SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Astrology Basics (Tamil)
  3. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
  • 2024-08-06 00:00:00
  • Shasunder

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்

Share this post

f ✓ X in ↗ ⧉

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?

அனுபவங்களை அதிகமாகக் கொடுத்து வாழ்க்கையை செப்பனிடும் சனி பகவானே பூசம் நட்சத்திரத்தை ஆள்கிறார். சனியை அதிபதியாகக் கொண்ட சக்தி வாய்ந்த நட்சத்திரம் இது. இது கடக ராசிக்குள் வரும் நட்சத்திரம். சந்திரனை அதிபதியாகக் கொண்ட ராசி இது. இப்படி சந்திரனும் சனியும் சேர்ந்து ஆள்வதால், சந்திரனுடைய கலா தத்துவமும், கற்பனையும், சனியின் கடின உழைப்பும், தைரியமும் ஒன்றாக இவர்களிடத்தில் வெளிப்படும்.
 
பூச நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்த குழந்தைகள் எப்படி என்று பார்ப்போம். ராசியாதிபதி சந்திரன், நட்சத்திரத்தை ஆளும் சனி, முதல் பாதத்தின் அதிபதி சூரியன் என மூவரும் சேர்ந்து இவர்களை ஆட்சி செய்கின்றனர். இவ்வாறு மூன்று முக்கிய கிரகங்கள் ஆள்வதால், சிறிய வயது முதலே வித்தியாசமாக இருப்பார்கள். ‘‘சின்னப் பையனா இருந்தாலும், அவன் சொல்றதுலயும் விஷயம் இருக்கு’’ என ஆச்சரியப்பட வைப்பார்கள். முதல் பாதத்தை சூரியன் ஆட்சி செய்வதால், சிறிய வயதிலேயே சிலருக்கு கண்ணாடி போட வேண்டியிருக்கும். கொஞ்சம் முன்கோபத்தோடு இருப்பார்கள். தன்னை விட வயதில் மூத்தவர்களோடு நட்பு கொள்வார்கள். ஏறக்குறைய 17 வயது வரை சனி தசை நடைபெறுகிறது.

கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், சனி தசை முடிகிற காலமாதலால் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். கல்லூரி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும். யாருமே எளிதில் விரும்பாத துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்து வெற்றி பெறுவார்கள். ஆங்கில இலக்கியம், பொலிட்டிகல் சயின்ஸ், வரலாறு போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுத்தால் பேராசிரியராகும் வாய்ப்புண்டு. ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங், மருத்துவத்தில் கண், கால், நரம்பு அறுவை சிகிச்சை நிபுணராக வாய்ப்புண்டு. எம்.பி.ஏ. படிக்கும்போது ஹெச்.ஆர். துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தல் நல்லது.
 
இரண்டாம் பாதத்தை கன்னி புதன், சந்திரன், சனி என மூவரும் முறையே ஆட்சி செய்கின்றனர். பாதத்தின் அதிபதியாக புதன் வருவதால், சூட்சுமமான புத்தியோடு திகழ்வார்கள். விளையாட்டுகளில் மாநில அளவில் வெற்றி பெறும் வாய்ப்பும் உண்டு. இவர்கள் பேசினால், அதில் யோசிக்க பத்து விஷயங்கள் இருக்கும். கணிதத்தில் புலியாகப் பாய்வார்கள். கிட்டத்தட்ட 13 வயது வரை சனி தசை இருக்கும். வைட்டமின் சி குறைபாடு, சரும நோய் போன்றவை வந்து நீங்கும். ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பள்ளியில் படித்து, பின்னர் வேறு பள்ளிக்கு மாறும் சூழ்நிலை ஏற்படும். 14 வயதிலிருந்து 30 வயது வரை புதன் தசை நடைபெறுவதால், பாதத்தின் அதிபதியான புதனின் ஆசியோடு திட்டமிட்டு வெற்றி பெறுவார்கள். இவர்களில் பலரும் சி.ஏ.,  ஏ.சி.எஸ் எனப் படித்து பிரகாசமடைகிறார்கள். பி.இ. கெமிக்கல், புள்ளியியல் படிப்பில் நிபுணத்துவம் என்று சிறப்படைவார்கள். மெரைன் எஞ்சினியரிங் படிப்பிற்கும் முயற்சிக்கலாம்.    
 

மூன்றாம் பாதத்தை சனி, சந்திரன், சுக்கிரன் என்று மூவரும் ஆள்கிறார்கள். மூன்றுமே நட்புக்கிரகங்கள். ஏறக்குறைய 8 வயது வரை சனி தசை இருக்கும். அதில் இரண்டு வருடங்கள் கொஞ்சம் படுத்தினாலே அதிகம். 9 வயதிலிருந்து 24 வரை புதன் தசை வரும்போது படிப்பைத் தாண்டி, கலை சம்பந்தமான போட்டிகள், விளையாட்டு என்று ஈடுபடுவார்கள். போட்டிகளிலும் பங்கேற்பார்கள். படிப்பிலும் குறை சொல்ல முடியாது. இவர்களில் பலரும் தங்களுக்குப் பிடித்தமான ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு, பிறகு தொழில் சார்ந்த கல்வியை கற்பார்கள். ஃபேஷன் டெக்னாலஜி, கேட்டரிங், விஸ்காம் போன்ற படிப்புகள் இவர்களுக்கு ஏற்றவை. அதில் பெரிதாக சாதிக்கலாம். ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங், ஆட்டோமொபைல் எஞ்சினியரிங், எலக்ட்ரானிக்ஸ் என்று படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு.  

