யார் வாழும் காலத்திலேயே கடவுளை அறிந்து ஆனந்த மனநிலையை அடைந்து,பொருள், புகழ், அதிகாரம், புலனின்ப ஆசைகள் ஏதும் இல்லாத நிலையில் வாழ்ந்து, தான் கரு மூலம் கொண்டுவந்த முற்பிறவி பாவங்களையும், இப்பிறவியில் செய்த பாவங்களையும் புண்ணியம் செய்தோ துன்பங்ளாக அனுபவித்தோ போக்கிக் கொண்டவர்கள்தான் "ஆத்ம சாந்தி" அடைந்தவர்கள்! இவர்களே இறைவனடி சேர்ந்தவர்கள்! சீவகாலத்தில் முக்தி அடைந்தவர்கள்! இவர்களுடைய ஆன்மாவுக்கு இனி பிறவி இல்லை! இவர்களே பிறவிப் பெருங்கடல் நீந்தியவர்கள்!
வாழும்போது சாந்தியடையாத ஆத்மா மரணத்திற்குப்பின் சாந்தி அடையாது!
இந்த இறை நீதியை அறியாத மக்கள் தான் இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறார்கள்.
இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய இறந்தவரின் வாரிசுகள் தங்களுடைய ஆத்மாவை சாந்தியடையச்செய்ய சங்கல்பம் எடுத்துக்கொள்வதே "ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை"!
ஆத்ம சாந்தி என்றால் "மன அமைதி" என்று பொருள். வாழும்போது அடையாத அமைதியை மரணத்திற்குப்பின் அடைய முடியாது!யார் கடவுளை அறிந்து பிறர் துன்பம் போக்கும் தொண்டாற்றி வாழுகிறார்களோ அவர்களே "ஆனந்த வாழ்க்கையை" வாழுகிறார்கள். அவர்களுடைய ஆத்மா தான் வாழும்காலத்திலேயே சாந்தி அடையும்