*பட்டினத்தாருக்கு பத்ரகிரி மகாராஜா அரண்மனையில் திருடிவிட்டார் என அபாண்டமாய் பழியைச் சுமத்தி கழுமரத்தில் ஏற்றி விட்டார்கள்*
*மரணத்தின் எல்லையில் நிறுத்தப்பட்டார். இன்னும் சில நிமிடத்தில் மரணம் வரப்போகிறது.*
*நமது பட்டினத்தார் கடைசியாகச் சொன்ன வசனம்தான் இந்திய யோகிகள் இறவாமை பெற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்தி, யோக தர்மத்தின் வேகத்தைக் காட்டுகிறது.*
*என்செயல் ஆவது* *யாதொன்றும் இல்லை*
*இனித் தெய்வமே உன்செயல் என்று*
*உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த*
*பின்செய்த தீவினை யாதொன்றும் இல்லை*
*பிறப்பதற்கு முன்செய்த* *தீவினையோ*
*இங்ஙனம் வந்து மூண்டதுவே*
*பட்டினத்தார் ஆழமான செய்தியை இங்கு முன்மொழிகிறார் "கடவுளுக்குப் புறம்பாக ஒரு செயல் திட்டம் இருக்கிறது' என்பதை பட்டினத்தார் முதலில் மறுக்கிறார்*
*கழுமரத்தில் என்னைக் கட்டி வைப்பதற்குக் காரணமும் கடவுள்தான்!' என அங்கீகரிக்கிறார். வரப்போகிற முடிவையும் ஏற்கிறார்*
*இந்த முடிவை மாற்றி என்னைக் காப்பாற்று!' என இறைவனிடம் வேண்டுதலும் செய்ய வில்லை மனதை வென்ற மகான் என்பதால்- "இந்த முடிவு தனக்குள் வாழும் எதிர்மறை மனத்தின் தீர்வா என்றால் அதுவும் இல்லை*
*எதனால் இந்த முடிவு வந்தது என்றால்*
*இந்தப் பிறவியில் செய்த பாவம் இல்லை. திட்டவட்ட மாகக் கூறுகிறேன்- போன பிறவியில் செய்த பாவமே காரணம். நடப்பது நடந்தேறட்டும்' என்று சமாதானம் கூறிவிட்டுச் சாந்தமாக அமர்ந்து விட்டார்*
*இங்கே பட்டினத்தாருக்குக் கொடுங்கோல் தண்டனை.கீழே கழுமரத்திற்குத் தீ மூட்டுகிறார்கள். கருகிச் சாக வேண்டும் என்று பெருத்த தீ மூட்டினார்கள். கழுமரம் எரிந்தது. நமது கருணை வள்ளல் தீயிலே குளித்தெழுந்து விட்டு திருமுக தரிசனம் தந்தார். அன்று மலர்ந்த செந்தாமரை பூப்போல வெளிவந்தார்*
*பூவுலகச் சூழ்ச்சி மனம் கொல்ல முடியாமல் ஒதுங்கியதால் பட்டினத்தார் உயிருடன் நின்றார். சூழ்ச்சி மனம் வணங்கியது*
*காரணம், இந்திய யோகிகள் மனத்தை வென்றவர்கள் அவர்களுக்கு அக மனமும் மரணம் தராது; புற மனமும்- அதாவது எதிரிகளின் மனமும் மரணம் தராது. தானே விரும்பாதவரை தனக்கு மரணம் வராத தகையாளர்கள். இந்த மரணமில்லாப் பெருவாழ்வு வித்தை இந்தியாவில் மட்டும் உள்ளது. தேர்ந்த குருமார்களிடம் கற்றுத் தேற வேண்டும்*
*உலக மதங்கள் அனைத்துமே மனதின் மரணத்தோடு வாழ்வை முடிக்கிறது. சித்தர்கள் நெறி மட்டுமே மனம் கடந்த பெருநிலையைக் காட்டி நிற்கிறது*
*மனதை நம்பிப் பயணம் செய்யும்வரை மனம் மரணம்வரை அழைத்துப் போகும்*
*மனம் கடந்து பயணம் செய்யப் பழகினால் மரண அவதிப்படாமல் தண்ணீரில் புளியைக் கரைப்பதுபோல இந்த உடலை கடவுள் என்னும் சோதியில் கரைத்துவிட முடியும்*
*எனவே மரணம் என்பது மனத்தின் தீர்வாக முடிந்தால் அது* *நாத்திகம் மரணம் என்பது ஆன்மாவின் தீர்வாக முடிந்தால்*
*அதுவே ஆன்மிகம் ஆகும்*
*கவனம் வைத்தால் மனதில் கலகம் ஒழியும். மயானத்திற்குக் கொண்டு போகும் மனதைத் தியானத்தை நோக்கித் திருப்பிவிடலாம்*