ஸ்ரீபரந்தாமனின் பன்னிரு நாமங்கள்

விஷ்ணு, கிருஷ்ணன், கண்ணன், ராமர் என்று பல பெயர்களை கொண்ட பரந்தாமன் உலகை பாதுகாத்து வருகிறார். அப்படிப்பட்ட பரந்தாமனின் பன்னிரு நாமங்களை பற்றி தெரியுமா? பரந்தாமனின் நாமங்களையும், அதன் விளக்கங்களை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

கேசவ - துன்பத்தை தீர்ப்பவன்.

நாராயண - உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்.

மாதவ - திருமகள் மணாளனாக இருப்பவன்.

கோவிந்த - பூமியை பிரளயத்திலிருந்து காத்தவன் (அ) பசுக்களை மேய்த்தவன்.

விஷ்ணு - அனைத்து பொருட்களிலும் நிறைந்திருப்பவன்.

மதுசூதனன்
புலன்களாகிய இந்திரியங்களை ஈர்ப்பவன் (அ) மது என்னும் அரக்கனை வென்றவன்.

த்ரிவிக்ரம் - மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்.

வாமன - குள்ளமான உருவம் உடையவன்.
ஸ்ரீதர - ஸ்ரீயான திருமகளை தரிப்பவன்.

ஹ்ருஷிகேச - தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்.

பத்மநாப - தனது நாபியிலே தாமரையை உடையவன்.

தாமோதர - உரலில் கயிற்றால் கட்டப்பட்ட அடையாளம் கொண்ட வயிறு உடையவன்.

ஓம் நமோ நாராயணாய
 
Top