திருமண யோகம் அற்ற ஜாதகம் பரிகாரம்லக்கனம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம்,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம், ஒரு சாதகருக்கு மண வாழ்வினை பற்றி அறிய உதவும் ஸ்தானங்கள் ஆகும்.
மேற்கண்ட ஸ்தானங்களில் பாவகிரகங்கள் அல்லது மறைவிட அதிபதிகளின் தொடர்பு ஏற்பட்டிருந்தாலும், இவை மட்டுமல்லாமல் இந்த நான்கு ஸ்தான அதிபதிகள் மேற்கண்ட வகையில் பாவிகள் தொடர்பு அல்லது பலம் இழந்து நிற்பது அல்லது மறைவிட ஸ்தானமான ஆறு,எட்டாம் இடங்களில் அமர்ந்தாலோ கால தாமத திருமணத்தினை தரும்.
சிலரது சாதகங்களில் ஏழாமிடத்தில் சுக்கிரன் இருந்து காரகபாவ நாஸ்தி ஏற்படினும், லக்கன ராசியுடனும் மற்றும் களஸ்திரகாரகன் சுக்கிரனுடன் பாவிகளுக்கு இடையே அகப்பட்டு குடும்பாதியும் கெட்டு இருப்பின் சாதகருக்கு திருமணம் கால தாமதம் ஆகும்.
பரிகாரம்:
ஜாதகத்தில் திருமண யோகம் இல்லாமல் இருந்தால், தஞ்சாவூர் அருகில் உள்ள கண்டியூரிலோ அல்லது பிரம்மா கோவிலுக்கு சென்று பிரம்ம தோஷம் தீர்த்துக்கொள்ளலாம். தோஷம் நீக்கும் போதும் முழுமனதோடு இறைவனை நினைத்து நம்பிக்கையுடன் செய்தால் நாம் அவற்றிலிருந்து விடுபடலாம். எந்த ஒரு செயலும் பூர்வ புண்ணிய விதிப்படிதான் நடக்கும் என்றாலும் பரிகாரங்களினால் அவற்றிலிருந்து ஒரளவு விடுபடலாம். இன்னும் பாதிக்கப்பட்ட கிரகங்களுக்கு மந்திர ஜெபங்கள் செய்வதன் மூலமும் விடுபடலாம்Similar Posts :
திருமண யோகம் அற்ற ஜாதகம் பரிகாரம்,
திருமண யோகம் அற்ற ஜாதகம் , See Also:
திருமண யோகம் அற்ற ஜாதகம்