Natives-Language-using-horoscope-in-Jambu-Maharishi-Jothidam
இலக்கினதிரண்டில் குருவிருந்தால் வேதசாஸ்திரங்கற்பான்
இதமுடனே புதனிருந்தால் தமிழில்வல்லோனாம்
தெலுங்குகன்னடங்கற்பான் சனிசெவ்வாய்நிற்கில்
தெளிவாகராகுகேது இரண்டோனும் சேர்ந்திருந்தால்
பலவிதமாயன்னிய பாக்ஷைமுதலாயுள்ள
பலபாஷை நீசபாஷை யெல்லாம்கற்று
நலமுடனே சமர்த்தராய் விளங்கியிந்த
ஞாலமதில் கீர்த்தியுடனிருப்பர்தானே.
- ஜம்புமகரிஷி ஜோதிடம் என்னும் நூலில் இருந்து
உரை : இலக்கினத்திற்கு இரண்டாமிடமாகிய வாக்கு ஸ்தானத்தில் குருபகவனிருந்தால் வேதசாஸ்திர புராணங்களைக் கற்றுணர்வார்கள்.
வாக்குஸ்தனத்தில் புதனிருந்தால் தமிழ் வித்தையில் தேர்ச்சியடைந்து கீர்த்தியயிருப்பார். வாக்கு ஸ்தானத்தில் சனி பகவானாகினும் செவ்வாயாகிலுமிருந்தால் தெலுங்கு கன்னட பாஷையும் கற்றுணர்வாகள். வாக்குஸ்தானாதிபதியும் இராகு பகவானும், கேது பகவானும் சேர்ந்திருந்தால் அந்நியபாஷை நீசபாஷை முதலான பலவித பாஷைகளும் ஜாதகன் கற்றுணர்ந்து சர்த்தனா யிருப்பதற்காகும்.
இலக்கினத்திற்கு சப்தமஸ்தானம், அஷ்டமஸ்தானத்தில் சூரியன் ஸ்தானத்தில் சந்திரனும் சந்திர ஸ்தானத்தில் சூரியனுமிருக்க தசமஸ்தாநாதிபதியும் இந்த இரண்டு பேருடனே சேர்ந்திருந்தால் அந்த ஜாதகன் பதினோறாம் வயதில் ஏறின தண்டிகை தனது ஆயுள் வரையிலும் ஏறி மகா ப்ரசங்கியா யிருப்பான். ஆனால், நடு வயதில் தன் மதத்தைவிட்டு அந்நிய மதத்தைச் சேர்ந்திருப்பான். இது பூலோகத்தார் சொல்லும் வாக்கியமாகும்.
இலக்கினதிற் குடையவனும் சஷ்டமாதிபதியும் ஆறெட்டு பனிரெண்டிலிருக்க இவர்களுடனே பாபக்கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஜன் மபரியந்தம் வியாதியஸ்தனாயிருப்பான்.
இலக்கினஸ்தானாதிபதி நீசனானாலும் சூரியபகவானுடனே சேர்ந்திருந்தாலும் நாலிலோருபகம் பலனயிருப்பதற்காகும். உதயலக்னத்தில் குருவிருக்க அவரைப்புதபகவான் பார்த்தாலும் சேர்ந்திருந்தாலும் அந்த ஜாதகனுடைய சீட்டை அரசர்கள் அன்பாக வாங்கிப் பார்த்துத் தமது சிரசிலே வைத்துக் கொள்வார்கள். மேஷவிருச்சிக ஜனன லக்கினமாக அந்த ஸ்தானத்தில் அங்காரக பகவா னிருந்தால் இராஜயோகமா யிருப்பதற்காகும். மிதுனங் கன்னி ஜனன லக்கினமாக அந்த ஸ்தானத்தில் புதபகவனிருந்தால் ஜாதகன் வித்யா சமர்த்தனாயிருப்பான். தனுசு, மீனம் ஜனன லக்கினமாக அந்த ஸ்தானத்தில் குருபகவனிருந்தால், வெகு பொருள் சேகரித்து யோகவானாயிருப்பான்
Similar Posts : சகோதர தோஷம் பரிகாரம், ஜாதகர் பேசும் மொழிகள் - ஜம்பு மகரிஷி ஜோதிடம், சகோதர தோஷ பரிகாரம், See Also:வாக்கு ஸ்தானம்