"வாரியார் சுவாமிகள் சொன்ன அரிசி
வாரியார் சொற்பொலிவு நடந்து கொண்டிருந்தது. பெரிய கூட்டம். முன் வரிசையில் இருந்த நாத்தீகர் ஒருவர் எழுந்து ""இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?"" என்ற வினாவினை எழுப்பினார். சம்பாஷனைகள் ஆரம்பமானது.
""உங்களது பிரதான உணவு என்ன? அதாவது அரசியா, கோதுமையா?""
""அரிசி!""
""அரிசியில் என்னென்ன பாதார்தங்கள் செய்யலாம்?""
""சாதம், பொங்கள், இட்லி, தோசை, ஆப்பம், பனியாரம், பிரியாணி, இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம். ஏன் இதை கேட்கிரீர்கள்?""
""இல்லை அரிசியை ஊரவைத்து தின்றுவிட்டு போகலாமே, அதையேன் மெனக்கெட்டு நேரத்தையும், பணத்தையும் செலவுசெய்து இத்தனை பதார்தங்கள் செய்ய வேண்டும்? அதற்காக கேட்டேன்""
""எப்படி சாமி வெறும் அரிசியை
ஊரவைத்து திண்பது?. நாவிற்கென்று
ருசி தேவைப்படுகிறதே""
""சாதாரண நாவிற்கே இத்தனை வகை ருசி தேவைப்படுகிறது, ஆனால் மூலப்பொருள் அரிசி ஒன்றுதான். அது போலத்தான் இறைவன் ஒருவனே இந்துக்கள் ஆன்மிக ருசிக்காக பல உருவங்களில் துதித்து வணங்கி மகிழ்கிறார்கள்.""
கேள்வி கேட்ட நாத்தீகர் மேடையேறி வாரியாரை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது.
"
Similar Posts :
பத்திரக்கிரியார்,
கற்றங்குடி மௌனகுரு சுவாமிகள்,
பாம்பன் சுவாமிகள்,
முத்துவடுகநாதர்,
அரிசியை பற்றி கிருபானந்தவாரியார், See Also:
கிருபானந்தவாரியார் சித்தர்கள்