காஞ்சிபுரம் அருகிலுள்ள திருமாகறல், மாகறலீசரை "பக்தி' என்னும் உடும்புப்பிடியாக பிடித்துக் கொண்டால் போதும். கிரகதோஷம் நீங்கி நினைத்ததை சாதிக்கலாம்.
ஏனெனில், இந்த சிவனே உடும்பு வடிவ சுயம்புலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
பூலோகத்தில் சிவபூஜை செய்த பிரம்மா, பலாமரம் ஒன்றை நட்டார். தினமும் பழம் தரும் அதிசயமரம் அது. அதைக் கண்டு வியந்த ராஜேந்திர சோழன், அந்தப் பழத்தை தினமும் தலைச்சுமையாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் சேர்க்கும்படி உத்தரவிட்டான். நடராஜருக்கு நைவேத்யமாகி மன்னனுக்கு அனுப்புவது வழக்கமானது. ஒருநாள் அந்தண சிறுவன் ஒருவனின் முறை வந்தது. "பழத்தைக் கொண்டு செல்ல பணியாளை நியமிக்கலாமே' என எண்ணிய அவன், ஒரு தந்திரம் செய்தான். ஊர் மக்களிடம், ""நான் சிறுவன் என்பதால் பழத்தை சுமப்பது சிரமம். நீங்கள் எல்லோரும் பழத்தை கொண்டு செல்லுங்கள். நான் உங்கள் வீடுகளை பார்த்து கொள்கிறேன்,'' என்றான். அனைவரும் சிதம்பரம் புறப்பட்டனர். அந்த மரத்தை அழித்து விட்டால், பழம் சுமக்கும் தொல்லை மக்களுக்கு இனி இருக்காது எனக் கருதி அதை எரித்து விட்டான்.
மறுநாள் பழம் சிதம்பரம் வராததால் மன்னன் விசாரித்தான். அவனிடம் சிறுவன்,""பழத்தை கொண்டு வருவதற்கு எந்த வசதியும் செய்து தராததால் மரத்தை எரித்து விட்டேன்,'' என்றான். தவறுக்கு தண்டனையாக சிறுவனை நாடு கடத்த உத்தரவிட்டான் மன்னன். சிறுவனை விட்டுத் திரும்பும் வழியில், ஓரிடத்தில் பொன்னிற உடும்பு தென்பட்டது. அதை பிடிக்க முயன்றபோது, புற்றுக்குள் மறைந்தது. புற்றைத் தோண்டிய போது உடும்பின் வால் மீது கோடரி பட்டு ரத்தம் வந்தது. அப்போது வானில் அசரீரி ஒலித்தது.
""மன்னா! ஒரு சிறுவனால் சுமக்க முடியாது என்று தெரிந்தும், பழத்தை நீணட தூரம் சுமக்க உத்தரவிட்டாய். இது தவறல்லவா! இந்த பாவம் தீர இங்கே கோயில் கட்டு. இப்போது, உன் கண் முன் உடும்பாக தோன்றியது நானே (சிவனே)'' என்று உத்தர விட்டது. மன்னனும் கோயில் கட்டினான். இன்றும் கூட உடும்பின் வால் அளவு சிவலிங்கமே சுயம்புமூர்த்தியாக கோயில் உள்ளது.
மயிலுக்கு பதிலாக யானையில் அமர்ந்த முருகனை இங்கே காணலாம். வேறெங்கும் காணமுடியாத சிறப்பு இது.