Astrologers from Trichy

ஜோதிட துறையில் சிறந்த வித்வான், ஜோதிட வளர்ச்சிக்கு பல நூல்கள் எழுதிய ஆசிரியர், ஜோதிடத்திற்கு என்று தனி முத்திரை பதித்த சிறப்பு வாய்ந்த உயர்திரு திருச்சி கடக ராமசாமி ஐயா அவர்களின் இறப்பு ஜோதிடத் துறைக்கு பெரும் இழப்பு ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய Sithars Astrology யின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்

உயர்திரு கடகம் ராமசாமி ஜோதிட உலகின் கூகுள் சர்ச் இன்ஜின் நாடியைப் பற்றி கேட்டாலும்,கே.பியை பற்றி என்றாலும், பாரம்பரிய ஜோதிடம் என்றாலும். ஜெமினி ஜோதிட முறை என்றாலும் இவருக்கு ஆழ்ந்த புலமையும் ஞானமும் இருக்கும். அவருடைய ஞானத்திற்கு அவருடைய இல்ல நூலகமே சாட்சி. நூலகத்திற்கு நடுவில் ஒரு சிறிய இடத்தில் அவர் புத்தகமும் கையுமாக தான் எப்போதும் இருப்பார். எப்பொழுதும் ஆன்மீகம் ஆகட்டும் ஜோதிடம் ஆகட்டும் கற்கவேண்டும். கற்றுத் தெளிய வேண்டும் . உற்று உணரவேண்டும் நுட்பமாக அறிய வேண்டும் என்பதில் தணியாத ஆர்வம் உடையவர்ஜோதிட மேடைகளில் யார் என்ன தலைப்பில் பேசினாலும் அன்று மாலையே அது சம்பந்தமாக சந்தேகத்தை தனியாக தொலைபேசியில் கேட்டு தெளிவு பெறுவார். சாக்த விஷயங்கள் ஆனாலும் சைவநுணுக்கம் ஆனாலும் வைணவ நுட்பங்கள் எல்லாவற்றிலும் தெளிந்த ஞானமும் தேடலும் உள்ளவர். ஜோதிட உலகின் 40 ஆண்டுகால மிகப் பெரிய ஆளுமை ஜோதிடமேடைகளில் சிம்மக் குரலில் இவர் முழங்கும் ஜோதிட உரைவீச்சு இன்றும் பலர் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பழகுவதற்கு இனியவர். மிக பண்பாளர். இவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஜோதிட உலகிற்கு இது மிக சோதனைக்காலம் மிகப்பெரிய ஜோதிட ஆளுமைகள் எல்லாம் நம்மை விட்டு விலகுகிறது. இறைவா ஜோதிடர்களையும் ஜோதிட உலகத்தையும் உன் பேரருள் பெருங்கருணையினால் காத்து இரட்சி. உன் பொன்னார் திருவடியை தொழுகிறோம்.

கீழே உள்ள தகவல் உபயம் திரு Balaji Haasan
கடகம் ராமசாமி
இயற்பெயர் ராமசாமி
தமிழ்நாடு அரசு மின்சாரத்துறையில் உதவிப் பொறியாளராக அரசுப் பணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
வயது 61

25 வயதிலிருந்து ஜோதிடத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல ஜோதிடப் புத்தகங்களைப் படித்து ஜோதிடம் முறையாக பயின்று கடந்த 35 ஆண்டு காலமாக ஜோதிட சேவை பகுதி நேரமாக செய்து வந்தார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு முழுநேரமாக சமயபுரம் அருகே உள்ள அவரது வீட்டிலேயே ஜோதிடம் பார்த்து வந்தார். கே பி ( K.P ) ஜோதிட முறையில் நிறைய ஆய்வு‌ செய்து தொடர்ந்து மாத இதழ்களில் கட்டுரைகளாக எழுதி வந்தார் இவரது கட்டுரைகள் ஏராளம், நாடி ஜோதிடத்தில் அதிகமான ஆராய்ச்சி செய்து மாத இதழ்களில் நாடி ஜோதிட ரகசியங்கள் என்ற கட்டுரை ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து எழுதியவர்.
ஜெயமினி ஜோதிட முறையை அதிக ஈடுபாட்டுடன் மூல நூல்களை விளக்க நூல்களாக தனது கட்டுரைகள் வாயிலாக தொடர்ந்து எழுதியவர்.

