கள்,
பூரட்டாதி நட்சத்திர பரிகாரங்கள்,
கேட்டை நட்சத்திர பரிகாரங்கள்,
விருட்ச சாஸ்திரம், 27 நட்சத்திரங்கள்,
பூரட்டாதி நட்ச்சத்திர பரிகாரம், See Also:
கிருத்திகை நட்சத்திரம்