Raymond Moody யின் ஆராய்ச்சி
"ஒருவர், இறக்கும் நிலையில், அவர் இறந்துவிட்டதாக டாக்டர் கூறுவதைக் கேட்கிறார்., பிறகு ஒரு சத்தம், அல்லது இசைக் குரல் கேட்கிறது.- பின்னர் ஒரு இருட்டு சுரங்கப்பாதை போன்ற ஒன்று புலப்படுகிறது. இறப்பவரால், தனது உடல் அந்த சுரங்கப்பாதையில் செல்வதைக் காணமுடிகிறது. பின்னர், முன்னால் இறந்த பலரைச் சந்திக்கிறார். ஒரு ஒளிசக்தி, அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.- இதன்மூலம் அவரால் தான் வாழும்போது எப்படி இருந்தோம் என்பதை எடைபோட முடிகிறது. வழியில் எதோ ஒரு தடை - அவர் வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லவேண்டும் எனக் காட்டுகிறது. சென்ற இடத்தில், அவருக்கு அமைதி, சந்தோஷம், அன்பு எல்லாம் கிடைத்தாலும் அவர் தனது உடலுக்கே திரும்பிவந்து மீண்டும் உயிர் பெறுகிறார். பிறகு தனது அனுபவத்தை பிறரிடம் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்கிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அவர் பெற்ற அனுபவம் , அதற்குப் பிறகு அவர் வாழும் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது." என அவர் கூறுகிறார்.
1975ல் ரோமன்மூடி (Dr. Raymond Moody) என்பவர் "வாழ்க்கைகக்குப் பின் வாழ்க்கை" (Life after Life) எனும் தனது கட்டுரையில், தான், இறப்பின் விளிம்புவரை சென்று திரும்பியவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களைக் குறிப்பிடுகிறார்.
See Also மரணத்திற்கு அப்பால்
Similar Posts : கென்னெத் ரிங்கின் ஆராய்ச்சி, பால் ப்ருண்டோனின் ஆராய்ச்சி, ரேமண்ட் மூடியின் ஆராய்ச்சி, சைப்ரஸ் பெண்னின் NDE, See Also:மரணத்திற்கு அப்பால்