தினத்தந்தியில் 7 ஆண்டுகளுக்கு மேலாக நட்சத்திரபலன் எழுதியவர். மாலை முரசு பத்திரிகையில் ஜோதிட ரகசியங்கள் என்கின்ற கட்டுரையில் திருமண அமைப்பு ஒருவருக்கு பணம் சேரும் அமைப்பு ஒருவருக்கு என்ன தொழில் அமையும் என்கின்ற மக்களுக்கு தேவையான பல்வேறு தலைப்புகளில் உதாரண ஜாதகத்துடன் மூன்றாண்டுகளுக்கு மேலாக எழுதியவர்.ஆரோமிரா பிரசுரத்தில்
1 ) நாடியின் பலன்கள்,
2) நாடி ஜோதிட ரகசியம்,
3 ) நாடி ஜோதிட தீபிகை என்கிற மூன்று நூல்களை எழுதியவர்.

மாத இதழ்களான திருவருள் சக்தி குருவருள் ஜோதிடம் ஜோதிட அரசு போன்ற பத்திரிகைகளில் அதிகமான வருடங்கள் தொடர்ந்து கட்டுரை எழுதியவர்.

முத்திரைகள் மூலம் சில நன்மைகள் அடையலாம் என்ற தலைப்புகளில் திருச்சியில் வகுப்புகள் நடத்தியவர்.
ஜோதிட வகுப்புகள் கடந்த 10 ஆண்டுகளாக
1) பிருகு நந்தி நாடி ஜோதிடம்,
2) K.P ஜோதிடத்தில் பலன் எடுக்கும் முறை,
3) பணப்புழக்கம் வரும் காலம்
4) தாந்திரீக ஜோதிடக்கலை
5) ஆன்மீக பரிகாரம்
என்கிற தலைப்பில் சிறப்பு வகுப்புகள் ஆக திருச்சியில் பலமுறை நடத்தியவர். இதுவரை 5000 பேருக்கு மேலாக கிராமங்களில் தனது வாடிக்கையாளர்களை கொண்டவர். அவர் வாங்கும் கட்டணம் :- வாடிக்கையாளர்களின் விருப்பம்.
இவ்வளவு கட்டண நிர்ணயம் என்று செய்யாதவர்.

ஜோதிட துறையில் திறமையானவர்கள் அதிலும் கைதேர்ந்தவர்கள் கொடுக்கும் தண்டனைக்கு பார்ப்பது அரிது ,
அப்படிப்பட்ட ஜோதிடர்களும் நெல்லை வசந்தன் அவர்களும் இவரும் ஒருவர் இருவருமே இந்த மாதம் இழந்துவிட்டனர்.
இவரும் இவரது தாயாரும் இவரது மனைவியும் சமயபுரம் அருகே உள்ள வீட்டில் வாழ்ந்து வந்தனர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உண்டு. மகளுக்கு திருமணம் சமீபத்தில் நடந்தது ஒரு பெயர்த்தி உண்டு. மகன் கனடாவில் பணிபுரிகிறார் இன்னும் திருமணம் நடக்கவில்லை. இந்தக் கோவிட் காரணமாக இன்று கூட அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. இறுதியாக இன்று மதியம் 2.30 மணி அளவில் திருச்சி ஓயா மாரி தகன மையத்தில் தகனம் செய்யப்படுகிறார்.
 

Attachments

  • kadagam ramasamy.jpg
    kadagam ramasamy.jpg
    31.4 KB · Views: 0
Last edited by a moderator:
Top