ஒருவருடைய ஜாதகத்தை பார்க்கும் முன் அந்த ஜாதகம் சரியான சாதகமா என்பதை சரிப்பார்பது அவசியமாகிறது
ஒரு ஜாதகத்தை பார்த்து சொல்வதற்கு முன்பு அந்த ஜாதகத்தை அலசி ஆராய்ந்து சரி பார்த்து விட்டு பலன் சொல்ல வேண்டும். ஜாதகம் சரி பார்க்க பல வழிகள் இருப்பினும் அவற்றும் சில
- ஜாதகர் பகலில் பிறந்தவரா அல்லது இரவில் பிறந்தவரா என்பதைக் காணவேண்டும்.
- ஜாதகர் வளர்பிறையில் பிறந்த குழந்தையா அல்லது தேய்பிறையில் பிறந்த குழந்தையா என்பதை பார்க்க வேண்டும்
- ஜாதகர் உத்ராயணப் பிறப்பா அல்லது தட்சிணாயணப் பிறப்பா என்பதை அறிய வேண்டும். இதனை சூரியன் நின்ற மாதம் மற்றும் இராசியைக் கொண்டு அறியலாம்
- ராகு கேது எனப்படும் பாம்பு கிரகங்கள் தங்களுக்குள் சம்பந்தமாக அமைய குறிக்கப் பெற்றுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்
- சூரியனும் சுக்கிரனும் புதனும் சுமார் 2 இராசிகளுக்குல்ளேயே சூர்யன் இருக்கும் இடத்திலிருந்து அமையுமே தவிற அதற்கு மேல் தள்ளி அமையாது. இந்த அமைவு நியதிக்கு ஏற்றவாறு குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை காண வேண்டும்.
பிறகு கீழ்கண்டவைகளைக் காண்பது சிறப்பு
- ஜாதகத்தில் அதிர்ஷ்டப் புள்ளி உள்ளதா என்று பார்க்கலாம்
- ஜாதக லக்கினம் இந்து லக்கினமா என்று பார்க்கலாம்
- ஜாதகம் ஷேத்திர ஸ்புடமா (பெண்ணா) அல்லது பீஜஸ்புடமா (ஆணா) என்று பார்க்க வேண்டும்
Similar Posts :
ஜாதகபார்க்கும் முன், See Also:
உத்ராயணம் தட்சிணாயணம்