விஷ்ணு ஸஹஸ்ரநாமக்கதைகள்!!
நல்ல ஆரோக்கியத்தையும், நீங்காத செல்வத்தையும், மன நிம்மதியையும் தரவல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.
அந்த உடலுக்கு ஏற்பட்ட நோய்கள் மட்டுமின்றி ஆத்மாவைப் பீடித்துப் படுத்தும் நோயாகிய பிறவிப் பிணியையும் போக்க வல்ல மருந்து விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.
அந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலுள்ள
1000 திருநாமங்களின் பொருளை எளிய கதைகள் மூலம் உணரலாம், வாருங்கள்.
268:வாக்மினே நமஹ (Vaagminey namaha)
பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்த வித்வான்களை எல்லாம் திருவரங்கத்துக்கு அழைத்து வந்த ராமாநுஜர்,
வைணவ நெறியை வளர்க்கும் பணியில் அவர்களை ஈடுபடுத்தினார்.
அந்த வகையில், கர்நாடகத்தில் வாழ்ந்து வந்த மாதவாச்சாரியார் என்ற வேதாந்தியை வைணவ நெறிக்குக் கொண்டு
வர விரும்பினார் ராமாநுஜர்.
ஆனால் அவரது வாழ்நாளில் அந்த விருப்பம் நிறைவேறவில்லை.
தம் இறுதி நாட்களில் கூரத்தாழ்வானின் மகனான பராசர பட்டரை அழைத்த ராமாநுஜர்,“கர்நாடகாவில் உள்ள வேதாந்தியை வாதம் செய்து வென்று திருவரங்கத்துக்கு அழைத்துவர வேண்டும்!
ஆனால் அது எளிதான காரியமல்ல!
நல்வார்த்தைகளுக்கு எல்லாம் அதிபதியாய்த் திகழும் அரங்கனின் அருள்பெற்ற
ஒருவர் தான் வேதாந்தியை வாதில் வெல்ல இயலும்.
அந்த அரங்கனின் அருள் உம்மிடம் இருப்பதால் இப்பொறுப்பை உம்மிடம் ஒப்படைக்கிறேன்!” என்று அவரிடம் கூறினார்.
ராமாநுஜரின் நியமனத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன், வேதாந்தியைச் சந்தித்து வாதம் செய்வதற்காகக்
கர்நாடகத்தை நோக்கிப் பல்லக்கில் புறப்பட்டார் பராசர பட்டர்.
வேதாந்தியின் வீட்டுக்கு நேரே சென்றால்,
அவரது சீடர்கள் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், வேதாந்தியின் அன்னதானக் கூடத்துக்குச் சென்ற பட்டர்,அங்கே பந்தியில் அமராமல் ஓரமாக நின்றுகொண்டிருந்தார்.
அன்னதானத்தைப் பார்வையிட வந்த வேதாந்தி, பட்டர் தனியே நிற்பதைப் பார்த்து, “என்ன வேண்டும்?” என்று கேட்க,
“பிச்சை வேண்டும்!” என்றார் பட்டர்.
“பந்தியில் அமருங்கள்!”
என்று வேதாந்தி சொல்ல,
“உணவுப் பிச்சை இல்லை! வாதப் பிச்சை வேண்டும்!” என்றார் பட்டர்.
“ஆறு விதமான சமயங்களைக் கற்று அவற்றை ஆசனமாக்கி அமர்ந்தவனான என்னை எதிர்த்து வாதம் செய்ய வந்துள்ளீரா? சரி, வாதிடுங்கள் பார்க்கலாம்!” என்று சொல்லி வாதத்துக்கு இசைந்தார் வேதாந்தி.
ஒன்பது நாட்கள் கம்பீரமாக இருவரும் வாதம் செய்த நிலையில், பத்தாம் நாளன்று திருமங்கை ஆழ்வார் அருளிய
பிரபந்தமான திருநெடுந்தாண்டகத்தில் உள்ள பாசுரங்களை மேற்கோள் காட்டி, பராசர பட்டர் வாதம் செய்த அளவிலே,
அவருடைய வாதத்துக்குத் தோற்றார் வேதாந்தி.
