சுக்கிரன்

சுக்கிரன் இல்லையேல் இந்த உலக இயக்கமே இல்லை! ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே!! என்ற *பழமொழியெல்லாம்* சுக்கிரனால் ஏற்பட்டிருக்கும் என்றே தோனுகிறது.

ஏனென்றால் *மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை* போன்ற மூன்றுக்கும் காரகத்துவம் பெற்று (பொதுவாக சுக்கிரன் இல்லையேல் ஆசைகள் இல்லை) செயல்படுவது சுக்கிரன் மட்டுமே.

எவ்வாறு எனில் அழகில்லாத ஆடவனுக்கும் *கட்டழகான* மனைவியைக் கொடுத்து மற்றவர்களையும் பொறாமை பட செய்வதிலும், கொடுப்பது என்றால் *கண்ணை* மூடிக்கொண்டு மகா கஞ்சனுக்கும் வாரி வழங்கி விடும் *வள்ளல் தன்மையும்* சுக்கிரனே உண்டு.

*அடிமுட்டாளையும்* அரச பீடத்தில் அமர்த்தி அழகுபார்க்கும் அதி அற்புத ஆற்றல் பெற்ற கிரகம் சுக்கிரனுக்கே உண்டு! அது போல கேது தொடர்பு பெற்ற சுக்கிரன் அரசனையும் *ஆண்டியாக்கும்* தன்மையும், செவ்வாய் ராகுவுடன் சேர்ந்த சுக்கிரன் பெண் போகத்தால் தன் *சொத்துக்களை* இழக்கும் தன்மையும் உருவாக்குவார் என்பது அனைவரும் அறிந்த அனுபவ உண்மை
 
Top