"Astrology is a Science of Probablities" என்று சொல்லும் நரசிம்மராவ் ஜி சென்ற ஆண்டே கணித்திருந்தார், "2024 தேர்தல் மோதி ஜிக்கு சுலபமானதல்ல. அவர் தோற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பாஜக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று.
நேற்று பிரதமர் பதவிப் பிரமாணம் எடுத்தபின், மோதி 3.0 எப்படியிருக்கும் என தன் கருத்துகளை காயத்திரி தேவி @ அல்டர்னேட் மீடியாவிடம் பகிர்ந்திருக்கிறார் இன்று. (ஆங்கில நேர்காணல்).
அவற்றிலிருந்து சில:
1, பதவிப் பிரமாணம் எடுத்த நாள் அற்புதமானது. ஞாயிற்றுக் கிழமை + புஷ்ய நட்சத்திரம் அரிதானது.
2, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 'உறவு' சிறப்பாக இருக்கும்.
3, பதவி ஏற்ற முகூர்த்தம் பாரதத்தின் பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கும். பொருளாதாரம் வளரும்.
4, பிரச்சினை ஏதும் ஏற்பட்டால் அவற்றை வெற்றிகரமாக சமாளிக்கக் கூடிய முகூர்த்தம்.
5, பல சிறப்பம்சங்கள் இருந்தாலும், கூட்டணிக்குள் சில பிரச்சினைகள் வரலாம். "We can expect some 'drama' next year". அவற்றை திறம்படக் கையாள்வார் பிரதமர். They (the dramas) will only be 'breaking news', but won't cause any real harm.
6, என்றாலும், இந்த ஆட்சி 5 ஆண்டுகளை முடிக்கலாம் அல்லது 5 ஆண்டு முடியுமுன்னே தேர்தல் அறிவிக்கவும் வாய்ப்பு என்கிறார் நரசிம்மராவ் ஜி. (குறிப்பு: சில வருடங்களுக்கு முன் இவர் ஒரு காணொளியில் சொல்லியிருந்தார் 2027இல் யோகி ஜியிடம் பிரதமர் பொறுப்பைக் கொடுத்து மோதி ஜி வேறொரு பொறுப்பை எடுத்துக் கொள்வார் என்று. அது நடக்குமோ??)
7, விருச்சிக லக்னம் இருப்பதால் தன் எதிரிகளை தேள் கொட்டுவது போலக் கொட்டி அழிப்பார் மோதி ஜி.
8, சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமாரால் தேசிய ஜனநாயக கூட்டணி உடையலாம் என்று சிலர் நினைக்கலாம். அது நடக்காது. ஆனால் உண்மையில் இண்டி கூட்டணி - குறிப்பாக காங்கிரஸ் கூட - உடைந்து தேசிய ஜனநாயக கூட்டணியுடன் போக வாய்ப்பிருக்கிறது.
9, தற்போதைய காலம் ராகுல் காந்திக்கு மிகச் சிறந்த காலம். இது தான் உச்சம். இதற்கு மேல் அவருக்கு உயரம் போக முடியாது. இனி ராகூல், காங், இண்டிக்கு இழப்புகள் அதிகமாக இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பற்றி கவலைப்படத் தேவையில்லை. ???? ????
10, பவன் கல்யாண் மேலும் உயர்வார். அவர் பணத்துக்காகவும் புகழுக்காகவும் அதிகாரத்துக்காகவும் அரசியலில் இல்லை. அவருடைய ஜாதகப்படி, அவர் ஒருக்காலமும் மோதி ஜிக்கு துரோகமிழைக்க மாட்டார். சந்திரபாபு நாயுடு திசை மாறினால் அவரை பவன் கல்யாண் பார்த்துக் கொள்வார்.
11, கூட்டணி ஆட்சி என்றாலும், கூட்டணிக் கட்சிகளே எதிர்த்தாலும், சீர்திருத்தங்களை செய்தே தீருவார் மோதி ஜி. நல்ல முகூர்த்தம்!
12, "பாரதத்தின் எதிரிகள் பற்றி..." கேள்விக்கு, "மோதி ஜியை வீழ்த்த நினைத்த எதிரிகளுக்கு 2024 தேர்தல் தான் கடைசி வாய்ப்பு. அதில் ஜெயித்து விட்டார் மோதி ஜி. மோதி ஜியை வீழ்த்த நினைத்த வெளிநாட்டு உள்நாட்டு சக்திகள் தன் முயற்சியைக் கைவிடும். அடுத்த சில மாதங்களுக்கு சில பிரச்சினைகள் ஏற்படலாம். என்றாலும் அவை விலகும். மோதி ஜி விரோத சக்திகள் மோதி ஜியுடன் சமாதானம் செய்து கொள்ளும்." என்கிறார்.
13, காங் - இண்டி கூட்டணி வலுவிலக்கும். அங்கிருந்து பலர் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவார்கள். இதன் காரணமாக, 'கூட்டணி கட்சிகள் குடைச்சல் கொடுப்பார்கள்' என்ற நிலை இல்லாமல் போகும்.
உபயம். செய்திக் கதிர் WhatsApp குழுமம்
Similar Posts : மோதி 3.0 எப்படியிருக்கும், நரேந்திர மோடி ஜாதகம் ஓர் அலசல், See Also:மோடி