பட்டரைப் பார்த்துக் கைகூப்பி,
“அரங்கன் உறங்கும் பெருமாள் என்றால் நீங்கள் உலவும் பெருமாள்.
உமக்கும் அவருக்கும் வேறுபாடில்லை!” என்று
சொல்லி வணங்கிய வேதாந்தி, பட்டருக்குச் சீடரானார்.
(பின்னாளில் அவர் துறவறம் மேற்கொண்டு நஞ்ஜீயர் என்று பெயர் பெற்றார்.)
மார்கழி மாதப் பகல்பத்து, இராப்பத்து உற்சவங்கள் திருவரங்கத்தில் நடைபெறும் சமயம் ஆதலால்
பராசர பட்டர் விரைந்து திருவரங்கத்துக்குத் திரும்பினார்.
அன்று மார்கழி மாத அமாவாசை.
அன்று மாலை அரங்கனைத் தரிசிக்கச் சென்ற பட்டரைப் பார்த்து,“ராமாநுஜரின் கட்டளையை நிறைவேற்றி விட்டீர்களா?” என்று கேட்டார் திருவரங்கநாதன்.
“அரங்கனே! உனது திருவடிகளில் வேதாந்தியைக் கொண்டு வந்து சேர்த்து ராமாநுஜரின் கட்டளையை
நிறைவேற்றி விட்டேன்!” என்று விடையளித்தார் பட்டர்.
“உங்கள் வாதத் திறமையை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை!” என்று அரங்கன் கூற,
பட்டரோ, “எம்பெருமானே! வேதங்களாகிய நல்வார்த்தைகளால் போற்றப்படுபவன் நீ!
உன்னைப் போற்றும் அவ்வேதங்களின் கருத்தையே எளிய தமிழில் திருநெடுந்தாண்டகம் என்னும்
முப்பது பாசுரங்களாகப் பாடி உன் மேன்மைகளைப் போற்றினார் திருமங்கையாழ்வார்.
அந்தத் திருநெடுந்தாண்டகப் பாசுரங்களாகிய நல்வார்த்தைகளைச் சொல்லித் தான் அடியேன் வேதாந்தியை வாதில் வென்றேன்.
நல்வார்த்தைகளை உடையவனாக நீயே இருக்கிறாய்!
அவ்வார்த்தைகளை நீயே அடியேனுக்கும் அருளி அடியேனுக்கு
வாதில் வெற்றியைப் பெற்றுத் தந்துவிட்டாய்!” என்று கூறித் திருநெடுந்தாண்டகத்தை அரங்கன் முன்னே பாடினார்.
அதனால் தான் இன்றும் மார்கழி மாத அமாவாசை அன்று அரங்கன் முன்னே
திருநெடுந்தாண்டகத்தை ஓதும் நிகழ்ச்சி வருடந்தோறும் நடைபெறுகிறது.
வடமொழி மற்றும் தமிழ் வேதங்களில் உள்ள நல்வார்த்தைகளால் போற்றப்படுபவராகவும்,
நல்வார்த்தைகளைத் தன்னகத்தே உடையவராகவும், அந்நல்வார்த்தைகளை அடியார்களுக்கு அருளி
அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத்தருபவராகவும் திருமால் திகழ்வதால் அவர் ‘வாக்மீ’ என்றழைக்கப்படுகிறார்.
‘வாக்’ என்பது நல்வார்த்தைகளைக் குறிக்கும்.
அதை உடையவர் ‘வாக்மீ’. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 268-வது திருநாமம்.
வாக்மினே நமஹ
என்று தினமும் சொல்லி
வரும் அன்பர்களுக்கு நல்ல பேச்சாற்றலைத் திருமால் அருள்வார்.