நான்காம் பாதத்தை செவ்வாய் ஆள்வதால், இளம் வயதிலேயே பேச்சு சாதுர்யம் இருக்கும். 4 வயது வரை சனி தசை இருக்கும். செவ்வாய் இங்கு பாதத்தின் அதிபதியாக வருவதால் ஏதேனும் சிறு அறுவை சிகிச்சை நடக்கலாம். 5 வயதிலிருந்தே புதன் தசை தொடங்கி 20 வரை நடைபெறும். இந்த நட்சத்திரத்தில் இந்த நான்காம் பாதத்தைச் சேர்ந்தவர்கள்தான் கொஞ்சம் சோதனைக்கு ஆளாவார்கள். கல்லூரிவரை ஏனோதானோ என்று படித்து முடிப்பார்கள். ஆனால், வாழ்க்கையில் ஜெயிப்பார்கள். பள்ளியில் படிக்கும்போது சுளீரென்ற கோபத்தால் நிறைய பேரை பகைத்துக் கொள்ள நேரிடும். 21 வயதிலிருந்து 27 வரை கேது தசை நடைபெறும்போதும் படிப்பு பற்றிய விஷயங்கள் சுமாராகத்தான் இருக்கும். பள்ளியில் சுமாராகப் படித்தாலும், கல்லூரி என்று வரும்போது கெமிஸ்ட்ரி, புவியியல், மண்ணியல், விலங்கியல் போன்ற படிப்புகளை எடுத்தால் நல்லது. பி.இ. எலெக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி. என்று படித்தால் வெற்றி பெறுவார்கள். பலர் ராணுவம் அல்லது காவல்துறை வேலைக்குச் செல்வார்கள்.

பூசம் நட்சத்திரம் கடக ராசிக்குள் இருக்கிறது. சந்திரன் இங்கு உச்சமாகிறார். மேலும், மனதிற்கு உரியவனும் சந்திரன்தான். ஆகவே எப்படிப் பார்த்தாலும் சந்திரன் பூஜித்து சக்தி பெற்ற கோயில்கள்தான் இவர்களுக்கு அதீத நன்மையைத் தரும். அப்படிப்பட்ட ஒரு தலம்தான் திருமாந்துறை ஆகும். தேய்ந்த சந்திரனை ஈசனின் அருளால் முழுமையாக ஒளிரச் செய்த தலம் இது. அதனாலேயே அட்சயநாதர் என்று இத்தல நாயகருக்குப் பெயர். சந்திரனுக்கு வந்த க்ஷயம் எனும் குஷ்டநோயைத் தீர்த்தவரும் இந்த அட்சயநாதரே. இவரை வணங்கி கல்வியில் சிறக்கலாம். கும்பகோணத்தை அடுத்த சூரியனார்கோவிலுக்கு 2 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தத் தலம்.

கடக ராசிக்குள் உடல் வலிமையும் மன உறுதியும் அதிகம் கொண்டவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். ஆயில்ய நட்சத்திரத்தை வித்யாகாரகனான புதன் ஆள்கிறார். சிறிய வயதிலிருந்தே இவர்கள் தனித்துத் தெரிய வேண்டுமென விரும்புவார்கள். அதனாலேயே பல சோதனைகளையும் எதிர்கொள்வார்கள். எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ளத் துடிப்பார்கள். வயதுக்கு மீறிய சிந்தனைகள் இருக்கும். இதனால் பல புறக்கணிப்புகளையும் எதிர்கொள்வார்கள். மதிப்பெண்ணுக்காக படிக்காமல், உலக விஷயங்களைத் தெரிந்து கொள்ள படிப்பார்கள். ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பலருக்கு வெளிநாடுகளில் சென்று படிக்கும் யோகம் கிட்டும்.

 


Similar Posts : பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம், புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்,

See Also:பூசம்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 250
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

Sakadeva Knows Present Past Future
Sakadeva knows present past future
2019-10-06 00:00:00
About Saturn
About Saturn
2019-10-06 00:00:00
Seven Chakras
Seven Chakras
2019-10-06 00:00:00
Shall We Eat Non Vegetarian Food
Shall we eat non vegetarian food
2019-10-06 00:00:00
வில்லியம் பாரெட்டின் ஆராய்ச்சி
வில்லியம் பாரெட்டின் ஆராய்ச்சி
2019-10-06 00:00:00
Sithars Astrology Software1
Sithars Astrology Software1
2019-10-06 00:00:00
Sithars Profile Matching Software1
Sithars Profile Matching Software1
2019-10-06 00:00:00
ஜாதகர் இரட்டைக் குழந்தைகளில் ஒருவரா
ஜாதகர் இரட்டைக் குழந்தைகளில் ஒருவரா
2019-10-06 00:00:00
Sooriyan (sun)
Sooriyan (Sun)
2019-10-06 00:00:00
Start With Spice And End With Sweet
Start With Spice and End With Sweet
2019-10-06 00:00:00
  • Advice
  • After Death
  • Aquarius
  • Aries
  • Ascendant
  • Astrology originate
  • aswini
  • Authors
  • Best Astrology software for windows
  • best-astrology-software
  • Bodhidhar
  • Bodhidharma Birth
  • Bodhidharma in Nanjing
  • Bodhidharma Travel to China
  • chinese
  • Hinduism
  • japanese
  • kalki
  • medicine
  • stress
  • Tamil astrology software
  • vedic
  • குங்குமம்
  • சித்தர்கள்
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com